Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 July 2022 6:22 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#2723

பயன்படாத பஞ்சாயத்து அலுவலகம்

மற்றவை

சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த கோனேரிப்பட்டி அக்ரஹாரம் கிராமம் பொன்னம்பாளையத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கிராம பஞ்சாயத்து அலுவலகம் வேலை முடிந்ததாக அவசரகதியில் திறக்கப்பட்டு பயனற்று கிடக்கிறது. இதுதொடர்பாக பலமுறை அதிகாரிகளிடமும், ஊராட்சி தலைவரிடமும் மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஞ்சாயத்து அலுவலகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டும். -அருள், பொன்னம்பாளையம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 6:20 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#2722

சத்துணவு கட்டிடம் புதுப்பிக்கப்படுமா?

சத்துணவு கட்டிடம் புதுப்பிக்கப்படுமா?மற்றவை

சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியம் பள்ளிப்பட்டி கிராமம் ஏழுமலையான் காடு தொடக்கப்பள்ளியில் சத்துணவு கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடம் சேதமடைந்து விரிசல் விழுந்து சிமெண்டு பூச்சுகள் விழுகின்றன. இதுபற்றி புகார் அளித்தும் பலன் இல்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சத்துணவு கட்டிடத்தை புத்துப்பித்து தர முன்வர வேண்டும். -அழகேசன், உப்புபள்ளம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 6:18 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#2721

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படவில்லை

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படவில்லைகழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த சீராப்பள்ளி பேரூராட்சி ஒடுவன்குறிச்சியில் பல ஆண்டுகளாக சாக்கடை கால்வாய் தூர்வாரப்படவில்லை. இதனால் கால்வாயில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து செல்லாமல் தேங்கி நிற்கிறது. கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள், செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சங்கர், தொப்பப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 5:50 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#2720

அதிகம் வேகம் ஆபத்து

போக்குவரத்து

கிருஷ்ணகிரி அருகே அக்ரஹாரம் முல்லை நகர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிக்கு செல்லும் சாலை பல இடங்களில் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மழைக்காலங்களில் இந்த பகுதியில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப்படுவதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். -முனியப்பன், கிருஷ்ணகிரி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 5:49 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#2719

அதிகம் வேகம் ஆபத்து

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதி விவசாய தோட்டங்களில் விளையும் காய்கறிகள், கீரை வகைகளை நாள்தோறும் சரக்கு வேன்களில் ஏற்றி மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வது வழக்கம். அவ்வாறு காய்கறி, கீரை பாரங்களை ஏற்றி வரும் சரக்கு வேன்களை டிரைவர்கள் அதிவேகமாக ஓட்டி வருவதால் சூளகிரி, அத்திமுகம் ,பேரிகை, சாமல்பள்ளம் மற்றும் சுற்று பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே போலீசார் இதனை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -கொண்டப்பா, புன்னாகரம், சூளகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 5:47 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#2718

நோய் பரவும் அபாயம்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் நெடுஞ்சாலை மற்றும் சாலைகளில் வாகனங்களால் விபத்து ஏற்பட்டு உயிரிழக்கும் ெதருநாய் மற்றும் பூனைகளை அகற்றாமல் அப்படியே கிடக்கின்றன. இதனால் விபத்தில் உயிரிழக்கும் பிராணிகளின் மீது மென்மேலும் வாகனங்கள் ஏறி செல்வதால் உடல்கள் சிதறி சாலையில் பரவி விடுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. இவ்வாறு ஏற்படும் விபத்துகளில் சிக்கும் பிராணிகளின் உடல்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். -குமார், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 5:46 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#2716

சாலையில் பெரிய பள்ளம்

சாலையில் பெரிய பள்ளம்சாலை

கிருஷ்ணிகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பைபாஸ் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக சரி செய்யப்படாமல் இருப்பதால் இரவு நேரங்களில் வேகமாக வரும் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். இதுபற்றி புகார் அளித்தும் பலன் இல்லை. வாகன ஓட்டிகளின் நலன் கருதி நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சரிசெய்ய வேண்டும். -ஜிலானி பாஷா, தேன்கனிக்கோட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 5:44 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#2714

அகலப்படுத்த வேண்டிய சாலை

சாலை

ஓசூரில் முக்கிய பகுதிகளான ஜனப்பர் தெரு, நாமால்பேட்டை, நஞ்சுண்டேஸ்வரர் கோவில் தெரு ஆகிய இடங்களில் சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் காலை முதல் இரவு வரை பொதுமக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து அதிகளவில் இருந்து வருகிறது. இந்த பகுதியில் சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகின்றது. எனவே, சாலைகளை அகலப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். -அன்பரசன், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 5:30 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#2710

சாலையோரம் குவியும் குப்பைகள்

குப்பை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பைபாஸ் சாலை பெட்ரோல் பங்க் அருகில் அந்த பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதர சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றி அங்கு குப்பைகளை கொட்டாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலா, பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 5:29 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#2709

பாழடைந்த சுகாதார நிலையம்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் பாழடைந்த ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அந்த கட்டிடத்தில் கண்ணாடிகள், கதவுகள், ஜன்னல்கள் அனைத்தும் உடைந்து, விஷப்பூச்சிகளின் கூடாரமாக காட்சி அளிக்கிறது. இந்தநிலையில் நோயாளிக்கு சாலையோரம் அமர்ந்து சிகிச்சை அளிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி நடவடிக்கை எடுத்து சுகாதார நிலையத்தை புதுப்பித்து பயன்பாட்டுக்கொண்டு வரவேண்டும். -வினோத், ஏரியூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 5:23 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#2704

குப்பைகளை எரிக்கலாமா?

குப்பை

தர்மபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சி 9-வது வார்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பஸ் நிலையம் பின்புறம் உள்ள வர்ண தீர்த்தம் பகுதியில் பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி குப்பைக்கிடங்காக மாற்றி வருகின்றனர். ஆனால் ஊருக்கு ஒதுக்குப்புறமாக குப்பைக்கிடங்கு இருந்தாலும், அங்கு குப்பைகளை கொட்டாமல் குடியிருப்பு பகுதிக்குள் கொட்டி தீ வைப்பதால் இந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் குழந்தைகள், முதியோர் உள்பட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 5:20 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#2701

பயன்படாத குடிநீர் குழாய்

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே பூச்சூர் அரசு தொடக்கப்பள்ளி முன்பு மாணவர்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் தண்ணீர் வருவதற்கான எவ்வித ஏற்பாடுகளும் செய்யாமல் வினோத முறையில் குடிநீர் குழாய் அமைத்துள்ளனர். இதனால் மாணவர்கள் குடிநீர் கிடைக்காமல்அவதிப்பட்டு வருகின்றனர். மாணவர்களின் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். -ராமர், ஏரியூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick