Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 April 2025 2:40 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#55657

சாலை இல்லாத சுடுகாடு

சாலை

பாலக்கோடு அருகே ஜோதிஅள்ளி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை ஒத்தை அடி பாதையாக உள்ளது. இதனால் வயல்வெளி வழியாக இறந்தவர்களின் உடல்களை சுடுகாட்டுக்கு எடுத்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்லும் போது அச்சத்துடனே அப்பகுதி பொதுமக்கள் செல்கின்றனர். எனவே சுடுகாட்டிற்கு செல்ல பாதை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -கந்தன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 2:39 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#55656

கூடுதல் மின்விளக்குகள்

மற்றவை

தர்மபுரி-சேலம் சாலையில் அரசு ஆஸ்பத்திரி அருகே ரெயில் நிலையத்திற்கு செல்லும் இரு வழி சாலை தொடங்குகிறது. இந்த சாலையில் தெற்கு பகுதி இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இன்றி காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இந்த ரெயில் நிலையத்திற்கு வந்து செல்லும் ஆயிரக்கணக்கான பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையின் ஓரத்தில் கூடுதல் மின்விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 2:39 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#55654

சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டி

தண்ணீர்

பாலக்கோடு அருகே உள்ள மாக்கன்கொட்டாய் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி விரிசல் அடைந்து பலவீனமாக காணப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இதற்கு மாற்றாக அதன் அருகில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. ஆனால் சேதமான பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்தாமலேயே விட்டுள்ளனர். இதில் இருந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுவதால் எந்நேரத்திலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுமோ? என்ற அச்சத்தில் அப்பகுதி பொதுமக்கள் உள்ளனர். எனவே சேதமடைந்த மேல்நிலை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 2:37 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#55652

சாலைகளில் சிதறும் கற்களால் விபத்து

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியில் இருந்து சூளகிரிக்கு ஏராளமான டிப்பர் லாரிகள் சென்று வருகின்றன. ஜல்லிக்கற்களை ஏற்றி செல்லும் இந்த டிப்பர் லாரிகளில் இருந்து சாலைகள் முழுவதும் ஜல்லிக்கற்கள் சிதறி விழுகின்றன. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் செல்ல சிரமப்படுகிறார்கள். குறிப்பாக சாலைகளில் சிதறி கிடக்கும் ஜல்லிக்கற்களில் இருசக்கர வாகனங்கள் செல்லும்போது விபத்துகளும், வாகனங்கள் அடிக்கடி பழுதும் ஏற்படுகின்றன. எனவே ஜல்லிக்கற்களை ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகள் பாதுகாப்பாக பின்னால் தார்பாயால் மூடியபடி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 2:37 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#55650

டவுன் பஸ் சேவை நீட்டிக்கப்படுமா?

போக்குவரத்து

கிருஷ்ணகிரி நகரில் இருந்தும், ஓசூர் நகரில் இருந்தும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் பயன் பெறுகிறார்கள். இந்த பஸ் சேவை இரவு 9 மணியுடன் நிறுத்தப்படுகின்றன. மீண்டும் காலை 4 மணிக்கு பிறகே பஸ் சேவை தொடங்குகிறது. இதனால் இரவு நேரத்தில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரை சுற்றி உள்ள கிராம மக்கள் தங்களின் ஊர்களுக்கு செல்ல சிரமப்படுகிறார்கள். எனவே இரவு நேரங்களில் டவுன் பஸ்கள் இயக்கவோ அல்லது எக்ஸ்பிரஸ், டீலக்ஸ், சாதாரண கட்டணம் என செல்ல கூடிய புறநகர்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 2:36 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#55649

நிழற்கூடத்தில் சுவரொட்டிகள் ஒட்டலாமா?

மற்றவை

பர்கூர் பழைய பஸ் நிறுத்தத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிதாக நிழற்கூடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இந்த நிழற்கூடத்தின் சுவற்றில் பல்வேறு வகையான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் புதிய நிழற்கூடம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டும் இடமாக மாறி வருகிறது. எனவே நிழற்கூடத்தில் சுவவெராட்டிகளை ஒட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -மாதையன், பர்கூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 5:16 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#55512

சுகாதார வளாகம் வேண்டும்

மற்றவை

தாரமங்கலம் நகராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர். காலனி குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். ஆனால் இந்த பகுதியில் பொது சுகாதார வளாகம் இல்லை. இதனால் தொலைவில் உள்ள கழிவறைக்கு சென்று வரவேண்டி உள்ளது. அதிக மக்கள் ஒரே கழிவறையை பயன்படுத்துவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இந்த குடியிருப்பு பகுதியில் புதிய சுகாதார வளாகம் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமரன், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 5:15 PM GMT
Mr.Mohan | மேட்டூர்
#55511

அறிவிப்பு பலகை அமைக்கலாமே!

மற்றவை

நங்கவள்ளியில் இருந்து தாரமங்கலம் செல்லும் வழியில் ஆலமரம் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த இடத்தில் 2 பிரிவு சாலைகள் உள்ளன. பிரிவு சாலையும், பிரதான சாலையும் இணையும் பகுதியில் அறிவிப்பு பலகை இல்லை. மேலும் இப்பகுதியில் இரவில் எந்த வித வெளிச்சமும் இல்லை. இதனால் இரவு நேரங்களில் அதிகப்படியான விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே பொதுமக்களின் நலன் கருதி மின் விளக்குகள் மற்றும் அறிவிப்பு பலகைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சாந்தமூர்த்தி, சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 5:14 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#55510

அபாய கிணறு

மற்றவை

தொளசம்பட்டியில் இருந்து தாரமங்கலம் செல்லும் வழியில் அமரகுந்தி பஸ் நிறுத்தம் உள்ளது. இதன் அருகே சொக்கநாதர் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான கிணறு திறந்த நிலையில் பாதுகாப்பின்றி அபாய நிலையில் இருக்கிறது. இதனால் அப்பகுதி குழந்தைகளின் பாதுகாப்பை கருதி அபாய நிலையில் உள்ள கிணற்றை சுற்றி வேலி அமைக்க அதிகாரிகள் முன் வருவார்களா? -சசிகுமரன், தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 5:14 PM GMT
Mr.Mohan | மேட்டூர்
#55509

பாதியில் நிற்கும் சாக்கடை கால்வாய்

கழிவுநீர்

மேட்டூர் தாலுகா கொளத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட 3-வது வார்டு பண்ணவாடி சாலை பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனால் தோண்டப்பட்ட கால்வாயில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பாதியில் நிற்கும் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை கால விரயமின்றி விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 4:58 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#55507

கூடுதல் ஏ.டி.எம். எந்திரங்கள் அமைக்கப்படுமா?

மற்றவை

ராசிபுரம் ஆண்டகலூர் கேட்டிற்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இவ்விடத்தில் இருந்த தனியார் ஏ.டி.எம். எந்திரங்கள் பெரும்பாலானவை அகற்றப்பட்டன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த பகுதிக்கு அடிக்கடி வந்து செல்லும் லாரி டிரைவர்களும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இருக்கும் ஒரு சில ஏ.டி.எம்.களிலும் பணம் எடுக்க முடியாத நிலைஉள்ளது. எனவே பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கூடுதலாக ஏ.டி.எம்.களை அமைத்தால் பயன் உள்ளதாக இருக்கும். -ராஜன், ராசிபுரம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 4:57 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#55506

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

நாமகிரிப்பேட்டையை அடுத்துள்ள நாரைக்கிணறு பகுதிகளில் சமீபகாலமாக தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். மேலும் தெருநாய்கள் கூட்டமாக, கூட்டமாக சேர்ந்து ஆடு, மாடுகளை கடித்து வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமரதமிழ்வேல், சேந்தமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick