Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
10 Sep 2022 4:52 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#14119

பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகம்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி புதிய பஸ் நிலையத்தில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக பல வருடங்களுக்கு முன்பு பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த சுகாதார வளாகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. தற்போது இந்த சுகாதார வளாகத்தை சுற்றியும் முட்புதர்கள் வளர்ந்து காடு போல காட்சி அளிக்கிறது. எனவே இந்த பொது சுகாதார வளாகத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். -பிரசாந்த், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 4:51 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#14118

செயல்படாத ஏ.டி.எம். மையங்கள்

மற்றவை

கிருஷ்ணகிரி டவுன் பகுதிகளில் தனியார் மற்றும் அரசு வங்கி ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. இந்த ஏ.டி.எம். மையங்கள் பெரும்பாலும் பூட்டியே கிடக்கின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் அவசர காலங்களில் பணம் எடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் சில ஏ.டி.எம். மையங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. எனவே ஏ.டி.எம். மையங்களை முறையாக பராமரிக்க வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரகுபதி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Sep 2022 5:15 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#13933

சேதமடைந்த குடிநீர் குழாய்

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள முட்டாஞ்ெசட்டி ஊராட்சியில் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கும் குழாய்கள் இல்லாததால் தண்ணீர் வீணாக வெளியேறி சாக்கடை நீரில் கலக்கிறது. இதனால் அந்த பகுதியில் கடைசியில் இருக்கும் குழாய்களுக்கு தண்ணீர் வருவதில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் தண்ணீர் குடங்களுடன் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றி பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து அனைத்து இடங்களுக்கும் ஒரே சீராக தண்ணீர் வழங்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Sep 2022 5:14 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#13931

வீணாகி வரும் குடிநீர்

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரம் நடுக்கோம்பையில் காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி நீரேற்று நிலையம் அமைந்துள்ளது. அதன் அருகில் பிரதான குடிநீர் குழாய் உடைந்துள்ளதால் அதில் இருந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. கடந்த சில நாட்களாக அங்கு தண்ணீர் வீணாகி வருகிறது. அதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். -விஷால் கண்ணன், காரவள்ளி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Sep 2022 5:12 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#13929

தார்சாலை அமைக்கப்படுமா?

சாலை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் தாலுகா செம்மாண்டப்பட்டி பஞ்சாயத்தை சேர்ந்த கானம்பாளையம் பகுதியில் இருந்து செம்மாண்டப்பட்டி செல்லும் தார் சாலை சேதமடைந்து பல வருடங்களாகியும் புதிய தார் சாலை அமைக்கவில்லை. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே புதிய தார் சாலை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -பழனிவேல். கானம்பாளையம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Sep 2022 5:09 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#13927

அகற்ற வேண்டிய குப்பைகள்

குப்பை

சேலம் ஜாகீர்சின்ன அம்மாபாளையம் 19-வது வார்டு அங்கன்வாடி பள்ளி அருகே குப்பை தொட்டியை முறையாக பராமரிக்கவில்லை. பொது மக்கள் குப்பைகளை சாலைகளில் வீசி வருகின்றனர். அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த குப்பைகளை அகற்றி குப்பை தொட்டிகளை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -விஜயகுமார், ஜாகீர் சின்ன அம்மாபாளையம், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Sep 2022 5:05 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#13926

குப்பைகளால் சுகாதார கேடு

குப்பை

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா அண்ணாநகர் மேற்கு தெரு தனியார் திருமண மண்டபம் அருகில் சாலையோரங்களில் மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்படுகின்றன. இந்த குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தாமல் இருப்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்பரவும் அபாயமும் உள்ளது. இது குறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -சேவியர், ஓமலூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Sep 2022 4:32 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#13904

சாலையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி வழியாக பெங்களூரு, சேலம், சென்னை என வெளியூர்களுக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்த சுங்கச்சாவடி அருகே கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பஸ்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் -ரமேஷ், சந்தூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Sep 2022 4:30 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#13903

குண்டும் குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டைைய அடுத்த திம்ஜேப்பள்ளியில் இருந்து செங்காடு குட்டூர் வரை சுமார் 2 கி.மீ தூரம் உள்ள தார்சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்க்கு உள்ளாகிறார்கள். இந்த தார்சாலை தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மையப்பகுதியில் இருக்கிறது. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கிருஷ்ணமூர்த்தி, எடவனஅள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Sep 2022 4:28 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#13902

சாலையில் ஓடும் கழிவுநீர்

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜாகடை அருகே சிந்துகபள்ளி கிராமத்தில் முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர் சாலையில் விடப்படுகிறது. அப்பகுதியில் சாலை முழுவதும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பலர் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே உடனடியாக சாலையை சீரமைத்து கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். -பழனி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Sep 2022 4:26 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#13901

சேதமடைந்த சாலை

சாலை

ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பத்தலபள்ளி அருகே த.கசுவகட்டா பகுதிக்கு செல்லும் சாலை சேதமடைந்து சாலையின் நடுவே மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த பகுதியில் குடியிருப்பு பகுதிகளும், தனியார் பள்ளிகளும், கடைகளும் உள்ளன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சங்கர், ஓசூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Sep 2022 4:24 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#13900

பயன்பாட்டுக்கு வராத குடிநீர் நிலையம்

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த 2019-20-ம் ஆண்டு அரசு பள்ளி மாணவர் விடுதி அருகில் கட்டப்பட்டது. இதுவரை அந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. எனவே மாணவர்களின் நலன் கருதி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நாகராஜ், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick