Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
17 Sep 2022 3:23 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#15568

எரியாத உயர்கோபுர மின் விளக்குகள்

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் மாரண்ட‌அள்ளி அருகே உள்ள குட்லான‌அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி அலுவலகம் அருகில் உள்ள உயர்மின் கோபுர மின்விளக்கு சில நாட்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் வெளியே செல்ல இந்த பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அதனால் பழுதடைந்த உயர்மின் கோபுர மின் விளக்கை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சரவணன், மாரண்ட‌அள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 3:22 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#15567

எரியாத உயர்கோபுர மின் விளக்குகள்

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கொட்டுமானஅள்ளி கிராமத்தில் 3 ரோடு பிரிவு சாலையில் உள்ள உயர் மின் கோபுர மின் விளக்கு எரியாததால் இப்பகுதி இருளில் மூழ்கி உள்ளது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. இது குறித்து பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த உயர்மின் கோபுர மின் விளக்கை எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பாபு, பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 3:21 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#15566

பழுதடைந்த குடிநீர் தொட்டி

தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா எக்கூர் ஊராட்சி ஆண்டியூர் தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தின் அருகில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மின் மோட்டாருடன், குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டி பல ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படுகிறது. மின் மோட்டார் பெட்டி துருப்பிடித்து காட்சியளிக்கிறது. இந்த குடிநீர் தொட்டி மற்றும் மின்மோட்டார் பெட்டியை பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். -சுதாகர், எக்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 3:20 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#15565

தெரு நாய்கள் தொல்லை

மற்றவை

கிருஷ்ணகிரியில் சப்-ஜெயில் ரோடு மற்றும் திருவண்ணாமலை ரோட்டில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அதிகாலையில் நடைபயிற்சி செல்பவர்களை துரத்தி சென்று கடிக்கிறது. மேலும் வாகனங்களில் செல்பவர்களை துரத்துவதால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே நகராட்சி அதிகாரிகள் இந்த தெரு நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா? -மணிகண்டன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 3:18 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#15564

குண்டும், குழியுமான சாலை

சாலை

ஓசூர் தர்கா பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் சர்க்கிள் பகுதியிலிருந்து ஓசூர் நோக்கி செல்லும் சர்வீஸ் ரோடு சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் சாலை நடுவே மிகப்பெரிய பள்ளமும் இருக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் அவதியடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் -மணி, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 3:18 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#15563

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து திருப்பத்தூர் கூட்ரோடு செல்லும் நெடுஞ்சாலையோரத்தில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பஸ்கள் வந்தால் ஒதுங்க கூட இடம் கிடைப்பது இல்லை. எனவே அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்தோஷ், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Sep 2022 5:23 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#15409

விபத்தை ஏற்படுத்தும் சாலை

சாலை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து நடுப்பட்டி செல்லும் தார் சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. ரோட்டில் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளதால் விபத்தை ஏற்படுத்தும் சாலையாக மாறி விட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும். -ராஜேஷ், நரிக்கள்கரடு, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Sep 2022 5:15 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#15407

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள நடந்தை மாதா கோவில் பஸ் நிறுத்தம் அருகே கபிலர் மலையில் இருந்து கந்தம்பாளையம் வரை காவேரி குடிநீர் நீர்த்தேக்க தொட்டியின் மூலம் வினியோகம் நடைபெற்று வருகிறது. நடந்தை மாதா கோவில் பஸ் நிறுத்தம் அருகே தார் சாலை ஓரத்தில் கடந்த 10 நாட்களாக குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிவரும் வருவதால் கந்தம்பாளையம் பகுதியில் குடிநீர் வினியோகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உடைந்த குடிநீர் குழாயை சீர் செய்ய வேண்டும் என அப்பகுதி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Sep 2022 5:14 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#15406

உடைந்த குடிநீர் குழாய்

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் மணியனூரில் மத்திபாளையம் பிரிவு சாலை அருகே உள்ள குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதன் அருகே கழிவு நீர் குட்டை உள்ளதால் குடிநீர், கழிவுநீருடன் கலந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா? -பிரவின், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Sep 2022 5:01 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#15397

பராமரிப்பு இல்லாத சுகாதார வளாகம்

மற்றவை

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா தொட்டியனூர், 4-வது வார்டில் உள்ள பொது சுகாதார வளாகம் பராமரிப்பு இல்லாததால் பாழடைந்த நிலையில் உள்ளது. மேலும் அங்கு புதர்மண்டி கிடக்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் பல முறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். -விஜய், ஓமலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Sep 2022 5:00 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#15396

கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்

போக்குவரத்து

சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து காலை 9 மணிஅளவில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டுக்கு ஒரே ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. அந்த ஒரு பஸ்சில் அதிகளவில் கல்லூரி மாணவர்கள் பயணிக்க வேண்டியது உள்ளது. இதனால் அவர்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும் அடுத்த பஸ்சுக்காக பொதுமக்களும் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் நலன் கருதி கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா? -புவனேஷ்வரி, எடப்பாடி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Sep 2022 4:59 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#15394

"தினத்தந்தி"க்கு பாராட்டு

ட்ரெண்டிங்

சேலம் மாவட்டம் எருமாபாளையம் ஊராட்சி தேசிய நெடுஞ்சாலையோரம் காமராஜர் சிலை அருகே உள்ள சிக்னலில் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக சிக்னல் விளக்குகள் எரியவில்லை. இது குறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதைத்தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் தற்போது சிக்னல் விளக்குகளை சரி செய்துள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட "தினத்தந்தி"க்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். -கஸ்தூரி, எருமாபாளையம், சேலம்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick