Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
15 Sep 2022 5:37 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#15201

சைக்கிள் நிறுத்தமாக மாறிய பயணிகள் நிழற்கூடம்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள வெண்டாங்கி பஸ் நிறுத்தத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பயணிகள் நிழற்கூடம் ஒன்று கட்டப்பட்டது. அங்கு தற்போது சைக்கிள்கள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு சைக்கிள் நிறுத்தமாக (ஸ்டாண்டு) மாறி வருகிறது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலில் நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அந்த நிழற்கூடத்தில் சைக்கிள்கள் நிறுத்தப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முனுசாமி, வெண்டாங்கி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2022 5:35 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#15200

குடிநீர் வழங்கப்படுமா?

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பேரூராட்சிக்குட்பட்ட காளிப்பட்டி கிராமத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குறிப்பாக குழாயில் குடிநீர் வரும் நேரத்தில் சிலர் மின் மோட்டாரை பயன்படுத்துவதால் மற்றவர்களுக்கு குடிநீர் சரிவர கிடைப்பது இல்லை. இதனால் பொதுமக்கள் பலர் காலிக்குடங்களுடன் அலைய வேண்டி இருக்கிறது. எனவே மின் மோட்டார் பயன் படுத்தி குடிநீர் எடுப்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவா, மல்லசமுத்திரம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2022 5:35 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#15199

தெருநாய் தொல்லை

மற்றவை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் சேலம்-கோழிக்கால் நத்தம் பிரிவு ரோட்டில் தெருநாய்கள் தொல்லை சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இந்த நாய்கள் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்துகிறது. மேலும் வாகனங்கள் செல்லும் போது குறுக்கே வருவதால் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே தெருநாய்களை பிடித்து செல்ல நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மோகன், திருச்செங்கோடு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2022 4:42 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#15186

சிமெண்டு சாலை புதுப்பிக்கப்படுமா?

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் தாலுகா ராயக்கோட்டை ஊராட்சியில் உள்ள மஜித் தெருவின் ஆரம்பம் முதல் சின்னதிருப்பதி கோவில் வரை உள்ள சிமெண்டு சாலை முழுவதும் சேதமடைந்து, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சிமெண்டு சாலையை சீரமைத்து புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சையத்அசார், ராயக்கோட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2022 4:41 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#15185

தெருவிளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் கவுண்டனூர் ஊராட்சிக்கு உட்பட்டது மேட்டு கொட்டாய் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 100 வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் தொடர்ந்து பல நாட்களாக இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் பொதுமக்களும், சிறுவர்களும் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் திருட்டு பயமும் அதிகமாக உள்ளது. எனவே இந்த பகுதியில் தெருவிளக்குகளை எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? சிவகுமார், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2022 4:40 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#15184

மண் அரிப்பை சரி செய்ய வேண்டும்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் தொடர் மழை காரணமாக கிராம சாலை மற்றும் நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறி விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மண் அரிப்பை சரி செய்வதுடன், சாலையில் ஆங்காங்கே காணப்படும் மண் திட்டுக்களையும் அகற்ற வேண்டும். -ரகுபதி, பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2022 4:36 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#15183

குண்டும், குழியுமான சாலை

சாலை

ஓசூர் பேரண்டப்பள்ளி பகுதியில் 4 சக்கர வாகன ஷோரூம்கள் நிறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாகவும், தேசிய நெடுஞ்சாலை அருகே இருப்பதாலும் இப்பகுதியில் வாகன போக்குவரத்தும், டிப்பர் லாரிகளின் போக்குவரத்தும் அதிகளவில் உள்ளன. இந்தநிலையில் இங்குள்ள சர்வீஸ் ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ஆனந்தன், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2022 4:35 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#15182

சுற்றுச்சுவர் வேண்டும்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வாரச்சந்தை வளாக பகுதியில் உள்ள நல்லம்பள்ளி தாசில்தார் அலுவலகம் மற்றும் தாசில்தார் குடியிருப்பு பகுதிகளை சுற்றியும் முறையாக சுற்றுச்சுவர் கட்டப்படாததால் பாம்புகள், விஷ பூச்சிகள் அலுவலக வளாக பகுதிக்கு படையெடுத்து வருகிறது. மேலும் இரவு நேரத்தில் சமூக விரோத செயல்களும் நடக்கிறது. எனவே தாசில்தார் அலுவலகம் சுற்றிலும் விரைந்து சுற்று சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2022 4:29 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#15181

ரவுண்டானா அமைக்கப்படுமா?

மற்றவை

தர்மபுரி மாவட்டம் சேலம்-அரூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சாமியாபுரம் கூட்ரோடு. இங்கிருந்து சேலம், வேலூர், அரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்த கூட்ரோடு பகுதியில் ரவுண்டானா இல்லாததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் விபத்துகளும் நடக்கிறது. எனவே விபத்துகளை தடுக்க அதிகாரிகள் இங்கு ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -செந்தில்குமார், பாப்பிரெட்டிப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2022 4:28 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#15180

தார்சாலை அமைக்க வேண்டும்

சாலை

தர்மபுரி மாவட்டம் ஜிட்டாண்டஅள்ளி ஊராட்சி கூலன்கொட்டாய் கிராமத்தில் மண் சாலை உள்ளது. மழை காலங்களில் இந்த சாலை சேறும் சகதியுமாக மாறி, போக்குவரத்துக்கு உபயோகமற்றதாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த பகுதி மக்கள் சாலையை சீரமைத்து தார் சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் -ரமேஷ், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2022 4:27 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#15179

ஆபத்தான டிரான்ஸ்பார்மர்

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் இருந்து மல்லாபுரம் செல்லும் சாலையில் டிரான்ஸ்பார்மர் புதர்கள் சூழ்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இங்கு ஆடு, மாடுகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த புதர்களை அகற்றி டிரான்ஸ்பார்மரை முறையாக பராமரிக்க மின்வாரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மூர்த்தி, மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 3:32 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#14974

தெருநாய்கள் தொல்லை

தெருநாய்கள் தொல்லைமற்றவை

சேலம் செவ்வாய்பேட்டையில் தேவாங்கபுரம், விரிவாக்க பகுதி, மரக்கடைவீதி, அரசு ஆஸ்பத்திரி பின்புறம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் நீண்ட நாட்களாக அந்த பகுதியில் மக்கள் சாலையில் நடந்து செல்லவே அச்சப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகளை துரத்தி துரத்தி தெருநாய்கள் கடித்து வருகின்றன. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick