Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
10 Nov 2024 11:58 AM GMT
Mr.V.Ramachandran | கவுண்டம்பாளையம்
#51210

தேங்கும் தண்ணீரால் அவதி

தண்ணீர்

கோவையை அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி புதுப்பாளையம் பகுதியில் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணை நிரம்பி கழிவுநீருடன் கலந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இந்த தண்ணீர் சாலையில் தேங்கி வருகிறது. இதனால் சாலை பழுதாகி வருகிறது. மேலும் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே அங்கு கழிவுநீர் கலப்பதை தடுப்பதோடு தண்ணீர் மாற்று வழியில் வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 11:57 AM GMT
Mr.V.Ramachandran | தொண்டாமுத்தூர்
#51209

பஸ் சேவை தொடங்கப்படுமா?

போக்குவரத்து

வடவள்ளி அண்ணா நகரில் இருந்து கவுண்டம்பாளையம் வழியாக குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதிக்கு அரசு பஸ் ஒன்று இயக்கப்பட்டது. இந்த பஸ் சேவை உக்கடம் ஆத்துபாலம் மேம்பால பணி நடைபெற்றதால் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது பணி முடிந்து மேம்பாலம் திறக்கப்பட்டுவிட்டது. ஆனால் பஸ் சேவை மீண்டும் தொடங்கப்படவில்லை. எனவே நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் தொடங்க அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உரிய நவடடிக்ைக எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 11:57 AM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#51208

வெட்டப்பட்ட மரக்கிளைகளால் இடையூறு

போக்குவரத்து

கோவை ரத்தினபுரி அருள் நகர் காந்திஜி சாைலயில் மின் பராமரிப்பு பணியையொட்டி மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன. அந்த மரக்கிளைகளை சாலையில் அப்படியே போட்டுவிட்டு சென்றுவிட்டனர். நீண்ட் நாட்கள் ஆகியும் அகற்றவில்லை. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் உரிய நடவடிக்கை இல்லை. இதன் காரணமாக அந்த வழியே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே அந்த மரக்கிளைகளை உடடினயாக அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 11:56 AM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் தெற்கு
#51207

சாலையில் ஆபத்தான குழி

சாலை

கோவை திருச்சி ரோடு தனியார் திருமண மண்டபம் அருகே பஸ் நிறுத்தம் ஒன்று உள்ளது. இதன் அருகில் உள்ள சாலையில் ஆபத்தான குழி இருக்கிறது. அந்த குழியில் அந்த வழியாக இரவில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைந்து செல்கின்றனர். மேலும் அதில் ஏறி, இறங்கும் வாகனங்களும் பழுதாகி வருகின்றன. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே அந்த குழியை உடனடியாக மூட அதிகாரிகள் உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 11:56 AM GMT
Mr.V.Ramachandran | கிணத்துக்கடவு
#51206

அடிப்படை வசதிகள் வேண்டும்

சாலை

கோவை மலுமிச்சம்பட்டி மதுரைவீரன் கோவில் வீதியில் எங்கு பார்த்தாலும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. சாலைகள் பெயர்ந்து கிடக்கிறது. அதில் மழைநீர் தேங்கி வருகிறது. மேலும் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. தெருவிளக்குகள் ஒளிருவது இல்லை. இதன் காரணமாக பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி கொடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Nov 2024 12:37 PM GMT
Mr.V.Ramachandran | குன்னூர்
#51078

போக்குவரத்துக்கு இடையூறு

போக்குவரத்து

கோத்தகிரி நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் பொது இடங்களில் உள்ள சாலையோரங்களில் ஏராளமான வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் அங்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்துகளும் நடைபெற்று வருகின்றன. அத்துடன் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே தாறுமாறாக வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Nov 2024 12:36 PM GMT
Mr.V.Ramachandran | சூலூர்
#51077

குண்டும், குழியுமான சாலை(

சாலை

கோவை நீலாம்பூரில் இருந்து செடரையாம்பாளையம் செல்லும் சாலையில் கல்லூரிகள், பள்ளிகள், குடியிருப்புகள் உள்ளன. இந்த சாலை மிகவும் குண்டும், குழியுமாக கிடக்கிறது. குறிப்பாக ஆபத்தான குழிகள் ஏராளம் உள்ளன. தற்போது அந்த குழிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்பு ஏற்படும் முன்பு, அந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Nov 2024 12:35 PM GMT
Mr.V.Ramachandran | கவுண்டம்பாளையம்
#51075

வாகன ஓட்டிகள் அவதி

போக்குவரத்து

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் துடியலூர் சந்தை சந்திப்பு பகுதியில் வாகனங்கள் திரும்பி செல்ல யூ-டர்ன் முறை பின்பற்றப்படுகிறது. இதனால் கனரக வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் வாகன விபத்துகளும் நடைபெறுகிறது. குறிப்பாக கனரக வாகனங்களுக்கு நடுவே இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி கொள்ளும் நிலை காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே அங்கு யூ-டர்ன் முறையை அகற்றி பழைய சிக்னல் முறையே தொடர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Nov 2024 12:34 PM GMT
Mr.V.Ramachandran | சிங்காநல்லூர்
#51074

குவிந்து கிடக்கும் குப்பைகள்

குப்பை

சிங்காநல்லூர் டி.என்.எச்.பி. காலனி நேதாஜி புரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அந்த குப்பைகளை தெருநாய்கள் சிதறடித்து போடுகின்றன. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால், அந்த குப்பை கொட்டப்பட்டு உள்ள பகுதியில் இருந்து கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Nov 2024 12:34 PM GMT
Mr.V.Ramachandran | கவுண்டம்பாளையம்
#51073

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

சாலை

கோவையை அடுத்த வடமதுரையில் இருந்து பன்னிமடை செல்லும் சாலையானது மிகவும் குறுகலானது. இந்த சாலையில் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் சாலை மேலும் குறுகி வருகிறது. மேலும் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி குப்பைகள் கொட்டப்படுவதையும் தடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Oct 2024 11:37 AM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#50873

சாலையில் குழிகள்

சாலை

கோவை பாலசுந்தரம் சாலையில் அண்ணா சிலை சிக்னல் பகுதியில் இருந்து ஆர்.டி.ஓ. அலுவலகம் வரை பலத்த மழையால் ராட்சத குழிகள் ஏற்பட்டு உள்ளன. அந்த குழிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இரவில் குழி இருப்பதே தெரிவது இல்லை. இதை அறியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே அந்த குழிகளை உடனடியாக மூட வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Oct 2024 11:38 AM GMT
Mr.V.Ramachandran | கிணத்துக்கடவு
#50872

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட நெ.10 முத்தூர் ஊராட்சி சங்கராயபுரம் பிரிவில் இருந்து சங்கராயபுரம் வரை உள்ள தார்சாலையானது மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. தற்போது மழை பெய்து வருவதால் அந்த குழிகளில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick