Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
12 Jan 2025 4:55 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#52981

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

சேலம் சாரதா காலேஜ் அருகில் ராமகிருஷ்ணா ரோடு உள்ளது. இந்த சாலையையொட்டி உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்தவர்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமம் அடைகின்றனர். இதனால் இந்த வழியை பயன்படுத்துவோர் முகம் சுழித்தவாறு செல்கின்றனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் அடைப்பு ஏற்பட்டு உள்ள கால்வாய்யை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சசிகுமார், தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Jan 2025 4:54 PM GMT
Mr.Mohan | சேலம்-தெற்கு
#52979

கழிவுநீரில் கலக்கும் திடக்கழிவுகள்

கழிவுநீர்

சேலம் அன்னதானப்பட்டி புட்டா மிஷின் ரோட்டில் பொது சுகாதார வளாகம் உள்ளது. இங்கு மொத்தம் 20 கழிப்பறைகள் உள்ளன. இந்த சுகாதார வளாகத்தின் கழிவுநீர் கலக்கும் செப்டிங் டேங்கில் இருந்து கழிவுநீர், திடக்கழிவுகள் வெளியேறி சாதாரண கழிவுநீர் கால்வாயில் கலந்து செல்கிறது. திடக்கழிவு, கழிவுநீர் இரண்டும் கலந்து செல்வதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மூக்கை மூடியபடி சென்று வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடையில் திடக்கழிவுகள் செல்லாத வகையில் அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Jan 2025 4:43 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#52975

சுகாதார சீர்கேடு

குப்பை

நாமக்கல்-திருச்சி சாலையில் தனியார் ஓட்டல் அருகே சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இங்கு மலைபோல் குப்பைகள் குவிக்கப்பட்டு இருப்பதால், மழை பெய்தால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் மூக்கை பிடித்து செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. எனவே சாலையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ராமன், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Jan 2025 4:42 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#52974

அவசர ஊர்திகளுக்கு கால விரயம்

மற்றவை

ராசிபுரத்தில் இருந்து புதுப்பாளையம் செல்லும் வழித்தடத்தில் அதிகளவில் வேகத்தடைகள் உள்ளன. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். இந்த வழித்தடத்தில் அவசர நிலையில் செல்லும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு போன்ற வாகனங்களுக்கு கால விரயம் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் அத்தியாவசிய இடங்களில் மட்டும் வேகத்தடைகளை வைத்துவிட்டு பிற இடங்களில் அகற்றினால் அவசர ஊர்திகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் ஏதுவாக இருக்கும். -தேவேந்திரன், ராசிபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Jan 2025 4:41 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#52973

வேகத்தடை அமைக்கலாமே!

சாலை

எலச்சிபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து பஸ் நிறுத்தங்களிலும் வேகத்தடை இல்லை. இதேபோல் எலச்சிபாளையம்- மோர்பாளையம் பிரிவு ரோட்டில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் பள்ளிக்கூடம் உள்ள பகுதி என்பதால் மாணவ, மாணவிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்து உள்ளன. எனவே இந்த பகுதியில் வேகத்தடை அமைத்து தர வேண்டும் என்பதே பெற்றோர், ஆசிரியர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. -மணி, எலச்சிபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Jan 2025 4:41 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#52971

நிழற்கூடத்தை ஆக்கிரமித்த செடி, கொடிகள்

மற்றவை

கொல்லிமலை சோளக்காட்டில் இருந்து செம்மேடு செல்லும் பிரதான சாலையில் திண்டுப்பட்டி கிராமம் உள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள நிழற்கூடத்தை சுற்றி செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் வெயில், மழையில் வருகிற பொதுமக்கள் அங்கு சிறிது நேரம் நின்று செல்ல முடியாத அவல நிலை இருந்து வருகிறது. மேலும் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளும் அவதியடைகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த நிழற்கூடத்தை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுந்தரராமன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Jan 2025 4:38 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#52970

பயணிகள் அச்சம்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் பஸ் நிலையம் பகுதியில் அனுமதியின்றி லாரிகள், பள்ளி வாகனங்களை நிறுத்துவதால் பயணிகளுக்கும், பஸ்களுக்கும் இடையூறாக உள்ளது. மேலும் இரவு வேளையில் நிறுத்தப்படும் லாரிகள் பகல் பொழுதில் அதிவேகமாக பஸ் நிலைய வளாகத்தில் இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் அச்சத்துடன் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். எனவே பஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்படும் லாரிகள், பள்ளி வாகனங்களை அங்கு நிறுத்தாமல் இருக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குணா, மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Jan 2025 4:36 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#52968

சுகாதார சீர்கேடு

மற்றவை

தர்மபுரி கடைவீதியில் இருந்து செல்லும் எஸ்.வி. சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி உள்ளது. இந்த அரசு மருத்துவக்கல்லூரியின் எதிரே உள்ள சாலையின் ஓரத்தில் மயானம், இறந்தவர்களின் உடல்களை எரிக்கும் தகன மேடை உள்ளன. இந்த பகுதியில் இறந்தவர்களின் உடல்கள் இறுதிச்சடங்கு நடத்துவதற்காக கொண்டு வரப்படும் போது பயன்படுத்தும் பல்வேறு பொருட்கள் மூட்டைகளாக கட்டப்பட்டு சாலையின் ஓரங்களில் ஆங்காங்கே கொட்டப்படுகின்றன. இவை முறையாக அகற்றப்படாமல் தீ வைத்து எரிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை தடுக்க அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Jan 2025 4:35 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#52967

சுரங்கப்பாதை பயன்பாட்டிற்கு வருமா?

சாலை

தர்மபுரி-பென்னாகரம் சாலையில் குமாரசாமிப்பேட்டை ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இந்த சுரங்கப்பாதையில் கழிவுநீர் தேங்கி நிற்பதாலும், அந்தப் பகுதி புதர் மண்டி இருப்பதாலும் பொதுமக்கள் இதுவரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே இந்த சுரங்கப்பாதையை சீரமைத்து இருசக்கர வாகனங்கள் சென்று வரும் வகையில் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சுரங்கப்பாதையை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகேசன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Jan 2025 4:34 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#52966

சுகாதார வளாகம் பராமரிக்கப்படுமா?

மற்றவை

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் பெங்களூரு, ஓசூர் பஸ்கள் நின்று செல்ல கூடிய இடத்தின் அருகில் ஆண்களுக்கான சுகாதார வளாகம் இயங்கி வருகிறது. இந்த வளாகம் முறையாக பராமரிக்கப்படாததன் காரணமாக கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அதே போல திறந்த வெளியில் பஸ் நிலையத்தில் பயணிகள் பலரும் சிறுநீர் கழித்து செல்வதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே பஸ் நிலைய வளாகத்தில் உள்ள சுகாதார வளாகத்தை முறையாக பராமரிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பாபு,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Jan 2025 4:33 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#52965

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி நகரில் சென்னை சாலை, பெங்களூரு சாலை, சேலம் சாலையில் பகல் நேரங்களில் சரக்கு லாரிகள் நீண்ட நேரம் நிறுத்தப்படுகின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக இந்த சாலைகளில் உள்ள பஸ் நிறுத்தங்களில் தனியார் பஸ்கள் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதே போல ஆட்டோக்களும் இந்த பகுதியில் நீண்ட நேரம் சாலையில் நிறுத்தப்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகிறார்கள். எனவே கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானாவை சுற்றி உள்ள சாலைகளில் பஸ் நிறுத்தங்களில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Jan 2025 4:33 PM GMT
Mr.Mohan | ஊத்தங்கரை
#52964

குண்டும், குழியுமான சாலை

சாலை

ஊத்தங்கரை காரப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட ஆதிதிராவிடர் காலனி பகுதிக்கு செல்லும் பிரதான சாலையின் நுழைவு பகுதியில் இருந்து மாரியம்மன் கோவில் பகுதி வரை உள்ள சிமெண்டு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே சேதமடைந்த சிமெண்டு சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் முன்வர வேண்டும். -சாமி, காரப்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick