Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 Jan 2025 5:32 PM GMT
Mr.Mohan | எடப்பாடி
#53185

வேகத்தடைக்கு வர்ணம் அவசியம்

சாலை

தாரமங்கலம் பஸ் நிலையம், கிராம நிர்வாக அலுவலகம் அருகில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடை வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வருவோர், புதிதாக இந்த வழித்தடத்தை பயன்படுத்துவோர் விபத்தில் சிக்குகின்றனர். எனவே வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இந்த வேகத்தடைக்கு அவசியம் வர்ணம் பூச நடவடிக்கை எடுக்கப்படுமா? -வேலவன், தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Jan 2025 5:15 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#53181

சுற்றுலா பயணிகள் அவதி

மற்றவை

கொல்லிமலை வாசலூர்பட்டியில் உள்ள ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவர். இந்த பகுதியில் 2 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ஒரு நுழைவுவாயில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மற்றொரு நுழைவு வாயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே சேதமடைந்த நுழைவாயிலை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சேகர், வாசலூர்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Jan 2025 5:14 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#53180

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

வெண்ணந்தூர் அடுத்த பொன்பரப்பிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஆலயமணி நகரில் படைவீட்டு அம்மன் கோவில் உள்ளது. இந்த பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 3 மாதங்களாக குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், குடிநீர் திட்டத்தை பயன்படுத்தும் பொதுமக்களும் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீர் குழாயை சீரமைக்க முன்வர வேண்டும். -விநாயகம், வெண்ணந்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Jan 2025 4:58 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#53172

கல்லூரி மாணவர்களால் தொடரும் விபத்து

போக்குவரத்து

ஏரியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் ஏரியூர்- பென்னாகரம் சாலையில் மோட்டார் சைக்கிள்களில் 3 முதல் 4 பேர் பயணம் செய்கிறார்கள். மேலும் ஆபத்தை அரியாத வகையில் மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்கின்றனர். அதனால் இந்த பகுதியில் தொடர் விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு போலீசார் அறிவுரைகள் வழங்க வேண்டும். -குமார், ஏரியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Jan 2025 4:56 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#53171

வாகன ஓட்டிகள் அச்சம்

போக்குவரத்து

தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரிக்கு செல்லும் சாலையில் ஆவின் பாலகம் உள்ளது. இதன் முன்புறம் 2 இடங்களில் பாதாள சாக்கடை மூடிகள் கொண்டு மூடப்பட்டுள்ளது. மூடப்பட்ட பாதாள சாக்கடைகள் சாலையின் மட்டத்தில் இருந்து சற்று உயரமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்வதால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் பாதாள சாக்கடை மூடிகளை சாலை மட்டத்திற்கு அமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். -செந்தில்குமார், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Jan 2025 4:54 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#53168

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

மாரண்டஅள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளன. இந்த தெருநாய்கள் வாகன ஓட்டிகள், சிறுவர்கள், பொதுமக்கள் என அனைவரையும் துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. இந்த தெருநாய்களை பிடிக்க பேரூராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். -ராஜா, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Jan 2025 4:51 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#53163

பாழடைந்த கட்டிடம் சீரமைக்கப்படுமா?

மற்றவை

தேன்கனிக்கோட்டை பேரூராட்சி அலுவலகம் அருகே பாழடைந்த நிலையில் வருவாய்த்துறைக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தை வருவாய்த்துறையினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதனை முழுமையாக செய்யாமல் அப்படியே விட்டு விட்டனர். தற்போது இது புதர்கள் மண்டி சமூக விரோதிகளின் கூடாரமாக காட்சி அளிக்கிறது. இரவு நேரங்களில் மது பிரியர்கள் மது அருந்தவும், இதர செயல்களில் ஈடுபடவும் பயன்படுத்துகின்றனர். எனவே இந்த கட்டிடத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Jan 2025 4:49 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#53162

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஆவின் மேம்பாலம் அருகே உள்ள சர்வீஸ் சாலை மழையால் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பள்ளங்கள் இருப்பது தெரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நலன் கருதி விரைந்து சீரமைப்பார்களா?. -பாண்டியன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Jan 2025 4:48 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#53160

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்ல கூடிய தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளி, மேலுமலை, கொல்லப்பள்ளி உள்பட பல இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன. இதனால் இந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. மேம்பாலம் கட்ட கூடிய இடங்களில் மட்டும் வாகனங்கள் 15 முதல் 20 நிமிடங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. எனவே மேம்பால கட்டுமான பணிகளை வேகப்படுத்திடவும், நெரிசலை தீர்க்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாஸ்கர், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Jan 2025 4:58 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#52985

விபத்து அபாயம்

மற்றவை

சேலம் புதிய பஸ் நிலையம் சிக்னல் முதல் சுவர்ணபுரி வரை உள்ள நடைபாதையை இரு சக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறி பயன்படுத்துகின்றன. இதனால் நடைபாதையில் செல்லும் பாதசாரிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. எனவே இந்த நடைபாதை மேல் இருசக்கர வாகனங்கள் செல்லாமல் இருக்க தடுப்புகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே பாதசாரிகளின் கோரிக்கையாக உள்ளது. மேலும் நடைபாதையை பயன்படுத்தும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜ்குமார், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Jan 2025 4:56 PM GMT
Mr.Mohan | மேட்டூர்
#52983

சுகாதார வளாகம் வேண்டும்

மற்றவை

மேட்டூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்தில் சுகாதார வளாகம் இல்லை. இதனால் பயணிகள் ஆங்காங்கே இயற்கை உபாதைகள் கழிப்பதால் பயணிகள் பஸ் நிலையத்தை பயன்படுத்த முடியாத வகையில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அதிகாரிகள் பஸ் நிலைய வளாகத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பஸ் நிலையத்தில் சுகாதார வளாகம் ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சாமிநாதன், மேட்டூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Jan 2025 4:55 PM GMT
Mr.Mohan | சங்ககிரி
#52982

சேதமடைந்த பயணிகள் நிழற்கூடம்

மற்றவை

இளம்பிள்ளையில் இருந்து சின்னப்பம்பட்டி செல்லும் வழியில் மடத்தூர் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்கூடம் சேதமடைந்து உள்ளது. இதனால் பயணிகள் அச்சத்துடனேயே நிழற்கூடத்தை பயன்படுத்துகின்றன. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள பயணிகள் நிழற்கூடத்தை பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் முன் சீரமைப்பார்களா? -முருகன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick