Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
5 Oct 2025 5:29 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#59855

பயன்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

தண்ணீர்

மாரண்டஅள்ளி அடுத்த ஜக்க சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ஜக்க சமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் 2019-ம் ஆண்டு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. இந்த சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வராத நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். -முனிரத்தினம், ஜக்க...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2025 5:28 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#59854

விபத்து அபாயம்

சாலை

பாலக்கோடு புதூர் மாரியம்மன் கோவில் முதல் சித்திரப்பட்டி வரை சாலை செல்கிறது. இந்த சாலையில் மழைநீரால் ஆங்காங்கே மண் குவியல்கள் காணப்படுகிறது. இதனால் சாலை இருப்பது தெரியாமல் நடந்து செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையில் குவிந்து கிடக்கும் மண்ணை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -தீபா, பாலக்கோடு.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2025 5:27 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#59853

பூங்காவுக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்

பூங்கா

தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அம்மா பூங்கா அமைக்கப்பட்டது. அது முறையாக பராமரிக்கப்படாததால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது. இதனைத் தொடர்ந்து ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்து இளைஞர்கள் ஒன்றிணைந்து அம்மா பூங்காவை சீரமைத்தனர். பின்னர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, பெய்த கனமழைக்கு பூங்காவின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் ஏரியூரில் உள்ள அம்மா பூங்காவிற்கு...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2025 5:20 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#59852

பஸ் நிறுத்தம் அமைக்கப்படுமா?

போக்குவரத்து

பெங்களூரு நகரில் ஓசூர், கிருஷ்ணகிரி வழியாக தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு அரசு பஸ்கள், தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் பல தனியார் வாகனங்களுக்கு பயணிகள் ஏறும் இடமாக சுங்கச்சாவடி அருகில் குறிப்பிடப்படுகிறது. மழைக்காலங்களிலும், வெயில்காலங்களிலும் அந்த இடத்தில் ஒதுங்க இடமின்றி மக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சுங்கச்சாவடி அருகில் பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும். அதேபோல அந்த பகுதியில் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லை. ஆகவே அங்கு உயர் கோபுர மின் விளக்குகளும் அமைக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2025 5:19 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#59851

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

கிருஷ்ணகிரியில் காந்தி சாலையில் சாக்கடை கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக சாலையில் ஒரு பகுதி அடைக்கப்பட்டு மற்றொரு வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக அரசு மருத்துவமனை, நகராட்சி உள்ளிட்ட பல அலுவலகங்களுக்கு செல்லும் மக்களும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த சாலையில் சாக்கடை கால்வாய் கட்டும் பணிகளை துரிதப்படுத்திட வேண்டும். -சபரி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2025 5:18 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#59850

பராமரிக்கப்படாத சுகாதார வளாகம்

மற்றவை

ஓசூரில் நகரின் மையப்பகுதியில் பஸ் நிலையம் உள்ளது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கிறார்கள். இந்த பஸ் நிலையத்தில் ஆண் பயணிகளுக்காக இயற்கை உபாதைகள் கழிப்பதற்காக சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. இவை முறையாக பராமரிக்கப்படுவதில்லை. கடும் துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக மழைக்காலங்களில் கடும் துர்நாற்றம் வீசுவதால் அந்த பகுதியில் யாருமே நிற்க முடியாத நிலை உள்ளது. எனவே பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார வளாகத்தை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2025 5:16 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#59849

தடுப்பு கற்கள் மீண்டும் வேண்டும்

மற்றவை

சூளகிரி நகருக்குள் சாலையில் தடுப்பு கற்கள் வைக்கப்பட்டிருந்தன. கடந்த மாதம் முதல்-அமைச்சர் ரோடு ஷோ நிகழ்ச்சி சூளகிரியில் நடந்தது. இதனால் நகருக்குள் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு கற்கள் அகற்றப்பட்டன. இந்த நிலையில் ஒரு மாதமாகியும் இன்னும் அந்த தடுப்பு கற்கள் வைக்கப்படாமல் சாலையோரமாக உள்ளன. இதனால் சாலையோர கடைக்காரர்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அந்த தடுப்பு கற்களை மீண்டும் சாலையின் நடுவில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -நவீன், சூளகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2025 5:15 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#59848

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

சூளகிரி பஸ் நிலையத்தில் இருந்து உத்தனப்பள்ளி செல்ல கூடிய சாலையில் மேம்பாலம் அருகில் உள்ள ரோடு மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. குறிப்பாக உத்தனப்பள்ளியில் இருந்து வரக்கூடிய வாகனங்களும், கிருஷ்ணகிரியில் இருந்து சூளகிரிக்கு வரக்கூடிய வாகனங்களும் சந்திக்க கூடிய பகுதியாக இருப்பதால் அந்த இடத்தில் வாகனங்கள் மெதுவாக செல்ல நேரிடுகிறது. இதனால் விபத்துகளும் நடக்கின்றன. பல முறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2025 3:48 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#59624

சுகாதார சீர்கேடு

குப்பை

சேலம் 4 ரோடு பெரமனூர் அவுசிங் போர்டு அருகே அப்பகுதியில் சேகரிக்கும் குப்பைகளை சாலையோரம் கொட்டுகின்றனர். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்தபடி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தினமும் குப்பைகளை அகற்றவும், அப்பகுதியில் குப்பைகளை கொட்டக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-அன்பரசன், மெய்யனூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2025 3:46 PM GMT
Mr.Mohan | மேட்டூர்
#59622

குண்டும், குழியுமான சாலை

சாலை

மேச்சேரி அருகே தீராம்பட்டி, காட்டுவளவு, கும்மிரட்டிப்பட்டி, குள்ள காளிப்பட்டி, சடையன் காடு மற்றும் குட்டப்பட்டி, புளியம்பட்டி, பழையூர் போன்ற 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தார்சாலை போடப்பட்டு கடந்த 15 ஆண்டுகள் ஆகிறது. இதனால் சாலை குண்டும், குழியுமாகவும், ஆங்காங்கே மேடு, பள்ளமாகவும் காணப்படுகிறது. இந்த வழியாக செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் மழைக்காலங்களில் சாலை பயன்படுத்த முடியாத நிலையில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2025 3:45 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#59621

சுகாதாரமற்ற குடிநீர் குழாய்

தண்ணீர்

சேலம் ஜங்ஷன் உழவர் சந்தை எதிரே பொது குடிநீர் குழாய் உள்ளது. இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் அந்த குடிநீர் குழாய் சாக்கடை நீர் தேங்கி சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதனால் நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி குடிநீர் குழாய் உள்ள இடத்தில் கான்கிரீட் தரை அமைத்து சுகாதாரமான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். –மணி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2025 3:45 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#59620

கிணற்றுக்கு தடுப்புச்சுவர் அவசியம்

மற்றவை

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தொளசம்பட்டி அருகே அமரகுந்தி சொக்கநாதர் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலானது இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. இந்த கோவிலை ஒட்டியுள்ள நடைபாதையில் கோவிலுக்கு உட்பட்ட கிணறு ஒன்று நீர் நிரம்பி அபாய நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு இந்த கிணற்றை ஒட்டி தடுப்புச்சுவர் அமைத்து பாதுகாப்பு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஸ்டாலின், ஓமலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick