Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
10 Sep 2022 5:46 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#14144

குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?

தண்ணீர்

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா தும்பல் ஊராட்சி மாமாஞ்சி சாலையில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு 10 நாட்களுக்கு மேல் ஆகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல் காலை நேரங்களில் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே இந்த குடிநீர் தொட்டியை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தும்பல் பூவிழி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 5:45 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#14143

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பை

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் தாலுகா தாஜ்நகர் நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. தாஜ் நகரில் இருந்து மயானம் செல்லும் சாலையில் குப்பைகள் நீண்ட நாட்களாக அள்ளபடாமல் குவிந்து கிடக்கின்றன. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குப்பைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -கிருஷ்ணா, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 5:45 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#14142

புதர்மண்டி கிடக்கும் கழிப்பறை

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்த ஓ.சவுதாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தொட்டிபட்டி செல்லும் சாலையில் உள்ள மகளிர் கழிப்பறை புதர் மண்டி பயன் இல்லாமல் கிடக்கிறது. எனவே இந்த கழிப்பறையை சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாரிமுத்து, ஓ.சவுதாபுரம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 5:44 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#14140

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு போக்குவரத்து கழக பணிமனை ரோட்டில் பிள்ளையார் கோவில் பின்புறம் எழில்நகர் பகுதியில் கடந்த சில வாரங்களாக குடிநீர் குழாய் உடைந்து வீணாக சாக்கடையில் கலக்கிறது. இதுகுறித்து பல முறை புகார் கொடுத்து இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரேம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 5:42 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#14138

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

மற்றவை

சேலம் மாவட்டம் 28-வது வார்டு செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட் முன்பு உள்ள தனியார் வணிக வளாகம் அருகே புதிதாக சாக்கடை கால்வாய் கட்டப்பட்டுள்ளது. இந்த சாக்கடை கால்வாய் அங்குள்ள கடைகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் சாலைகளில் ஓடுகிறது. இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதன் அருகில் ஆஸ்பத்திரி உள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜேஷ், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 5:41 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#14136

சேறும் சகதியுமான சாலை

சாலை

சேலம் மாவட்டம் பெருமாம்பட்டி கோவில்காடு தெருவில் சாலை சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -கருணாநிதி, பெருமாம்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 5:28 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#14126

சேதமடைந்த கட்டிடம்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தக்காளிமண்டி அருகில் மிகவும் பழமையான தாட்கோ வனிக வளாக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் சேதமடைந்து பயன்படுத்தாமல் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. இந்த நிலையில் கட்டிடத்தின் கீழே ஆபத்தை உணராமல் சாலையோர வியாபாரிகள் காய்கறி கடைகள் வைத்து நடத்தி வருகின்றனர். எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பு இந்த கட்டிடத்தை இடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சதீஷ், தாமபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 5:27 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#14125

போக்குவரத்து இடையூறு

போக்குவரத்து

தர்மபுரி சூடாமணி தெருவில் ஏராளமான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கொண்டுவரப்பட்ட மணலை சாலையில் குவித்து வைக்கப்பட்டு பல நாட்களாக அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் காற்று வீசும் போது வீடுகளுக்குள் மணல் படிந்து குடியிருப்பு வாசிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே குவித்து வைக்கப்பட்டுள்ள மணலை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -தமிழ்செல்வன், ஸ்ரீராம் காலனி. தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 5:25 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#14124

குண்டும், குழியுமான சாலை

சாலை

தர்மபுரி மாவட்டம் தடங்கம் தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலை முதல் பெருமாள்கோவில்மேடு வரை செல்லும் தார்சாலை ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த தார் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நடேசன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 5:24 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#14123

பள்ளிக்கூடத்துக்கு சுற்றுச்சுவர்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பில்பருத்தியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தால் மாணவ-மாணவிகள் பள்ளி நேரத்தில் வெளியே செல்கின்றனர். அதேபோன்று இரவு நேரங்களில் சமூக விரோதிகள் பள்ளி வளாகத்தில் நுழைந்து மது அருந்தி வருகின்றனர். எனவே இந்த அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகேசன், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 5:22 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#14121

சேதமடைந்த சாலை

சாலை

கிருஷ்ணகிரி ஓசூர் 33-வது வார்டு சி.சி.நகர் (சந்திரசூடேஸ்வரர் நகருக்கு) செல்லும் சாலை சேதமடைந்து உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகளும், சில தனியார் பள்ளிகளும் உள்ளன. இந்த பகுதியில் சாலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் வாகனத்தில் செல்லும் பொழுது மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - சுரேஷ், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 5:21 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#14120

கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுமா?

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் தாலுகா ராயக்கோட்டை முதல்நிலை ஊராட்சி எச்சம்பட்டியில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் சாக்கடை நீருடன் மழைநீர் கலந்து தெருக்களில் ஓடுகிறது. இதனால் தெருக்களில் துர்நாற்றம் வீசுவதுடன் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. இதுகுறித்து ராயக்கோட்டை ஊராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே இங்கு கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும். -கவின், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick