Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
17 July 2022 5:20 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#2309

வாரச்சந்தையில் அதிக கட்டணம்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த இண்டூர் வாரச்சந்தையில் சுங்கவசூல், ஆடு மற்றும் சாலையோர கடைகள், வாகனங்களுக்கு அரசு நிர்ணயத்த கட்டணத்தை விட அதிகமாக வசூல் செய்யப்படுகிறது. இதுபற்றி பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மஞ்சுளா, இண்டூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 5:19 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#2308

கிணற்றுக்கு மூடி அமைக்கப்படுமா?

கிணற்றுக்கு மூடி அமைக்கப்படுமா?மற்றவை

தர்மபுரி அடுத்த ஏரியூர் அருகே ராமகொண்டஅள்ளி ஊராட்சி புதுசோளப்பாடியில், ஊரின் மையப் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பொது கிணறு அமைக்கப்பட்டது. இந்த கிணறு திறந்தவெளியில் இருப்பதால் குப்பைகள் கொட்டும் கிணறாக மாறி உள்ளது. இதனால் கிணற்று நீர் அசுத்தமாகி துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே கிணற்றுக்கு மூடி அமைத்து பராமரிக்க வேண்டும். -முருகன், புதுசோளப்பாடி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 5:17 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#2307

சுகாதாரமற்ற குடிநீர்

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே பூச்சூர் அரசு பள்ளியில் மாணவ- மாணவிகளின் பயன்பாட்டிற்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த குடிநீர் தொட்டிக்கு மூடி இல்லாமல் கிழிந்த பழைய பேப்பைரை வைத்து மூடப்பட்டுள்ளது. இதனால் தண்ணீரில் அழுக்கு படிந்தும், காக்கைகளின் எச்சங்களுடன் கூடிய குடிநீைர மாணவ-மாணவிகள் குடிக்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் நடவடிக்ைக எடுப்பார்களா? -ஊர்பொதுமக்கள், பூச்சூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 5:15 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#2306

குவிந்து கிடக்கும் குப்பைகள்

குவிந்து கிடக்கும் குப்பைகள்குப்பை

தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் பஸ் நிலையம் கடைவீதி, ரேஷன் கடை ஆகிய பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. ரேஷன் கடைக்கு வருபவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் தினமும் குப்பைகளை அள்ளி தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -கிருபாகரன், ஏரியூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 4:30 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#2130

மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

மற்றவை

சேந்தமங்கலம் பேரூராட்சி காந்திபுரத்தில் இருந்து கொல்லிமலை அடிவாரத்திற்கு செல்லும் வழியில் பொம்மசமுத்திரம் ஏரி உள்ளது. அந்த ்வழியாக கொல்லிமலைக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் ஏரிக்கரை பகுதியில் மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் செல்ல அச்சப்படுகின்றனர். அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு ஏரிக்கரை பகுதியில் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரதீப், காந்திபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 4:29 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#2129

நோய் பரவும் அபாயம்

குப்பை

நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்த பேட்டப்பாளையம் ஊராட்சி கிராயூர் அருகே உள்ள பாலத்தில் கெட்டுப்போன இறைச்சி கழிவுகளை சிலர் கொட்டுகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துகொண்டு செல்லும் நிலை ஏற்பட்டு்ள்ளது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரபாகரன், கிராயூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 4:28 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#2128

கோபுர விளக்கு எரியவில்லை

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் செல்லப்பகவுண்டர் பூங்காவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலை அருகே உயர்மின் கோபுர விளக்கு ஒன்று உள்ளது. அதில் ஒரு சில விளக்குகள் மட்டுமே எரிகின்றன. சில விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்துள்ளது. எனவே அதை சரி செய்து அனைத்து விளக்குகளும் எரிய செய்ய நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரசன்னா, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 4:23 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#2127

அடிக்கடி போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் ராசிபுரம் செல்லும் சாலையில் இருபுறமும் ஆக்கிரமிப்பு உள்ளது. இதனால் வெண்ணந்தூரில் அண்ணா சிலையில் இருந்து காமராஜர் சிலை வரை அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வடிவேல், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 4:20 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#2126

பழமையான பள்ளிக்கட்டிடம்

மற்றவை

சேலம் மாவட்டம் ஆண்டிப்பட்டி பழைய மாதாகோவிலுக்கு அருகே பழமையான பள்ளிக்கட்டிடம் உள்ளது. பல ஆண்டுகளாக செயல்படாமல் இருப்பதால் அந்த கட்டிடத்தில் சிலர் மது அருந்துவதும், சீட்டு விளையாடும் என சமூக விரோத செயல்களுக்கு கூடாராமாக இருக்கிறது. இது அந்த பகுதி பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கவின், ஆண்டிப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 4:19 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#2125

காட்சி பொருளான குடிநீர் தொட்டி

காட்சி பொருளான குடிநீர் தொட்டிதண்ணீர்

சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த கோனேரிப்பட்டி அக்ரஹாரம் கிராமம் பொன்னம்பாளையத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் இது வரை அது பயன்பாட்டிற்கு வராமல் காட்சி பொருளாகவே உள்ளது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குடிநீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -அருள், பொன்னம்பாளையம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 4:18 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#2123

சாலையின் நடுவே மின் கம்பம்

சாலையின் நடுவே மின் கம்பம்மின்சாரம்

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து சுமார் 20-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு மஞ்சக்குட்டை கிராமம் வழியாக செல்ல வேண்டும். இந்த நிலையில் அசம்பூரில் இருந்து மஞ்சக்குட்டைக்கு இடையே சாலை விரிவாக்கம் பணி நடைபெற்றது. பணியின் போது சாலையோரத்தில் இருந்த மின்கம்பம் ஒன்றை அகற்றாமல் அதை சாலையின் நடுவில் விட்டு சாலை விரிவாக்கம் பணி செய்து முடிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் மின்கம்பங்களில் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன் சாலையின் நடுவில் உள்ள மின் கம்பத்தை அகற்ற மின் வாரிய...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 3:52 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#2121

செடி, கொடிகள் அகற்றப்படுமா?

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த ஜோடுகொத்தூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். கட்டிடத்தைச் சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. இதனால் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளன. குழந்தைகள் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதர்களை அகற்றி தூய்மையாக வைக்க வேணடும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சுபாஷ், ஜோடுகொத்தூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick