Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
20 July 2022 2:46 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#2849

தகவல் பலகையில் போஸ்டர் ஒட்டலாமா?

மற்றவை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே ராமகொண்ட அள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன்பு உள்ள தகவல் பலகை போஸ்டர் ஒட்டும் இடமாக மாறியுள்ளது. இதனால் அலுவலக தகவல்களை தெரிவிக்க பணியாளர்கள் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அரசு சம்பந்தப்பட்ட இடங்களில் இதுபோன்று செயல்கள் நடக்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜேஷ், ராமகொண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 2:46 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#2846

ஏரியை ஆக்கிரமித்த முட்செடிகள்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அகரம் பகுதியில் உள்ள ஏரியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பது வழக்கம். இதன்மூலம் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாய பணிகளுக்கும் தண்ணீர் கிடைத்து வந்தது. இந்த ஏரியில் தண்ணீர் தேங்கும் பரப்பில் தற்போது முட்செடிகள் அடர்ந்து வளர்ந்து ஆக்கிரமித்துவிட்டன. இதனால் இந்த ஏரியில் மழைநீர் தேங்குவதில்லை. எனவே ஏரியில் உள்ள முள் செடிகளை அகற்றி ஏரியை தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -முனுசாமி, பாலக்கோடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 2:45 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#2845

தண்ணீர் இல்லாத தொட்டி

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு 13-வது வார்டு மந்திரிகவுண்டர் தெருவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. அந்த குடிநீர் தொட்டி சேதமடைந்து தண்ணீர் இன்றி காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி குடிநீர் குழாயை சரி செய்து தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -குபேரன், மந்திரிகவுண்டர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 2:41 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#2840

குப்பைகள் அள்ளப்பட்டன

குப்பைகள் அள்ளப்பட்டனகுப்பை

தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் பஸ் நிலையம், கடைவீதி, ரேஷன் கடை ஆகிய பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடந்தன. இதனால் துர்நாற்றம் வீசியதுடன் அந்த பகுதி மக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். அந்த பகுதியில் குவிந்து கிடந்த குப்பைகளை தூய்மை பணியாளர்கள் அகற்றி தூய்மைப்படுத்தினர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு நடவடிக்கை எடுக்க உதவிய...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 2:36 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#2837

'தினத்தந்தி'க்கு பாராட்டு

ட்ரெண்டிங்

கிருஷ்ணகிரியில் இருந்து ஆலப்பட்டி வழியாக வெலகலஅள்ளிக்கு இரவு நேரத்தில் பஸ்கள் இயங்கவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர் என்று தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதனை அடுத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிக்ள அந்த பகுதிக்கு இரவு நேரத்தில் பஸ்கள் நடவடிக்கை எத்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். -அன்புசெல்வன், வெலகலஅள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 6:33 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#2730

குண்டும், குழியுமான சாலை

சாலை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் மதியம்பட்டி ஊராட்சி எல்லைக்குட்பட்ட சவுரிபாளையம் பகுதியில் இருந்து மதியம்பட்டிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை தற்போது பழுதடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. வெண்ணந்தூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மல்லசமுத்திரம், திருச்செங்கோடு, ஈரோடு போன்ற பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு பழுதடைந்த தார்சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.முரளிதரன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 6:31 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#2729

மினி பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் கிராம பகுதிகளுக்கு மினி பஸ் சேவை இயக்கப்பட்டு வந்தது. இது பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக இருந்தது. தற்போது அனைத்து மினி பஸ்களும் நிறுத்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மினி பஸ் சேவை இல்லாததால் நெடுந்தூரம் நடந்து செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு அனைத்து கிராமங்களுக்கும் ஏற்கனவே இயக்கப்பட்ட மினி பஸ்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜா- வெண்ணந்தூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 6:30 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#2728

தேன் கூடு அகற்றப்படுமா ?

மற்றவை

நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். திங்கட்கிழமைகளில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க அதிக அளவில் வருவது உண்டு. இந்த நிலையில் 2-வது மாடி சிலாப் பகுதியில் தேன்கூடு ஒன்று கட்டி உள்ளது. இந்த தேன்கூடு கலைந்து பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களை தேனீக்கள் கொட்டி விட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த தேன்கூட்டை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாணிக்கம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 6:27 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#2727

சீரமைக்க வேண்டிய சாலை

சாலை

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே கண்ணூர்பட்டிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. அதனால் அந்த வழியாக செல்லும் 2 சக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாணிக்கம், புதுச்சத்திரம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 6:26 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#2726

பழுதடைந்த வாகனங்கள் அகற்றப்படுமா?

மற்றவை

சேலம் சர்க்கார்கொல்லப்பட்டி பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அவர்களால் பறிமுதல் செய்யப்பட்ட லாரி உள்ளிட்ட வாகனங்கள் அதே பகுதியில் உள்ள சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் தற்போது மிகவும் பழுதடைந்து அதை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இந்த வாகனங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏலம் விடுவதற்கோ அல்லது அங்கிருந்து அகற்றுவதற்கோ விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 6:25 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#2725

பாதியில் நிற்கும் அரசு கட்டிடம்

மற்றவை

சேலம் வட்ட முத்தாம்பட்டி ஊராட்சி அலுவலகம் புதிதாக கட்டுவதற்காக அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பணி நிறைவடையாமல் அப்படியே பாதியில் நிற்கின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வர முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஊராட்சி அலுவலக பணியினை விரைந்து முடிக்க வேண்டும். -ராஜகிள்ளிவளவன், வட்டமுத்தாம்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 6:23 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#2724

கோபுர விளக்கு எரியவில்லை

மின்சாரம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேளூர் பிரிவு சாலையில் உயர்மின் கோபுர விளக்கு உள்ளது. அதில் ஒரு விளக்கு மட்டுமே எரிகிறது. மற்ற விளக்குகள் எரியவில்லை. இதனால் அந்த பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கோபுர விளக்கை எரியசெய்யவேண்டும். -வெங்கடேஸ்வரி, வாழப்பாடி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick