Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 Sep 2022 4:16 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#13687

ஆமை வேகத்தில் பள்ளி கட்டுமான பணி

மற்றவை

தர்மபுரி மாவட்டம் மாரண்ட‌அள்ளி அருகே உள்ள எம்.செட்டி‌அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உளளது. போதிய வசதி இல்லாததால் பள்ளி அருகிலேயே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கூடுதல் கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. ஆனால் இந்த பணி இதுவரை முடிக்கப்படாமல் ஆமைவேகத்தில் நடக்கிறது. எனவே மாணவர்களின் நலன் கருதி கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியை நேரில் பார்வையிட்டு பள்ளி கட்டிட கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாரியப்பன், எம்.செட்டி‌அள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2022 4:15 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#13686

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் இருந்து கெலமங்கலம் செல்லும் மெயின் ரோடு நெல்லூர் பிரிவு பாதையிலிருந்து எடவனஅள்ளி வரை உள்ள 4 கி.மீ. தூரம் உள்ள தார்சாலை முழுதுவம் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக நகர பஸ், பள்ளி வாகனம், இருசக்க வாகனங்கள் தினமும் வந்து செல்கிறது இதனால் பொதுமக்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. இந்த தார்சாலையை புதுப்பிக்க பல முறை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கை இல்லை. எனவே இந்த சாலையை புதுப்பித்து தருமாறு கோரிக்கை. ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2022 4:14 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#13685

சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்துள்ள மலையாண்டஅள்ளி ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக மலையாண்டஅள்ளி பாலேகுளி சாலையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி உரிய பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. இதனால் குடிநீர் தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. எனவே மலையாண்டஅள்ளியில் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியை சீரமைக்க அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2022 4:13 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#13684

தெருவிளக்கு எரிவதில்லை

மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் நகரின் பிரதான சாலையான தென்பெண்ணை ஆற்றின் மேம்பாலத்தில் பல ஆண்டுகலாக மின்விளக்கு எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். மேலும் திருட்டு பயமும் அந்த வழியாக செல்வோருக்கு ஏற்படுகிறது. எனவே இந்த மின் விளக்குகளை எரிய செய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரவி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2022 4:13 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#13683

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் நாள்தோறும் பஜார் தெரு, கீழ்த்தெரு, முனியம்மா சர்க்கிள் ஆகிய பகுதிகளில் காலை, மாலை வேளைகளில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும், பள்ளி குழந்தைகளும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த நேரங்களில் வெளிவட்ட சாலை (பேரிகை சாலை) யை வாகன ஓட்டிகள் பயன்படுத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - நாகராஜ், சூளகிரி - கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 5:15 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#13486

நாய்கள் தொல்லை

மற்றவை

சேலம் மாவட்டம் 18-வது வார்டு மெய்யனூரில் உள்ள பனங்காட்டு தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த நாய்கள் தெருவில் நடந்து செல்பவர்களையும், வண்டியில் செல்பவர்களையும் துரத்தி துரத்தி கடிக்கிறது. இதனால் அந்த தெருவில் இருக்கும் பொது மக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் இந்த நாய்களை பிடித்து செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வம், மெய்யனூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 5:14 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#13485

சுகாதார கேடு

குப்பை

சேலம் மாவட்டம் ஓமலூர் சேலம் மெயின் ரோட்டில் தனியார் பள்ளி அருகே உள்ள ஓடையில் குப்பைகள், கோழிக்கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த ஓடையில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளியில் படிக்கும் மாணவிகள் மற்றும் இந்த வழியாக செல்லும் பொது மக்கள் சிரமத்திற்குள்ளாகிறார்கள். எனவே இந்த ஓடையில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முருகேசன், ஓமலூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 5:13 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#13484

ஆபத்தான மின்கம்பம்

மின்சாரம்

சேலம் கிச்சிப்பாளையம் சத்தியமூர்த்தி தெருவில் மின் கம்பம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கிருஷ்ணன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 5:12 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#13483

நிழற்கூடம் இல்லாத பஸ் நிறுத்தம்

போக்குவரத்து

சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து 4 ரோடு வழியாக நகரின் பல பகுதிகளுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் 4 ரோடு பகுதி காலை, மாலை நேரங்களில் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இங்கு பயணிகள் நிற்பதற்கு கூட இடம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட நிழற்கூடம் மேம்பால பணிக்காக அகற்றப்பட்டது. தற்போது மழை காலம் தொடங்கி உள்ளதால் மழை பெய்யும் போது பயணிகள் ஒதுங்க கூட இடம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே பயணிகள் நலன் கருதி அந்த பகுதியில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 5:10 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#13481

மின்விளக்கு அமைக்கப்படுமா?

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் நடுப்பட்டி நரிக்கல் கரடு பகுதியில் உள்ள தெருவிளக்கு எரியாமல் பல மாதங்களாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அந்த பகுதியில் மின்விளக்கு அமைக்க வேண்டும். -வெங்கடாசலம், நரிக்கல் கரடு, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 5:09 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#13480

--- சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் பாண்டமங்கலம் தனியார் பள்ளி அருகே பாலம் ஒன்று உள்ளது. இப் பாலத்திற்கு அருகில் அப்‌பகுதியைச் சேர்ந்த வர்த்தக நிறுவனத்தினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் குப்பைகள், அழுகிய பொருட்கள், பழைய துணிகள் ஆகியவற்றை போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றமும், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். -ஆனந்தன், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 5:08 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#13477

புதுப்பிக்கப்படுமா? மணிக்கூண்டு

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பழைய பஸ் நிலையம் அருகில் பழமையான மணிக்கூண்டு ஒன்று அமைந்துள்ளது. பஸ்கள் சென்று வரும் நேரத்தை அறியவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும் அந்த மணிக்கூண்டு அங்கு அமைக்கப்பட்டது. தற்போது அந்த மணிக்கூண்டு மழை, வெயிலால் சேதமாகி காணப்படுகிறது. அதில் எழுதப்பட்டு இருந்த வாழ்க தமிழ் என்ற எழுத்தும் மறைந்து போய் இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து மணிக்கூண்டை புதுப்பிக்க வேண்டும். -ஜவகர், சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick