Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
13 Sep 2022 4:15 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#14748

குறுகலான பாலம்

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் இருந்து பாலக்கோடு செல்லும் மெயின் ரோட்டில் எல்லப்பன் பாலம் உள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாலம் குறுகலாக உள்ளது. இந்த வழியாகதான் பாலக்கோடு செல்லும் மெயின் ரோடு உள்ளது. இங்கு இருபுறமும் எதிரே வரும் வாகனங்கள் ஒதுங்க முடியாத நிலையில் உள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இந்த சிறு பாலத்தை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பொன்னுசாமி, எச்சம்பட்டி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2022 4:14 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#14745

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா சின்னமட்டாரப்பள்ளி ஊராட்சி பசவண்ண கோவில் அருகில் இருந்து ஓதி குப்பம், மேடுகம்பள்ளி வழியாக மேல்கோட்டாய் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் சிலநேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரகுபதி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2022 4:13 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#14743

பெரமண்ட ஏரி கால்வாய் சீரமைக்கப்படுமா?

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் இருந்து தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில் ஏ.புதூர் அருகே பெரமண்டஏரி பாசன கால்வாய் சேதமடைந்துள்ளது. இதனால் தண்ணீர் சாலையில் செல்கிறது. இந்த சாலையும் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே ஏரி பாசன கால்வாயையும், சாலையையும் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜேஷ்குமார், கெலமங்கலம், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2022 4:12 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#14742

சுகாதார கேடு

கழிவுநீர்

ஓசூர் பஸ் நிலையத்தில் அத்திப்பள்ளி செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்திற்கு அருகே இலவச கழிப்பறை போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. மேலும் கழிவுகளும், கழிவுநீரும் அங்கிருந்து வெளியேறி தேங்கி நிற்பதால் அப்பகுதியில் தூர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடும் ஏற்படுகிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் அவதியடைகின்றனர். எனவே இந்த கழிப்பறையை முறையாக பராமரிக்க வேண்டும். -பவானிசங்கர், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 5:19 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#14560

சாலை விரைந்து அமைக்கப்படுமா?

சாலை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து அனந்தகவுண்டம்பாளையம் செல்லும் வழியில் 2 மாதங்களாக தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையில் ஜல்லிகற்களை கொட்டி வைத்துள்ளனர். இதனால் அந்த வழியாக சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.. எனவே இந்த சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தனசேகரன், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 5:18 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#14559

முட்செடிகளை அகற்றலாமே

மற்றவை

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பேரூராட்சிக்குட்பட்ட கோணங்கிபாளையம் காளிப்பட்டி செல்லும் சாலையின் இருபுறமும் புதர்மண்டி முட்செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் உள்ளது. எனவே முட்செடிகளை அகற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோகுல்ராஜ், மல்லசமுத்திரம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 5:17 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#14558

சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா லத்துவாடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஹரிஹரன், லத்துவாடி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 5:16 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#14557

குண்டும், குழியுமான சாலை

சாலை

சேலம் சன்னியாசிகுண்டு பைபாஸ் செயின்ட் தாமஸ் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் சிறு சிறு விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ராஜி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 5:15 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#14556

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

சேலம் புறவழிச்சாலை கந்தம்பட்டி பைபாஸ் நிறுத்தத்தில், இளம்பிள்ளை சாலையில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு செல்ல சர்வீஸ் சாலை உள்ளது. மேலும் வெளியூர் பஸ்களும் இந்த வழியாகவே புதிய பஸ் நிலையம் செல்கின்றன. இந்த பகுதியில் உள்ள சில தனியார் கனரக வாகன விற்பனையாளர்கள் விற்பனைக்கு வரும் புதிய வாகனங்களை சாலையின் இருபுறமும் அடிக்கடி நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அசோகன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 5:14 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#14555

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

சேலம் பழைய பஸ் நிலையத்தில் கழிப்பறை வசதி ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் உள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் பஸ் நிலையத்தில் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் பஸ் நிலையத்தில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே கூடுதல் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி பஸ் நிலையத்தை தூய்மையாக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரவி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 5:13 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#14554

சேதமடைந்த சாலை

சாலை

சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம் அழகுசமுத்திரம் கிராமம் பவர்கேட் பின்புறமுள்ள மோட்டூர் காடு பகுதியில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்கள் பூலாம்பட்டியில் இருந்து இரும்பாலை செல்லும் தார்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை தற்போது குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவா, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 4:04 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#14537

சமூக விரோதிகளின் கூடாரம்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் நகரத்தில் வேளாண்மை துறை அலுவலர்கள் தங்கி பணிபுரிய வீடுகள் ஒதுக்கப்பட்டன. இந்த வீடுகள் பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்ததால் அலுவலர்கள் அதில் வசிக்கவில்லை. இதனால் இந்த வீடுகள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. எனவே இந்த வீடுகளை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவபிரகாஷ், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick