Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 July 2022 5:17 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#2700

ஆபத்தான பயணம்

ஆபத்தான பயணம்போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இருந்து பெல்ரம்பட்டி, மாரண்டஅள்ளி, பென்னாகரம், அமானி மல்லாபுரம் பகுதிகளுக்கு காலை, மாலை நேரங்களில் பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு குறிப்பிட்ட பஸ்சில் மட்டுமே செல்ல முடியும். போதிய டவுன் பஸ்கள் இல்லை. இதனால் பள்ளி மாணவர்கள் முண்டியடித்துக் கொண்டு பஸ்சில் ஏறி செல்கின்றனர். மேலும் பஸ்சில் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். எனவே தமிழக அரசு காலை, மாலை வேளைகளில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.-தர்மா, பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 6:17 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#2521

வறண்டு கிடக்கும் குடிநீர் தொட்டிகள்

தண்ணீர்

சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே முக்கிய இடங்களில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், பயணிகள் நலன்கருதி அமைக்கப்பட்ட நிலையில் தற்போது நிழற்கூடங்கள் சரிவர பராமரிக்கப்படாமலும், குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படாமல் வறண்டு கிடக்கிறது. இதனால் பயனற்று குடிநீர் தொட்டிகள் கிடக்கின்றன. எனவே ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள நிழற்கூடங்களை சீரமைத்து குடிநீர் தொட்டிகளில் நீரை நிரப்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 6:15 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#2520

நிழற்கூடம் அமைக்க வேண்டும்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு செல்லும் அடிவாரத்தில் இருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். மழைக்காலங்களில் பலத்த மழை பெய்யும்போது மலைப்பகுதியில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு சீதோஷ்ண நிலை காணப்படும். மேலும் மழையில் நனையாமல் இருக்க ஆங்காங்கே ஒதுங்க இடம் இல்லாமல் மலைவாழ் மக்கள், சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே 70 கொண்டை ஊசி வளைவு பகுதிகளில் நின்று செல்லும் வகையில் ஆங்காங்கே நிழற்கூடங்கள் அமைக்க வேண்டும்.-சமூக ஆர்வலர்கள், கொல்லிமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 6:13 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#2519

பழுதடைந்த சாலை

சாலை

நாமக்கல் கோட்டை ரோட்டில் நகராட்சி தொடக்கப்பள்ளி அருகே வாகனங்கள் மெதுவாக செல்வதற்கு வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வேகத்தடையையொட்டி சாலை பழுந்தடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இரவு நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. எனவே பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு நாமக்கல் நகராட்சி நிர்வாகம் சாலையை சரி செய்து சீரமைக்க வேண்டும். -காசி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 6:12 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#2518

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

நாமக்கல் நகராட்சி சார்பில் காவிரி ஆற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, வீடு, வீடாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று நகராட்சிக்கு செல்லும் வழியான சேலம் ரோடு கார்னர் பகுதியில் குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் சாலையில் வீணாக வழிந்தோடி சாக்கடையில் கலக்கிறது. இதனை உடனடியாக சரிசெய்து, வீணாகும் குடிநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 6:10 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#2517

வரி வசூலுக்கு ரசீது

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் காய்கறிகளை வெண்ணந்தூர் தினசரி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்த மார்க்கெட்டில் காய்கறி கடை போடுவதற்கு தனியார் நிர்வாகம் குத்தகைக்கு எடுத்து வரி வசூல் செய்து வருகின்றது. ஆனால் அதற்கு எந்தவித ரசீதும் வழங்கப்படுவது இல்லை. இதனால் சிறு விவசாயிகள் இந்த முறையற்ற வரி வசூலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே வரி வசூல் செய்வதற்கு உரிய ரசீது கொடுக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 6:05 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#2515

நோய் பரவும் அபாயம்

குப்பை

சேலம் சித்தனூரை அடுத்த இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அருகே சாலையின் ஓரத்தில் குப்பைகள் மற்றும் கோழி கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் மிகுந்த துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்தவாறு செல்லும் அவல நிலை உள்ளது. இந்த பகுதியில் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -குருபாலன், சர்க்கார்கொல்லப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 6:03 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#2513

சீரமைக்க வேண்டிய சாலை

சீரமைக்க வேண்டிய சாலைசாலை

சேலம் ஆண்டிபட்டி போடிநாயக்கன்பட்டியில் இருந்து கந்தம்பட்டிக்கு செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -கந்தசாமி, ஆண்டிப்பட்டி,சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 5:54 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#2508

சாக்கடை கால்வாய் பணி

கழிவுநீர்

சேலம் மாநகராட்சி 16-வது வார்டு நாராயணபிள்ளை தெருவில் இருபுறமும் சாக்கடை கால்வாய் செல்கிறது. மழை காலத்தில் மழை நீருடன், கழிவு நீர் கலந்து வீடுகளுக்குள் செல்லும் நிலை ஏற்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சாக்கடை கால்வாய் அகலப்படுத்தும் பணி தொடங்கியது. அதேபோன்று நாராயணபிள்ளை தெருவில் சாலை புதுப்பிக்கும் பணியும் தொடங்கியது. பல நாட்கள் ஆகியும் சாலைப்பணி, சாக்கடை கால்வாய் அகலப்படுத்தும் பணி கிடப்பில் கிடக்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே சாக்கடை கால்வாய்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 5:38 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#2495

சேதமடைந்த வீடுகள் சீரமைக்கப்படுமா?

மற்றவை

தர்மபுரி மாவட்டம் அரூர்- தீர்த்தமலை செல்லும் சாலையில் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு மின்வாரிய ஊழியர்களுக்கு வீடுகள் கட்டப்பட்டது. இந்த வீடுகள் சேதமடைந்து குடியிருக்க முடியாத நிலை உள்ளது. அங்குள்ள வீடுகளை சுற்றி முட்புதர்கள் வளர்ந்து காடுபோல் காட்சி அளிக்கிறது. இந்த வீடுகளை சீரமைத்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மணி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 5:13 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#2482

டாஸ்மாக் கடையை அகற்றவேண்டும்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள கோழிமேக்கனூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இதனால் மதுபிரியர்கள் இங்கு மது அருந்துவதுடன் அந்த வழியாக செல்லும் பெண்கள், மாணவிகளிடம் தகராறு செய்கின்றனர். எனவே டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-தங்கராஜ், பாப்பிரெட்டிப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 5:11 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#2480

சாலை அமைக்கப்படுமா?

சாலை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மந்திரி கவுண்டர் தெருவில் குடிநீர் குழாய் அமைக்க சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. பல மாதங்கள் ஆகியும் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். -தண்டபாணி, மந்திரி கவுண்டர் தெரு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick