Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 Dec 2024 12:19 PM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#51962

பிளாஸ்டிக் கழிவுகள்

குப்பை

கோவையை அடுத்த நீலிக்கோணாம்பாளையத்தில் பஸ் நிலையம், பொது கழிப்பிடம், ரேஷன் கடைக்கு செல்லும் சாலையில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்பட குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றை தெருநாய்கள் நாலாபுறமும் சிறடித்து போட்டு உள்ளன. இதனால் அந்த பகுதியே குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. எனவே அங்கு குவிந்துள்ள குப்பைகளை அகற்றவும், மீண்டும் குப்பைகள் கொட்டாமல் தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Dec 2024 12:18 PM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#51961

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

சரவணம்பட்டியில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அங்கு காளப்பட்டி பிரிவில் போலீஸ் சோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடியை விசுவாசபுரம் பகுதிக்கு மாற்ற வேண்டும். அப்போதுதான் அங்கு நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும். இதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024 12:42 PM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#51790

விஷ ஜந்துகள் நடமாட்டம்

மற்றவை

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கோட்டப்பாடியில் இருந்து மழவன்சேரம்பாடி வரை நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலையின் இருபுறமும் முட்புதர்கள் அடர்ந்து காடு போல வளர்ந்து உள்ளன. அங்கு காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நின்றாலும் தெரிவது இல்லை. மேலும் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாட்டமும் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லவே பொதுமக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. எனவே அங்கு அடர்ந்து வளர்ந்துள்ள முட்புதர்களை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024 12:42 PM GMT
Mr.V.Ramachandran | தொண்டாமுத்தூர்
#51789

தற்காலிக கழிப்பிடங்கள் வேண்டும்

மற்றவை

கோவையை அடுத்த மருதமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. இதன் காரணமாக அடிவாரத்தில் பக்தர்கள் கூட்டம் களைகட்டுகிறது. ஆனால் அங்கு போதிய கழிப்பிட வசதி இல்லை. இதனால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே தற்காலிக கழிப்பிடங்கள் அமைத்து கொடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024 12:41 PM GMT
Mr.V.Ramachandran | தொண்டாமுத்தூர்
#51788

புதர்கள் அகற்றப்படுமா?

மற்றவை

கோவை வேடப்பட்டி சாலையில் புதிதாக ஸ்மார்ட் சிட்டி குளம் உருவாக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இங்கிருந்த குளத்தை அழகுபடுத்தி தற்போது அதன் கரையில் நடைபாதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நடைபாதையின் இருபுறமும் புற்கள் அதிகளவில் வளர்ந்து நடப்பதற்கு இடையூறாக உள்ளது. இதனால் அங்கு நடந்து செல்பவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். மேலும் விஷ ஜந்துகள் நடமாட்டமும் உள்ளது. எனவே கோவை மாநகராட்சி அதிகாரிகள், நடைபாதையில் வளர்ந்துள்ள புற்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024 12:41 PM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் தெற்கு
#51787

வாகன ஓட்டிகள் அவதி

சாலை

கோவை சாய்பாபா காலனியில் குடிநீர் திட்டத்திற்காக பிரதான சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. அங்கு குழாய் பொருத்தும் பணி முடிவடைந்து, அந்த குழிகளின் மீது மண் போட்டு மூடப்பட்டு வருகிறது. தற்போது மழை பெய்து வருவதால், மண் போடப்பட்ட பகுதி சேறும், சகதியுமாக மாறி வருகிறது. இதனால் அந்த சாலையில் வாகன ஓட்டிகள் செல்வதற்கு கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் வலுக்கி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே உடனடியாக அந்த மண் சாலை மீது தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024 12:40 PM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#51786

குண்டும், குழியுமான சாலை

சாலை

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட புஞ்சைகொல்லியில் இருந்து அரசு தேயிலை தோட்டம்(டேன்டீ) செல்லும் சாலையோர பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் சாலையோரத்தில் தடுப்புச்சுவரும் இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே அங்குள்ள சாலையை சீரமைப்பதோடு தடுப்புச்சுவர் கட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024 12:40 PM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#51785

ஆபத்தான மரம்

மற்றவை

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் 5-ம் நெம்பர் விரிவு பகுதியில் ஆபத்தான நிலையில் மரம் ஒன்று வளைந்து நிற்கிறது. இந்த மரம் சூறாவளி காற்று வீசும்போது, எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகிறார்கள். எனவே அந்த மரத்தை உடனடியாக வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Nov 2024 12:39 PM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#51574

உப்பு தண்ணீர் வரவில்லை

தண்ணீர்

கோவை மாநகராட்சி 26-வது வார்டு பீளமேடு நேரு நகர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக உப்பு தண்ணீர் வரவில்லை. இதன் காரணமாக அங்கு வசித்து வரும் பொதுமக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தண்ணீருக்காக அக்கம்பக்கத்து பகுதிகளுக்கு அலைந்து திரியும் நிலை உள்ளது. எனவே உடனடியாக உப்பு தண்ணீர் வழங்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Nov 2024 12:38 PM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#51573

புதர் செடிகள் அகற்றப்படுமா?

சாலை

பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே மூலக்கடையில் இருந்து கையுன்னி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் இருபுறமும் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. அவற்றின் கிளைகள் சாலை வரை நீண்டு வளர்ந்து உள்ளன. அவை அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன. மேலும் வனவிலங்குகள் பதுங்கி இருந்தால் கூட தெரியாது. இதனால் வாகன ஓட்டிகள் தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உள்ளது. எனவே அங்குள்ள புதர் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Nov 2024 12:38 PM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#51572

ஆபத்தான குழி

சாலை

கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள மாநகராட்சி அலுவலகம் அருகில் சாலையோரத்தில் ஆபத்தான குழி ஒன்று உள்ளதுத. இந்த குழி தோண்டப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் இருக்கும். இந்த குழியை எதற்காக தோண்டினார்கள் என்பதே தெரியவில்லை. அதை மூடவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த வழியாக சென்று வருபவர்கள் குழியில் கால் தவறி விழுந்து காயம் அடைந்து செல்லும் நிலை உள்ளது. எனவே அந்த குழியை உடனடியாக மூட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Nov 2024 12:37 PM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#51571

சுகாதார சீர்கேடு

போக்குவரத்து

பந்தலூர் பழைய பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் பலரும் படுத்து ஓய்வெடுக்கின்றனர். நீண்ட நாட்களாக அங்கேயே தங்கி ஓய்வெடுக்கும் சிலர், அசுத்தம் செய்து செல்கின்றனர். இதனால் அங்கு வந்து செல்லும் பயணிகள் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. அத்துடன் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. எனவே அங்கு சுகாதாரத்தை பேண சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick