Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
4 May 2025 5:15 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#55869

போலீசார் வாகன சோதனை

போக்குவரத்து

கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் வாகன ஓட்டிகள் பலரும் செல்கிறார்கள். இந்த சாலையில் பந்தயங்களுக்கு பயன்படுத்தப்படும் ரேஸ் இரு சக்கர வாகனங்கள் அதிக அளவில் ஓட்டப்படுகின்றன. அதிக ஒலி எழுப்ப கூடிய வாகனங்களை வடிவமைத்து பிற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் இந்த வாகன ஓட்டிகள் செல்கிறார்கள். குறிப்பாக கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் இருந்து ஐ.டி. நிறுவன ஊழியர்கள் பலரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையிலும், கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 5:14 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#55867

சாலை பணிக்கு இடையூறு

சாலை

ஓசூர்-தளி சாலையில் 12 கி.மீ. தூரத்திற்கு சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விரிவாக்க பணிகள் நடைபெறும் எல்லைக்குட்பட்ட அந்திவாடி பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் சாலையின் நடுவே அமைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பல முறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கோவிலை அகற்ற புகார் தெரிவித்தும் கோவிலை அகற்றாத காரணத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக சாலை விரிவாக்க பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே சாலை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 5:12 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#55865

சாலை பயன்பாட்டிற்கு வருமா?

சாலை

கிருஷ்ணகிரியில் 5 ரோட்டில் இருந்து சென்னை செல்லும் சாலையில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்டன. இதனால் இந்த சாலை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சென்னை சாலையில் செல்லும் வாகனங்களும், பர்கூர் செல்லும் வாகனங்களும் சுற்றி செல்கின்றன. இதனால் சப்-ஜெயில் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. தற்போது பணிகள் ஏறத்தாழ முடிவு பெற்றும் சாலை பயன்பாட்டிற்கு இன்னும் வரவில்லை. எனவே 5 ரோட்டில் இருந்து சென்னை செல்லும் பிரதான சாலையில் பாதாள...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 2:50 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#55674

அவசியம் எச்சரிக்கை பலகை

மற்றவை

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து குரங்குசாவடி வரை வாகன போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுப்பதற்காக புதியதாக மேம்பாலம் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது. இந்த மேம்பாலம் வளைவு மேம்பாலம் ஆகும். மிக அபாயகரமான வளைவு பகுதியில் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகளும், ஒளிரும் பட்டைகளும் பொருத்தப்படாமல் உள்ளது. மேலும் தடுப்புச்சுவரின் உயரம் மிக குறைவாக உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அவசியம் எச்சரிக்கை பலகை அமைத்து, தடுப்புச்சுவரை உயர்த்தி கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 2:49 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#55673

மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

மற்றவை

சேலம் ஏற்காடு மலைப்பகுதி அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் பிரதான சுற்றுலா தலம் ஆகும். மலைக்கு செல்லும் கொண்டை ஊசி வளைவுகளில் ஒரு சில இடங்களில் மின்விளக்குகளும், எச்சரிக்கை ஒளிரும் பட்டைகளும் பொருத்தப்படாமல் உள்ளது. இதன் காரணமாக கொண்டை ஊசி வளைவு முழுவதுமாக இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே சுற்றுலா பயணிகளின் நலன் கருதி மின் விளக்குகள் மற்றும் ஒளிரும் பட்டைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஆகாஷ், சேலம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 2:48 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#55672

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

சேலம் மேட்டுபட்டி எம்.பெருமாள்புரம் ஊராட்சியில் ராகவேந்திரபுரம் உள்ளது. இதன் அருகே உள்ள வெள்ளாளகுண்டம் பிரிவு சாலையோரம் உள்ள காலி நிலத்தில் அப்பகுதியில் உள்ள கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும், மழைநீரும் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த பகுதியில் கழிவுநீரை வெளியேற்றும் கடைகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. -ராஜேஷ்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 2:48 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#55670

அடிக்கடி விபத்து

சாலை

ஓமலூரில் இருந்து தாரமங்கலம் செல்லும் வழியில் ஏரிக்கரை பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த சாலையை அடுத்துள்ள பிரிவு ரோடானது செட்டிப்பட்டிக்கு செல்லும் வழியாகும். ஏரி கரையை ஒட்டி இந்த சாலை குறுகிய நிலையில் உள்ளதாலும், இரவு நேரங்களில் போதுமான வெளிச்சம் இல்லாததாலும் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் அதிகளவில் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே விபத்துகளை தடுக்க ஏரியை ஒட்டி இரும்பு தடுப்புகள் அமைக்கவும், போதுமான மின்விளக்குகள் ஏற்படுத்திக் கொடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 2:45 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#55667

பொதுமக்கள் அச்சம்

மற்றவை

வெண்ணந்தூர் அடுத்த வெள்ளை பிள்ளையார் கோவில் காவலர் குடியிருப்பில் இருந்து நரிக்கல் கரடி செல்லும் சாலையில் மின்விளக்குகள் இல்லை. அந்த பகுதி இரவு இருள்சூழ்ந்து காட்சி அளிக்கிறது. இதனால் பெண்கள், கல்லூரி மாணவிகள் அச்சத்துடனே செல்கின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த சாலையில் மின்விளக்கு அமைக்க வெண்ணந்தூர் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். -ராம், வெண்ணந்தூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 2:45 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#55666

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

நாமக்கல் மாநகரில் போக்குவரத்து நெரிசல் சகஜமான ஒன்றாக இருந்து வருகிறது. புதிய பஸ்நிலையம் திறக்கப்பட்ட பிறகு மணிக்கூண்டு, பரமத்தி சாலை, மோகனூர் சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்து உள்ளது. இருப்பினும் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ள கோட்டை சாலையில் காலை, மாலை நேரங்களில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கோட்டை சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 2:44 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#55664

உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா?

மின்சாரம்

கொல்லிமலையின் வரவேற்பு கிராமமாக சோளக்காடு திகழ்கிறது. அங்கிருந்து எட்டுக்கை அம்மன், அரப்பளீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பிரதான சாலை அருகே நம் அருவி காணப்படுகிறது. வழக்கமாக பகல் நேரத்தில் அவ்வழியே செல்லும் சுற்றுலா பயணிகள் பலரும் அந்த அருவியை கண்டு ரசித்தும், குளித்து மகிழ்ந்தும் செல்வார்கள். இந்த நிலையில் இரவு நேரத்தில் அந்த அருவியின் அழகை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் இடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளது. எனவே நம் அருவி அமைந்துள்ள சாலையின் மேல் பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என்பதே...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 2:43 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#55662

விபத்தை ஏற்படுத்தும் சாலை

சாலை

நாமக்கல் மாவட்டத்தில் அதிக விபத்து ஏற்படும் சாலையாக சேந்தமங்கலம் சாலை உள்ளது. இந்த சாலையில் அதிக வளைவுகள் காணப்படுகிறது. இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இந்த பகுதியில் வேகத்தடைகள் அமைத்தால் விபத்துகள் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்தை குறைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். -சரவணன், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 2:43 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#55660

வாகன ஓட்டிகள் அவதி

சாலை

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பொரசபாளையம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலை அமைக்கப்பட்டது. தற்போது அந்த சாலை சேதமாகி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்த நிலையில் காணப்படுவதால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -மோகன், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick