Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
11 Sep 2022 4:08 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#14335

அகற்ற வேண்டிய ஆக்கிரமிப்புகள்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சி சர்கார் தோப்பில் இருந்து மின்னக்கல் செல்லும் பகுதியில் நீர் வழித்தட வாய்க்காலில் அந்த பகுதியினர் ஆக்கிரமித்து கட்டுமான பணிகளை செய்துள்ளனர். இதனால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் தேங்குகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆபத்சகாயேஸ்வரன், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Sep 2022 4:04 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#14334

ஏரி கரையில் அறிவிப்பு பலகை

மற்றவை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் அங்கிருந்து வரும் வெள்ளநீரால் பழையபாளையம் ஏரி நிரம்பியது. இந்த நிலையில் அங்குள்ள அங்காளம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த ஏரியை காண செல்கின்றனர். ஆனால் ஏரியின் கரையில் தடுப்பு சுவர் இல்லாததால் அவர்கள் ஏரிக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே பக்தர்களின் நலன் கருதி அங்கு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். -நாட்டரசன், பழையபாளையம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Sep 2022 3:16 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#14322

பஸ் வசதி தேவை

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே வகுத்தனூர் மற்றும் ஆண்டிப்பட்டி வழியாக கம்பைநல்லூர் மற்றும் அரூர் பகுதிக்கு இதுவரை பஸ் வசதி இல்லை. இதனால் இந்த வழியே செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த பகுதியில் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அருண் ராஜ், வகுத்தானூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Sep 2022 3:15 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#14321

தாமதமாகும் கால்வாய் பணி

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் இருந்து தர்மபுரி செல்லும் சாலையில் சாக்கடை கால்வாயை சீரமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டன. ஆனால் இந்த பணி கடந்த ஒரு மாத்திற்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இந்த வழியே செல்லும் பொது மக்கள், மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்துரு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Sep 2022 3:14 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#14320

அகற்ற வேண்டிய ஆக்கிரமிப்புகள்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே லளிகம் கிராமத்தில் நல்லம்பள்ளி- மிட்டாரெட்டிஅள்ளி செல்லும் சாலையின் இருபுறமும் சாலையை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கிறது. எனவே சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றி சாலையை விரிவுப்படுத்த வேண்டும். -தர்மன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Sep 2022 3:13 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#14319

சாக்கடை கால்வாய் வசதி

மற்றவை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே எம்.செட்டி அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் கொசு தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே சமந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். -குணசேகரன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Sep 2022 3:12 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#14318

குடியிருப்பு பகுதிகளில் புதர்கள்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் எங்கு பார்த்தாலும் புதர் செடிகள் அதிகம் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் அங்கு பாம்பு மற்றும் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் வெளியே நடமாட அச்சப்படுகின்றனர். எனவே இந்த புதர் செடிகளை அகற்றி தூய்மைபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆகாஷ், காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Sep 2022 3:11 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#14317

பஸ்களில் ஆபத்தான பயணம்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமானோர் தொழிற்சாலைகளுக்கும், பள்ளிகள், கல்லூரிகளுக்கும் பஸ்சில் சென்று வருகின்றனர். இதனால் ஓசூர்- தேன்கனிக்கோட்டை வழி தடத்தில் சென்று வரும் பஸ்களில் எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. மேலும் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியவாறு ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். எனவே ஓசூர்- தேன்கனிக்கோட்டை வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அன்பரசன், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Sep 2022 3:10 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#14316

சேதமடைந்த சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே தடத்தரை கிராமத்திற்கு செல்லும் சாலை அமைத்து பல வருடங்கள் ஆகிறது. இதனால் சுமார் 1 கி.மீ. தூரம் தார் சாலை சேதமடைந்து ஜல்லிகற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து அடிபடும் நிலை ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைத்து புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும். -சதீஷ், தடத்தரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Sep 2022 3:10 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#14315

சுகாதார சீர்கேடு

குப்பை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பஸ் நிலையத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் ஓட்டல் நடத்தி வருகின்றனர். சமையல் செய்வதற்காக டன் கணக்கில் மரங்களை வெட்டி விறகுகள் குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ளன. இந்த விறகுகளில் பூச்சிகள், பாம்புகள் இருப்பதால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் அச்சப்படுகின்றனர். மேலும் சுகாதார கேடும் ஏற்படுகிறது. எனவே இந்த விறகுகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -நாகராஜ், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 5:49 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#14146

செடி, கொடிகள் அகற்றப்படுமா?

மற்றவை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வண்டிப்பேட்டை அருகே பிணவறை உள்ளது. பிணவறையின் நுழைவாயிலில் செடி, கொடிகள் முளைத்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் அந்த இடத்தில் விஷ பூச்சிகள், பாம்பு ஆகியவற்றின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. எனவே அங்கு வரும் பொது மக்களின் நலன் கருதி செடி கொடிகளை அகற்றி தூய்மையாக வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தனசேகரன், வண்டிப்பேட்டை, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 5:47 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#14145

புதிய தார்சாலை அமைக்கப்படுமா?

சாலை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் தாலுகா செம்மாண்டப்பட்டி பஞ்சாயத்தை சேர்ந்த கானம்பாளையம் பகுதியில் இருந்து செம்மாண்டப்பட்டி செல்லும் தார் சாலை சேதமடைந்து பல ஆண்டுகள் ஆகிறது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் இந்த சாலையை சீரமைத்து புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும். -பழனிவேல், கானம்பாளையம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick