Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
9 Sep 2022 4:23 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#13899

சீரமைக்க வேண்டிய அரசு கட்டிடம்

மற்றவை

நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூர் கிராம நிர்வாக அலுவலகம் கட்டப்பட்டு சுமார் 20 ஆண்டுகள் ஆகிறது. தற்போது இந்த கட்டிடத்தின் மேற்கூரை கன்கீரிட்டுகள் சேதமடைந்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் கிராம நிர்வாக அலுவலகத்தின் உள்ளே தண்ணீர் ஒழுகும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே பழுதடைந்த இந்த அரசு கட்டிடத்தை சீரமைக்க வேண்டும். -வினித், நல்லம்பள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Sep 2022 4:21 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#13898

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி 4 ரோடு பகுதியில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் 4 ரோடு பகுதியில் கடந்து செல்ல மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நல்லதம்பி, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Sep 2022 4:19 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#13897

உயர்கோபுர மின்விளக்கு

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா இண்டூர் கிராமத்தில் குப்புசெட்டிப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் பஸ் நிறுத்தம் 4 சாலைகளை இணைக்கும் இடமாக உள்ளது. இங்கு உயர்கோபுர மின் விளக்கு இல்லாததால் வாகனங்களில் வருகிறவர்களுக்கு சாலையில் மக்கள் நடமாட்டம் தெரிவதில்லை. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. சிலர் மது குடித்துவிட்டு பாட்டில்களை சாலையில் வீசிவிட்டு செல்கின்றனர். எனவே இந்த பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரவி, இண்டூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2022 5:12 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#13713

சாலையோரம் குவியும் வாழைகழிவுகள்

மற்றவை

நாமக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் சாலை என்.புதுப்பட்டிக்கும் வளையப்பட்டிக்கும் இடையில் சாலை ஓரங்களில் தொட்டியம் பகுதியில் இருந்து நாமக்கல் மற்றும் வெளியூர்களுக்கு வாழைத்தார் கொண்டு செல்லும் வாகனங்கள் அதில் உள்ள கழிவுகளை சாலை ஓரங்களில் போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் மழைக்காலங்களில் சாலையில் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமின்றி காய்ந்து சருகானால், காற்று அடிக்கும் காலங்களில் தார்சாலையில் பறந்து போக்குவரத்துக்கு பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது. இதை தடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2022 5:11 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#13711

ரெயில்வே சுரங்கப்பாலத்தில் மழைநீர்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் எஸ்.பி.பி. காலனி பகுதியில் ரெயில்வே சுரங்கப் பாலம் உள்ளது. இந்தநிலையில் அந்த சுரங்கப்பாலத்தில் இரு சக்கர வாகனங்கள், மினி டெம்போக்கள் செல்கின்றன. மழைக்காலங்களில் நுழைவுப் பாலத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அந்த பகுதியில் மழைநீர் தேங்காமல் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதேஸ்வரன், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2022 5:09 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#13709

தெருநாய் தொல்லை

மற்றவை

சேலம் பெரமனூர் மாரியம்மன் கோவில் தெரு மற்றும் அவுசிங்போர்டு, 40 அடி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் சிறுவன் ஒருவனை தெருநாய்கள் துரத்தி சென்று கடித்துள்ளன. இரவு நேரங்களில் வேலை முடிந்து வீட்டிற்கு செல்பவர்களை கடிக்க துரத்துகின்றன. மேலும் இரவு நேரங்களில் அவைகள் கத்துவதால் பொதுமக்களால் தூங்க முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2022 5:08 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#13708

மாற்று பாதை வேண்டும்

சாலை

சேலம் எம்.செட்டிபட்டி ஏரியை சுற்றி சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அங்கு உள்ள பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்கு வர ஒரு சாலை மட்டுமே உள்ளது. ஏரி நிரம்பிவிட்டால் மாற்று பாதை கிடையாது. எனவே பள்ளி மாணவர்களின் நலன் கருதி மாற்று பாதை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முல்லைவேந்தன், ஓமலூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2022 5:07 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#13707

குடியிருப்புக்குள் புகுந்த மழைவெள்ளம்

மற்றவை

சேலம் மாவட்டம் சினிமா நகரில் மழை நீர் வடிகால் வசதி இல்லை. நகருக்கு அருகில் பள்ளபட்டி ஓடை உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் ஓடையில் நீர்வரத்து அதிகரித்து, மழைவெள்ளம் குடியிருப்புக்குள் புகுந்து விடுகிறது. மழை காலங்களில் இந்த அவல நிலை ஏற்படுகிறது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் நோய் தொற்றினால் அவதிபடுகின்றனர். எனவே இந்த பகுதியில் மழைநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும். -கெளதம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2022 5:06 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#13706

மழைநீர் வடிகால் வசதி

தண்ணீர்

சேலம் மாவட்டம் ஓமலூரில் கஞ்சநாயக்கன்பட்டியில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் கோட்டைமேடு பகுதியில் முறையான மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் அந்த பகுதியில் நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த பகுதியில் முறையான மழைநீர் வடிகால் வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தங்கராஜ், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2022 4:29 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#13690

பழுதான உயர்கோபுர மின்விளக்கு

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் கூட்ரோடு பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த உயர்கோபுர மின்விளக்கு பழுதாகி ஒளிரவில்லை. சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் இதுநாள் வரை உயர்கோபுர மின்விளக்கு பழுதை சீர்செய்திட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரவு நேரங்களில் இந்த பகுதியில் விபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயர்கோபுர மின்விளக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2022 4:19 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#13689

குப்பையால் சுகாதார சீர்கேடு

குப்பை

தர்மபுரி அன்னை சத்யா நகர் குடியிருப்பு பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. தற்போது அடிக்கடி மழை பெய்யும் சூழ்நிலையில் குப்பைகள் மழையில் நனைந்து இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டால் அந்த வழியாக செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த பகுதியில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும். அல்லது அங்கு குப்பை தொட்டிகள் வைத்து தினமும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுந்தரம்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2022 4:17 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#13688

ரெயில்வே மேம்பாலம் பயன்பாட்டுக்கு வருமா?

மற்றவை

தர்மபுரி- சேலம் சாலையில் அதியமான் கோட்டை பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடந்தது. இதனால் அதியமான்கோட்டை பைபாஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்ட வாகனங்கள் அருகே உள்ள ரெயில்வே கேட் வழியாக சென்று வருகின்றன. இந்த பகுதியிலும் அடிக்கடி வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே அதியமான் கோட்டை ரெயில்வே மேம்பாலத்தை வாகன போக்குவரத்திற்கு திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறையினர் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -மகேந்திரன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick