Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 Sep 2022 4:52 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#15379

பயன்பாட்டுக்கு வராத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் லளிகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பொதுமக்கள் தேவைக்காக குறைவான விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்காக பல லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் (ஆர்.ஓ.) அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை இதனை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு பூட்டி வைத்துள்ளனர். இதனால் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் துருப்பிடித்து வீணாகி வருகிறது. எனவே குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Sep 2022 2:49 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#15339

சாலையை சீரமைக்கலாமே!

சாலை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு-பெல்ரம்பட்டி சாலையில் செங்கோடப்பட்டி ெரயில்வே கேட் பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -மணி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Sep 2022 2:48 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#15338

புதர்களை அகற்ற வேண்டும்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் முதல் நாகமரை வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் நெருப்பூர் பகுதியில் சாலை ஓரம் ஆள் உயரத்திற்கு செடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. மேலும் இந்த பகுதிகளில் பாம்புகள், விஷப்பூச்சிகள் தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் பிரதான சாலையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - பாலாஜி, ஏரியூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Sep 2022 2:19 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#15305

நோய் பரவும் அபாயம்

நோய் பரவும் அபாயம்கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் வெள்ளிச்சந்தை செல்லும் சாலையில் உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் தூர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை தூர்வாரி கழிவுநீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரவி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Sep 2022 2:16 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#15301

நடவடிக்கை எடுக்கப்படுமா?

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் இருந்து சின்னட்டி, தாவரக்கரை, விருப்பாச்சி நகர், எஸ்.டி. காலனி, ஒன்னுகுறுக்கை, மல்லேபாளையம், பொம்மதாத்தனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லை. இதன் காரணமாக அவர்கள் பள்ளி, கல்லூரிக்கு தாமதமாக செல்வதால் அவர்களின் கல்வி பாதிக்கிறது.. எனவே மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் டவுன் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜேஷ்குமார், கெலமங்கலம், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Sep 2022 2:15 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#15298

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள சிகரலப்பள்ளியில் இருந்து பிக்கானூர், கோட்டூர் வழியாக அத்திமரத்துபள்ளம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆனந்த், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Sep 2022 2:14 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#15296

சேதமடைந்த சாலை

சாலை

ஓசூர் தர்கா பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் சர்க்கிள் பகுதியில் இருந்து ஓசூர் நோக்கி செல்லும் சர்வீஸ் ரோடு சேதமடைந்து உள்ளது. மேலும் சாலை நடுவே மிகப்பெரிய பள்ளமும் இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், -மணி, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Sep 2022 2:13 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#15293

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

ஓசூரில் உள்ள வெங்கடேஷ் நகரில் முறையான சாலை வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வாகனங்களில் செல்ல கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் இங்குள்ள குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைத்து, முறையான சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -பாலாஜி, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2022 5:41 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#15205

பயன்பாட்டுக்கு வராத சுகாதார நிலையம்

மற்றவை

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பேரூராட்சி 2-வது வார்டில் உள்ள காளியம்மன் கோவில் தெருவில் பொது சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார நிலையம் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி செயல்படாமல் உள்ளது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் பொது மக்களின் நலன் கருதி சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, ஆட்டையாம்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2022 5:40 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#15204

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பை

சேலம் மாவட்டம் அழகாபுரம் நகரமலை அடிவாரம் பகுதியில் கடந்த சில மாதங்களாக குப்பை தொட்டி இல்லாத காரணத்தால் குப்பைகளை சாலைகளில் வீசி வருகின்றனர். அழகாபுரம் தண்ணீர் தொட்டி பகுதி முதல் நகரமலை அடிவாரம் வரை உள்ள அனைத்து இடங்களிலும் குப்பை தொட்டிகள் இல்லாததால் அந்த பகுதியில் தூர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் அதிகரித்துள்ளது. எனவே சுகாதார சீர்கேட்டை தடுக்க இங்கு குப்பை தொட்டிகளை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சுதாகர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2022 5:39 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#15203

விரைந்து முடிக்கப்படுமா?

கழிவுநீர்

சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தலைவாசல் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்வதற்காக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டது. அப்போது மழைநீர் செல்வதற்காக வடிகால் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த வடிகால் முறையாக அமைக்கப்படாததால் மழைநீரும், கழிவுநீரும் கலந்து செல்கிறது. இதனால் அந்த பகுதியில் தூர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் அதிகரித்துள்ளது. எனவே இந்த வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -டேவிட், தலைவாசல், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2022 5:38 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#15202

குடிநீர் வழங்க கோரிக்கை

தண்ணீர்

சேலம் தாதகாப்பட்டி 55-வது வார்டு திருஞானம் நகர் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்து 10 நாட்களுக்கும் மேலாகிறது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீருக்காக தினந்தோறும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் முன்பு போல் வாரம் ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -துரை சந்திரன், தாதகாபட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick