Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 Sep 2022 3:32 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#14972

பஸ்சில் ஆபத்தான பயணம்

பஸ்சில் ஆபத்தான பயணம்போக்குவரத்து

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த மல்லிக்குட்டை அமரகுந்தி பகுதியில் இயங்கி வரும் எஸ்-2 என்ற எண் கொண்ட டவுன் பஸ்சில் மாணவர்கள் ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். பள்ளி, கல்லூரி நேரத்தில் குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்படுவதால் இந்தநிலை ஏற்படுகிறது. எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து அந்த பகுதிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். -வினோத்குமார், ஓமலூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 3:31 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#14971

எரியாத தெருவிளக்குகள்

எரியாத தெருவிளக்குகள்மின்சாரம்

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஓலைப்பட்டி கிராமம் பாரப்பட்டி பகுதியில் தெருவிளக்குகள் அடிக்கடி பழுதடைவதால் எரிவதில்லை. இதனால் இரவில் பொதுமக்கள் நடப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. இதுபற்றி ஏற்கனவே புகார் கொடுத்தும் பலன் இல்லை. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் தெருவிளக்குகளை சரிசெய்து ஒளிர செய்ய வேண்டும். -முருகேசன், பாரப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 3:30 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#14969

ஆபத்தான மின்கம்பம்

ஆபத்தான மின்கம்பம்மின்சாரம்

சேலம் சூரமங்கலம் அடுத்த மல்லமூப்பம்பட்டி ஊராட்சி காந்திநகர் காளியம்மன் கோவில் தெருவில் ஒரு மின்கம்பம் மிகவும் சாய்ந்த நிலையில் வீட்டு சுவரையொட்டி செல்கிறது. இதனால் இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. மேலும் மின் கம்பம் சாய்ந்து இருப்பதால் காற்று அடிக்கும் போது மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி அருகில் உள்ள வீட்டில் இரும்பு கிரில் கம்பிகளை உரசுகின்றன. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து மின்சார வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 3:28 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#14967

குண்டும், குழியுமான சாலை

சாலை

நாமக்கல் மாவட்டம் பரமத்தி ரோடு போதுப்பட்டியில் இருந்து கொங்கு நகருக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக காணப்படுகிறது. 20 ஆண்டுகள் ஆகியும் அந்த பகுதிக்கு செல்லும் சாலையை புதுப்பிக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் நடவடிக்கை சாலையை புதுப்பிக்க முன் வரவேண்டும். -சத்தியமூர்த்தி, போதுப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 3:28 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#14966

தலைகீழாக தொங்கும் குழல் விளக்கு

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டு பகுதியில் உள்ள ஒரு மின் கம்பத்தில் குழல் விளக்கு (டியூப் லைட்) ஒன்று தலைகீழாக தொங்கி கொண்டிருக்கிறது. இதனால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்ல சிரமப்படுகின்றனர். எனவே தலைகீழாக தொங்கிக்கொண்டு இருக்கும் டியூப் லைட்டை மின்வாரிய துறையினர் சரிசெய்ய வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -கமலக்கண்ணன், பொத்தனூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 3:26 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#14958

குவிந்து கிடக்கும் குப்பைகள்

குப்பை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திக்குளத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் அந்த பகுதியினர் குப்பைகளை கொட்டுவதற்காக ஒரு குப்பை தொட்டி வைக்கப்பட்டது. ஆனால் அந்த தொட்டி தற்போது கவிழ்ந்து கிடக்கிறது. இதனால் அங்கு குப்பைகள் குவிந்து கிடக்கிறது. எனவே குப்பை தொட்டியில் குப்பைகள் கொட்டுவதற்கு ஏற்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குணசேகரன், துத்திக்குளம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 3:09 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#14955

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் உள்ள ஊத்தங்கரை மற்றும் தர்மபுரி பிரிவு ரோட்டில் சாக்கடை கால்வாய் செல்கிறது. அந்த சாக்கடை கால்வாய் பல நாட்களாக தூர்வாரப்படாததால் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. மேலும் மழைக்காலங்களில் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து சாலையில் ஓடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. சுகாதாரமற்று காணப்படும் அந்த பகுதியில் சாக்கடை கால்வாயை தூர்வாரி கழிவுநீர் கால்வாயில் தேங்காமல் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். -வேலாயுதம், மத்தூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 3:08 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#14954

வீணாகும் குடிநீர்

வீணாகும் குடிநீர்தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள காரகுப்பத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஒகேனக்கல்லில் இருந்து பெரிய குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது அந்த குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சரி செய்து தண்ணீர் வீணாகுவதை தவிர்க்க வேண்டும். -பரணி, காரகுப்பம், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 3:07 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#14952

செயல்படாத இ-சேவை மையம்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கெங்கபிராம்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இ சேவை மையம் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த மையம் அமைத்த நாளில் இருந்து இதுவரை செயல்படவில்லை. மேலும் அந்த பகுதி மக்களுக்கு இதுபோல் ஒரு சேவை மையம் இருப்பதாகவே தெரியவில்லை. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. இதனால் தனியார் கணினி மையத்தை தேடி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த சேவை மையம் செயல்பட சம்பந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 3:04 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#14949

இருள் சூழ்ந்த பஸ் நிறுத்தம்

இருள் சூழ்ந்த பஸ் நிறுத்தம்மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் தடங்கம் ஊராட்சியில் சேலம்-தர்மபுரி பைபாஸ் பஸ் நிறுத்தம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. தற்போது இந்த மின் விளக்கு பழுதடைந்து பல மாதங்களாகியும், சரி செய்யப்படாமல் உள்ளது. இதனால் பஸ் நிறுத்தம் இருள் சூழ்ந்து காட்சி அளிக்கிறது. மேலும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே உயர்கோபுர மின்விளக்கை சரிசெய்து ஒளிர செய்ய வேண்டும். அருள், தடங்கம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 3:03 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#14948

தார்சாலை அமைக்க வேண்டும்

தார்சாலை அமைக்க வேண்டும்சாலை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் பஸ் நிலையம் முன்பு உள்ள இந்திரா நினைவு குடியிருப்பில் பல ஆண்டுகளாக மண் சாலையாகவே காணப்படுகிறது. மழைக்காலங்களில் இந்த வழியே ஏராளமான வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும் நடந்து செல்பவர்கள் கடும் சிரமப்பட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தார்சாலையாக அமைக்க பல முறை மனு அளித்தும், குறைதீர்ப்பு முகாம்களில் குறைகளை கூறியும் எந்த ஒரு பயனும் இல்லை. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தார்சாலை அமைக்க வேண்டும். -த.சந்தோஷ்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 3:02 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#14947

துருப்பிடித்த மின்கம்பம்

துருப்பிடித்த மின்கம்பம்மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி நான்கு ரோடு அருகே பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள இடத்தில் பஞ்சப்பள்ளி சாலையோரம் இரும்பு மின் கம்பம் உள்ளது. அந்த மின் கம்பம் துருப்பிடித்து பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் வேகமாக காற்று அடித்தால் கூட எந்த நேரத்திலும் மின்கம்பம் சாய்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது. அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு அந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சாய் முரளி, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick