Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 Sep 2022 3:00 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#14946

பயன்படாத ஆழ்துளை கிணறு

பயன்படாத ஆழ்துளை கிணறுதண்ணீர்

தர்மபுரி மாவட்டம் ஜிட்டாண்டஅள்ளி அருகே மலைப்பகுதியில் அமைந்துள்ள கூலன் கொட்டாய் கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதால் கிராம மக்கள் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வந்தனர். தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் 2 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன. ஆனால் அதற்கு மோட்டார் பொருத்தாததால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஆழ்துளை கிணற்றுக்கு மோட்டார் பொருத்தி தண்ணீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2022 4:59 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#14778

சாக்கடை கால்வாய் பணி

கழிவுநீர்

சேலம் மாவட்டம் 11-வது தாலுகா பொன்னம்மாபேட்டை தில்லை நகர் மெயின் ரோடு பகுதியில் சாக்கடை கால்வாய் பணி கடந்த 1 வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. சாக்கடை கால்வாய் அமைக்க தோண்டிய குழிகள் சரியாக மூடப்படாததால் சாலை முழுவதும் மண் புழுதியாக உள்ளது. இதனால் தினமும் அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே கிடப்பில் உள்ள சாக்கடை கால்வாய் பணிகளை விரைந்து முடித்து சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2022 4:58 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#14777

பஸ் இயக்க கோரிக்கை

போக்குவரத்து

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இருந்து பேளுர் வழியாக பாப்பா நாயக்கன்பட்டி வரை செல்ல இரவு 9.50 மணிக்கு மேல் பஸ் வசதி இல்லை. கொரோனா முதல் அலைக்கு முன்பு வரை இரவு 10.20 மணிக்கு அரசு பஸ் இயங்கி வந்தது. இப்போது இந்த வழி தடத்தில் இயங்கவில்லை. இதனால் சேலம் போன்ற ஊர்களுக்கு வேலைக்கு சென்று வீடு திரும்பும் கூலி தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இரவு நேரத்தில் மீண்டும் இந்த பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பூவிழி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2022 4:57 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#14776

வேகத்தடை அமைக்கப்படுமா?

சாலை

சேலம் வின்சென்ட் ஆயுதப்படை எதிரில் சீரங்கபாளையம் மெயின்ரோட்டில் குமாரசாமிபட்டி சாலை, செக்கார தெரு பிரியும் இடத்தில் இருபுறமும் வேகத்தடை இல்லை. இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் வேகமாக செல்கிறார்கள். எனவே இந்த சாலையின் இருபுறமும் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கவின், குமாரசாமிபட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2022 4:55 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#14775

"தினத்தந்தி"க்கு நன்றி

ட்ரெண்டிங்

சேலம் குப்தா நகர் பகுதியில் சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் தேங்கி உள்ளதால் அந்த பகுதியில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் அந்த பகுதியில் கொசு மருந்து தெளித்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய "தினத்தந்தி"க்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். -ஜான், குப்தாநகர், சேலம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2022 4:54 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#14774

தூர்வார வேண்டிய ஓடை

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா தேங்கல்பாளையம் ஊராட்சியில் கொடாம்பு அணைக்கட்டில் இருந்து கண்ணாங்குட்டை செல்லும் ஓடையில் ஆனை பட்டியான் காலனி அருகில் குப்பைகள் தேங்கி உள்ளது. இதனால் தண்ணீர் செல்ல முடியாமல் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. இதனால் மழைநீர் ஊருக்குள் புகுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குப்பைகளை அகற்றி ஓடையை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பழனிவேல், தேங்கல்பாளையம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2022 4:53 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#14773

ஆபத்தான மின்கம்பி

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து வலையபட்டி செல்லும் சாலையில் உள்ள தனியார் கியாஸ் குடோன், அருகே செல்லும் மின்சார கம்பி அங்கு உள்ள புளிய மரக்கிளைகளுக்கு இடையே செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பச்சை மரங்களில் மின்சாரம் சுலபமாக பாயும் வாய்ப்பு உள்ளது. அந்த பகுதியில் ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகள் மேயும் பகுதியாகவும், பொது மக்களும் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜராஜன், மோகனூர், நாமக்கல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2022 4:52 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#14772

"தினத்தந்தி"க்கு பாராட்டு

ட்ரெண்டிங்

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பேரூராட்சி காளிப்பட்டி கிராமத்தில் 10 நாட்களுக்கும் மேல் குடிநீர் வரவில்லை என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் தற்போது இந்த பகுதிக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய "தினத்தந்தி"க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். -சிவா, காளிப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2022 4:22 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#14756

பன்றிகள் தொல்லை

மற்றவை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி 11-வது வார்டில் உள்ள காந்திநகரில் தெருநாய்கள், பன்றிகள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இந்த பகுதியில் வாகனத்தில் செல்பவர்களை ெதருநாய்கள் துரத்துவதால் விபத்துகளும் ஏற்படுகிறது. இதனால் பொது மக்களும், சிறுவர்களும் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே நகராட்சி அதிகாரிகள் இதனை பிடித்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சாமிக்கண்ணு, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2022 4:21 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#14755

பயன்பாட்டுக்கு வராத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் வழியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டது. இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரபடாமல் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன்கருதி இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -இளையராஜா, பொம்மிடி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2022 4:20 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#14754

பயணிகள் நிழற்கூடம் சேதம்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சித்திரப்பட்டி கிராமத்தில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. இந்த நிழற்கூடம் கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த நிழற்கூடத்தின் மேற்கூரை சேதமடைந்து உள்ளது. பக்கவாட்டு சுவரும் பலவீனமாக உள்ளதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்து உள்ளது. எனவே இந்த பயணிகள் நிழற்கூடத்தை இடித்து விட்டு புதியதாக பயணிகள் நிழற்கூடம் கட்ட அதிகாரிகள் நடகடிக்கை எடுக்க வேண்டும். -பிரவின், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2022 4:19 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#14753

சாலையில் கொட்டப்பட்ட ஜல்லிகற்கள்

சாலை

தர்மபுரி மாவட்டம் இண்டூர் ஊராட்சி பாறைக்கொட்டாய் கிராமத்தில் நாகாவதிஅணை கால்வாய் குறுக்கே குள்ளம்பட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் சாலை அமைப்பதற்காக ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு உள்ளது. ஆனால் சாலை அமைக்கப்படவில்லை. எனவே இந்த சாலையுடன் உயர்மட்ட மேம்பாலமும் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்தோஷ், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick