Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 Sep 2022 4:03 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#15776

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் இருந்து கிருஷ்ணகிரி மெயின்ரோட்டில் போடம்பட்டி பிரிவு பாதை வரை சுமார் 2 கி.மீ தூரம் தார்சாலை சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும். -கிஷோர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 4:02 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#15775

சாலையில் சுகாதார கேடு

குப்பை

ஓசூர் மாநகராட்சி விகாஸ் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் பொதுமக்கள் குப்பை தொட்டியில் குப்பைகளை கொட்டாமல் சாலையிலேயே கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சாலையில் கிடக்கும் குப்பைகளை அள்ளுவதோடு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். -மோகனா, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 4:01 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#15774

வீணாகும் மின்சாரம்

மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் தமிழக, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு செல்லும் வகையில் மூன்று சாலைகள் பிரியும் குப்பம் ஜங்சனில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இந்த மின்விளக்கு 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருப்பதால் மின்சாரம் வீணாகிறது. பகல் நேரமும் தொடர்ந்து மின் விளக்கு எரிகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தனிக்கவனம் செலுத்தி இரவு நேரத்தில் மட்டும் மின்விளக்கு எரிய செய்ய வேண்டும். -சதிஷ், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 4:19 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#15592

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

மற்றவை

மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் மேச்சேரி, காளிப்பட்டி வழியாக மானத்தால் ஏரி, தொளசம்பட்டி ஏரி, பெரியேரிபட்டி ஏரி ஆகிய ஏரிகளில் நிரப்பப்படுகிறது. இந்த ஏரிகளை சுற்றி ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி மேற்கண்ட ஏரிகளுக்கு தடையின்றி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா? -முருகேசன், மேட்டூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 4:17 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#15591

சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்

கழிவுநீர்

சேலம் மாநகராட்சி 36-வது வார்டுக்குட்பட்ட அம்மாபேட்டை சத்தியா நகரில் தனியார் நர்சரி பள்ளி அருகில் சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -விஜயராஜன், அம்மாபேட்டை, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 4:16 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#15590

குண்டும், குழியுமான சாலை

சாலை

சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் இருந்து வனவாசி செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் சாலையில் இரவு நேரங்களில் வாகனத்தில் செல்வோர் பள்ளங்கள் இருப்பது தெரியாததால் கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா? -கதிர்ராஜ், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 4:11 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#15589

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சியில் நங்கவள்ளி மெயின் ரோட்டில் தொளசம்பட்டி பிரிவு சாலை அருகே உள்ள குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக ரோட்டில் ஓடுகிறது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பழனி, தாரமங்கலம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 4:10 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#15588

சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்

மற்றவை

நாமக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் என்.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் கழிவறை அருகே இருக்கும் சுற்றுச்சுவர் மீது வெளிப்புறத்தில் உள்ள சீமை கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து சாய்ந்து உள்ளன. எனவே இந்த சீமை கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்திரன், என்.புதுப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 4:09 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#15587

உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா ?

மின்சாரம்

நாமக்கலில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் 3 கி.மீ. தொலைவில் உள்ளது வகுரம்பட்டி பிரிவு சாலை. இங்கிருந்து 1 கி.மீ. தொலைவில் சிங்கிலிபட்டி கிராமம் உள்ளது. இங்கு 4 சாலைகள் சந்திக்கும் இடத்தில் மின் விளக்குகள் இல்லாததால் மாலை நேரங்களில் பஸ் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் திருட்டு அச்சமும் உள்ளது. எனவே இந்த பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைப்பார்களா ? -விஜயன், சிங்கிலிபட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 4:08 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#15585

உடைந்த குடிநீர் குழாய்

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே வெட்டுக்காடு பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கு செல்லும் பிரதான குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் கசிந்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அப்பகுதியில் தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா? -குணாளன், வெட்டுக்காடு, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 3:26 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#15570

சேதமடைந்த சாலை

சாலை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா கம்மம்பட்டி கிராமத்தில் சோளியானூர் அம்பேத்கர் நகரில் உள்ள சாலை 5 வருடங்களும் மேலாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-ஆனந்த குமார், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 3:23 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#15569

சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பஸ் நிறுத்தம் பகுதியில் பைபாஸ் சாலையின் இருபுறமும் வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் இல்லாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பைபாஸ் சாலையின் இருபுறமும் சாக்கடை கால்வாய்கள் அமைத்து கழிவுநீர் தேங்காமல் வெளியேற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -மணி, நல்லம்பள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick