Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 July 2022 5:08 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#2478

எரியாத கோபுர விளக்கு

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம், பி.செட்டி அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பெல்ரம்பட்டி பிரிவு சாலையில் உயர்மின் கோபுர விளக்கு பல மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அதிக விபத்து ஏற்பட்டு வருகிறது. உயர்மின் கோபுரத்தில் உள்ள மின்விளக்கை சரிசெய்து தர வேண்டும். -முருகன், பெல்ரம்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 5:03 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#2476

அடிப்படை வசதி தேவை

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த வட்டுவனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது எரிமலை மலைக்கிராமம். இந்த கிராமத்திற்கு சாலை, குடிநீர், சாக்கடை கால்வாய், தெருவிளக்கு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் கிராம மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே மலைக்கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். -மாதையன், எரிமலை, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 6:10 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#2325

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

மற்றவை

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த வெள்ளார் கிராமம் பொம்மசமுத்திரம் தெருவில் கிணறு உள்ளது. அந்த கிணற்றை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு மனு அளித்தும் பலன் இல்லை. பொதுமக்கள் பயன்பாட்டுக்கான கிணற்றை மீட்டு பராமரித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். -ஊர்பொதுமக்கள், வெள்ளார், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 6:09 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#2324

அடிப்படை வசதிகள் வேண்டும்

மற்றவை

சேலம் அழகாபுரம் அடுத்த மேவராயன்காடு கல்லுமேடு பகுதியில் 100 வீடுகள் உள்ளன. இந்தநிலையில் அந்த பகுதிக்கு சாலை மற்றும் குடிநீர் என எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா? -மோகன்ராஜ், கல்லுமேடு, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 6:07 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#2322

புதருக்குள் மயானம்

மற்றவை

சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்த சிங்கிரிப்பட்டி ஊராட்சியில் அய்யம்புதூர் கிராமத்திற்கு பொது மயானம் உள்ளது. அந்த மயானம் பராமரிப்பு இன்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. மேலும் மயானத்திற்கு சுற்றுச்சுவர், சாலை வசதி இல்லாமல் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. எனவே நடவடிக்கை எடுத்து மயானத்திற்கு சுற்றுச்சுவர், சாலை வசதி ஏற்படுத்தி, செடி கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -சென்னகிருஷ்ணன், சிங்கிரிப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 6:06 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#2321

நிழற்கூடம் அமைக்கப்படுமா?

மற்றவை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பேளுக்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் சுமார் 20-க்கும் கடைகள் இருந்தன. அந்த கடைகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பஸ் நிலையம் அமைப்பதாக தெரிவித்து அகற்றினர். ஆனால் அதற்கான பணிகள் தாமதமாகி வருகிறது. மேலும் அங்கு வந்து பிற ஊர்களுக்கு பஸ்சுக்காக செல்பவர்கள் நிற்கும்போது வெயில் மற்றும் மழையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அங்கு விரைவாக நிழற்கூடம் அமைக்க வேண்டும். -கிருஷ்ணா, சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 6:05 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#2320

பள்ளி முன்பு தேங்கும் கழிவுநீர்

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்த வெள்ளை பிள்ளையார் கோவிலில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளி எதிரே உள்ள சாக்கடை கால்வாயில் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு சாக்கடை கழிவுநீர் செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். -சந்திரன், வெள்ளை பிள்ளையார் கோவில், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 6:03 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#2319

இடிந்து விழுந்த பாலத்தின் சுற்றுச்சுவர்

இடிந்து விழுந்த பாலத்தின் சுற்றுச்சுவர்மற்றவை

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் இருந்து அனிச்சம்பாளையம் செல்லும் சாலையில் ராஜா வாய்க்கால் பாலம் உள்ளது. இவ்வழியாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு செல்பவர்கள் அந்த பாலத்தை கடந்து சென்று வருகின்றனர். இந்த பாலத்தில் தடுப்பு சுவர் இடிந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இரவு நேரங்களில் பாலத்தை கடந்து செல்லும் போது அடிக்கடி விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் உடனடியாக ராஜா வாய்க்காலின் பாலத்தின் தடுப்பு சுவரை சரிசெய்ய வேண்டும். -முருகன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 5:28 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#2313

தெருநாய்கள் தொல்லை

தெருநாய்கள் தொல்லைமற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தினமும் கூட்டம், கூட்டமாக தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. தினமும் 5 முதல் 10 பேர் வரை தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் சாலைகளின் குறுக்கே இந்த தெருநாய்கள் ஓடி விபத்துக்களை ஏற்படுத்துகின்றன. எனவே தெருநாய்களின் அட்டகாசத்தை தடுக்க பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-முனியப்பா, தேன்கனிக்கோட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 5:27 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#2312

குண்டும், குழியுமான சாலை

குண்டும், குழியுமான சாலைசாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் சாலை அமைத்து பல ஆண்டுகள் ஆகிறது. இந்த சாலையில் தார் பெயர்ந்து ஜல்லிக்கற்களாக குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. தினமும் வாகனங்கள் தட்டுத்தடுமாறி ெசல்வதால் கடும் சிரமப்படுகின்றனர். மழைக்காலங்களில் இப்பகுதியில் சாலையில் குழிகளில் மழைநீர் தேங்கி சேறும், சக்தியுமாக உள்ளது. நடவடிக்கை எடுத்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும். -பூங்கொடி, வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 5:23 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#2311

சுற்றுச்சுவர் இல்லாத பள்ளி

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த வேம்பள்ளி கிராமத்தில் தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லை. இதனால் பள்ளி வளாகத்தில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் சிலர் மது அருந்துவது உள்ளிட்ட தீய செயல்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டி தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். -நாகராஜ், வேம்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 5:22 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#2310

ஆபத்தான பாதாள சாக்கடை

ஆபத்தான பாதாள சாக்கடைகழிவுநீர்

ஓசூர் மாநகராட்சி பழைய அன்னை சத்யா காலனியில் பாதாள சாக்கடை பராமரிப்பு பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டன. அந்த பணிகள் நிறைவடைந்து 20 நாட்களாகியும் இதுவரை பள்ளத்தை மூடாமல் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர். இதனால் திறந்தவெளியில் பாதாள சாக்கடையால் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள பாதாள சாக்கடை கால்வாயை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுந்தர், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick