Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
12 Sep 2022 4:03 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#14536

சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நாகம்பட்டி கூட்டுரோடு முதல் ஊத்தங்கரை வரை சாலையின் இரு புறமும் கழிவு நீர் கால்வாய் மற்றும் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் மரப்பலகைகளை வைத்து கடைகளுக்கு வணிகர்கள், பொதுமக்கள் சென்று வருகின்றனர். எனவே சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சக்திவேல், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 4:02 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#14535

மரக்கிளை அகற்றப்படுமா?

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சாலையில் சக்தி விநாயகர் கோவில் அருகே மரக்கிளை முறிந்து சாலையில் ஆபத்தான நிலையில் தொங்கி கொண்டு உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே விபத்துகள் ஏதும் ஏற்படும் முன் இந்த மரக்கிளையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கார்த்திக், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 4:01 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#14534

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பஸ் நிலையம் அருகில் உள்ள வணிக வளாகத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளன. இங்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே வங்கி நிர்வாகமும், வணிக வளாக நிர்வாகமும் இருசக்கர வாகனங்களை நிறுத்த இடவசதி செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ஜெயக்குமார், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 3:59 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#14533

சுகாதாரமற்ற அலுவலகம்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் மாரண்ட‌அள்ளியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பத்திரப்பதிவுக்காக பொது மக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்த அலுவலகம் சுகாதாரமின்றியும், வர்ணம் பூசாமல் பழுதடைந்த நிலையிலும் உள்ளது. எனவே இந்த அலுவலகத்தை சுத்தம் செய்து வர்ணம் பூச அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?. -செந்தில்குமார். மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 3:58 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#14532

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சி 7-வது வார்டுக்கு உட்பட்ட சின்னமுத்து முதலி தெருவில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த தெருவில் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோவிந்தன், பாப்பாரப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 3:57 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#14531

ஆபத்தான மின் கம்பிகள்

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் முதல் நாகமரை வரை செல்லும் சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் ஏரியூர் அருகே உள்ள காமராஜாபேட்டையில் சாலையின் குறுக்கே மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் சாலையை கடக்கும் கனரக வாகனங்கள், போர்வெல் வாகனங்கள் மற்றும் கரும்பு, தீவனப்புல் ஏற்றி செல்லும் வாகனங்கள் இந்த கம்பியை உரசியவாறு செல்கிறது. எனவே விபத்துகள் ஏற்படும் முன் இந்த மின்கம்பிகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - நாகராஜ், ஏரியூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 3:54 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#14530

குண்டும், குழியுமான சாலை

சாலை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூர் கிராமத்தில் இருந்து மெயின் ரோட்டுக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் சில சமயங்களில் சிறு விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ரமேஷ், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Sep 2022 4:15 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#14340

கொசு தொல்லை

மற்றவை

சேலம் மாவட்டம் குப்தாநகர் பகுதியில் சமீபத்தில் பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. குறிப்பாக 7 மற்றும் 9-வது கிராஸில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் அந்த பகுதியில் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிபடுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் நோய் தொற்று ஏற்படும் முன் இப்பகுதியில் கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜான், குப்தாநகர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Sep 2022 4:14 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#14339

போக்குவரத்து இடையூறு

போக்குவரத்து

சேலம் மாவட்டம் கருப்பூரில் இருந்து குள்ளக்கவுண்டனூர் கிராமம் செல்லும் வழியில் ெரயில்வே மேம்பாலத்தின் கீழ்பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியே செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சதீஷ், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Sep 2022 4:11 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#14338

சாலையில் தேங்கும் மழைநீர்

மற்றவை

சேலம் மாவட்டம் வீரபாண்டியில் இருந்து மேற்கே நல்வராயன்பட்டி செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் இந்த சாலையில் தண்ணீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கந்தசாமி, வீரபாண்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Sep 2022 4:10 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#14337

சேறும் சகதியுமான பள்ளி வளாகம்

மற்றவை

சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா வெள்ளரி வெள்ளி கிராமத்துக்கு உட்பட்ட கொல்லப்பட்டியில் அங்கன்வாடி மையத்தில் உள்ள ஆழ்துளை குழாயில் ஊற்று ஏற்பட்டு தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. இதனால் பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகளும், பெற்றோர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த ஆழ்துளை குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சக்தி, கொல்லப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Sep 2022 4:09 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#14336

தார்சாலையாக மாற்றலாமே!

சாலை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே அணியாபுரத்தில் இருந்து கே.புதுப்பாளையம் செல்லும் சாலையில் தோளூர் அருகே சாலையை கடக்கும் வாய்க்காலில் பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்த பணி முடிந்து பாலத்தின் இருபுறங்களிலும் உள்ள மண்ணை சுத்தம் செய்து தார்சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் பஸ், லாரி, கார் போன்ற வாகனங்கள் செல்லும்போது மணல் துகள்கள் பறப்பதால் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே அந்த சாலையை தார்சாலையாக அமைக்க வேண்டும். -நவமணி, கே.புதுப்பாளையம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick