Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 Dec 2024 12:00 PM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#52354

போக்குவரத்துக்கு இடையூறு

மற்றவை

கோவை காந்திபுரம் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து ஆர்.டி.ஓ. அலுவலகம் செல்லும் பாலசுந்தரம் சாலையோரத்தில் நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையோரத்தில் உள்ள மரங்களின் கிளைகள் மின்கம்பிகள் மீது உரசாமல் இருக்க வெட்டப்பட்டன. ஆனால் வெட்டப்பட்ட மரக்கிளைகள் முறையாக அப்புறப்படுத்தப்படாமல் நடைபாதையிலேயே போட்டு வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு நடந்து செல்வோர் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக கிடக்கும் மரக்கிளைகளை...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Dec 2024 11:56 AM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#52353

குண்டும், குழியுமான சாலை

சாலை

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட படச்சேரியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பஸ் நிறுத்த பகுதிக்கு செல்லும் சாலையானது மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அதுவும் செங்குத்தாக இருக்கிறது. அதில் வாகனங்களை இயக்க முடிவது இல்லை. மேலும் பொதுமக்கள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Dec 2024 11:56 AM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#52352

குடிநீர் வசதி இல்லை

தண்ணீர்

பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு தேயிலை தோட்ட(ரேஞ்ச்-1) பகுதியில் போதிய குடிநீர் வசதி இல்லை. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் நீண்ட தூரத்துக்கு அலைந்து திரிய வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக அவர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அங்கு போதிய குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024 11:50 AM GMT
Mr.V.Ramachandran | சிங்காநல்லூர்
#52141

புதர் செடிகள் அகற்றப்படுமா?

பூங்கா

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 33-வது வார்டு எஸ்.கே.ஆர். நகரில் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இதன் காரணமாக அங்கு பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாட்டம் காணப்படுகிறது. அந்த பூங்காவுக்கு தினமும் சிறுவர்கள், முதியவர்கள் சென்று வருகின்றனர். இதனால் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே அங்கு அடர்ந்து வளர்ந்துள்ள புதர் செடிகளை வெட்டி அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024 11:49 AM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#52140

கூடுதல் போலீசார் வேண்டும்

மற்றவை

கோவை சத்தி சாலையில் கணபதி முதல் சரவணம்பட்டி வரை அத்திப்பாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், துடியலூர் பிரிவு, கீரணத்தம் ஐ.டி. பார்க் பிரிவு ஆகிய இடங்களில் வாகன போக்குவரத்து அதிகளவில் இருக்கும். இங்குள்ள சிக்னல்களில் ஒரேயொரு போலீஸ்காரர் மட்டுமே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுகிறார். போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் பகுதி என்பதால், அங்கு கூடுதல் போலீசரை பணியமர்த்த வேண்டும். அப்போதுதான் போக்குவரத்து நெரிசல் குறையும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024 11:49 AM GMT
Mr.V.Ramachandran | தொண்டாமுத்தூர்
#52138

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

போக்குவரத்து

கோவை சிறுவாணி மெயின்ரோடு மாதம்பட்டி அருகே சென்னனூர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் காலையில் மாதம்பட்டியில் இருந்து பள்ளிக்கு செல்லவும், மாலையில் பள்ளியில் இருந்து மாதம்பட்டி வரவும் போதிய பஸ் வசதி இல்லை. இதனால் மாணவ-மாணவிகள் கடும் அவதிப்படுகிறார்கள். சில நேரங்களில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்றால், அதற்கு செல்ல முடியாமல் போகிறது. எனவே மாதம்பட்டியில் இருந்து பள்ளிக்கு சென்று வர கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024 11:48 AM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#52137

உடைந்து கிடக்கும் நடைபாதை

போக்குவரத்து

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட புஞ்சைவயல் விநாயகர் கோவிலில் இருந்து நெல்லியாளம் டேன்டீ வழியாக ஒளிமடா பகுதிக்கு நடைபாதை செல்கிறது. இந்த நடைபாதை மிகவும் உடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே அந்த நடைபாதையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024 11:48 AM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#52136

பொது கழிப்பிடம் வேண்டும்

மற்றவை

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட நம்பியார்குன்னு, மதுவந்தால் ஆகிய பகுதிகள் தமிழக-கேரள எல்லையில் உள்ளன. இந்த பகுதிகளுக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் எங்குமே பொது கழிப்பிடம் கிடையாது. இதனால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை உள்ளது. ஆனாலும் பெண்கள் அவதிப்பட நேரிடுகிறது. எனவே அங்கு பொது கழிப்பிடம் அமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Dec 2024 12:23 PM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#51966

சாலையில் குழி

சாலை

கோவை கணபதி ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி பெயர்ந்து குழி ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் வாகனங்களும் பழுதாகி வருகிறது. அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Dec 2024 12:21 PM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#51965

மூடி கிடக்கும் கழிப்பிடம்

கழிவுநீர்

பந்தலூர் தாலுகா உப்பட்டியில் பயணிகள் நிழற்குடை அருகே அத்திகுன்னா செல்லும் சாலையோரத்தில் பொது கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடம் மூடி கிடப்பதால் அங்கு வந்து செல்பவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க இடம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே அந்த கழிப்பிடத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு விட நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Dec 2024 12:20 PM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#51964

தவறி விழும் பாதசாரிகள்

சாலை

கோவை சிவானந்தாபுரம் வடக்கு விநாயகபுரம் பகுதியில் உள்ள கிருஷ்ணகவுண்டர் நகரில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து வீடுகளில் புகுந்தது. இதனால் அங்கு மாநகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு குழி அமைக்கப்பட்டது. ஆனால் அந்த குழியை முறையாக மூடாமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் அந்த குழியில் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இனிமேலாவது அந்த குழியை முறையாக மூட நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Dec 2024 12:20 PM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#51963

கால்வாயில் அடைப்பு

கழிவுநீர்

பந்தலூரில் அம்மா உணவகத்திற்கு செல்லும் நடைபாதையின் அருகே உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக சென்று வருபவர்கள் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. எனவே அந்த கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick