Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
11 May 2025 3:19 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#55997

பராமரிக்கப்படாத சுகாதார வளாகம்

மற்றவை

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் பெங்களூரு பஸ்கள் நிற்க கூடிய இடத்தில் பயணிகளுக்கான சுகாதார வளாகம் உள்ளது. இது முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால் அந்த பகுதியில் நிற்க கூடிய பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். முறையாக பராமரிக்கப்படாததால் அந்த பகுதி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு காணப்படுகிறது. எனவே பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார வளாகத்தை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சூர்யபிரகாஷ், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 5:35 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#55885

வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படுமா?

சாலை

சேலம் ஓலைப்பட்டியில் இருந்து மேச்சேரி செல்லும் வழியில் வாதநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு உள்ள அரசு பள்ளி அருகே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடை வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதன் காரணமாக இரவில் வேகத்தடை இருப்பது தெரியாததால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே வேகத்தடைக்கு வர்ணம் பூசி, ஒளிரும் பட்டை பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமார், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 5:34 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#55884

படியில் பயணம்

போக்குவரத்து

தாரமங்கலத்தில் இருந்து தொளசம்பட்டி வழித்தடத்தில் பஸ்கள் வசதி அடிக்கடி இல்லை. ஒரு மணி நேரத்திற்கு மேலாக பஸ்சுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள், நோயாளிகள் தாரமங்கலம் செல்ல மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் மாலை நேரங்களில் கல்லூரி மாணவர்கள் பஸ்களின் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். எனவே அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படும் முன் இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சசிகுமார், தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 5:33 PM GMT
Mr.Mohan | மேட்டூர்
#55883

ரவுண்டானா அமைக்கலாமே!

சாலை

மேட்டூர் தாலுகா மாதேஸ்வரன் கோவில் செல்லும் வழியில் கொளத்தூர் 4 ரோடு உள்ளது. இந்த பகுதி பிரதான சாலை என்பதால் அதிகளவு போக்குவரத்து நெரிசல் உள்ளது. சில நேரங்களில் இதன் காரணமாக விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே விபத்துகளை தடுக்கும் வகையில் இந்த பகுதியில் ரவுண்டானா அமைத்தால் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம் என்பதே வாகன ஓட்டிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது. -மணிகண்டன், மேட்டூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 5:32 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#55882

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

மேச்சேரியில் இருந்து மேட்டூர் செல்லும் வழியில் குஞ்சாண்டியூர் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த இடத்தில் சாலை குறுகிய சாலையாகவும், பிரிவு சாலையாகவும் உள்ளது. இந்த பிரிவு சாலையின் வழியாக நங்கவள்ளி ஊருக்குள் பஸ்கள் சென்று வருகின்றன. இந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் அதிகமான கனரக வாகனங்கள் சென்று வருவது குறிப்பிடத்தக்கது. எனவே குஞ்சாண்டியூர் பஸ் நிறுத்த பகுதியில் போக்குவரத்து போலீசார் தினசரி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு போகுவரத்து நெரிசலை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 5:24 PM GMT
Mr.Mohan | திருச்செங்கோடு
#55881

சுகாதார சீர்கேடு

குப்பை

மல்லசமுத்திரம் காளிப்பட்டி 2-வது வார்டில் கந்தசாமி கோவில் அருகில் குடியிருப்புகள், திருமணமண்டபம் சூழ்ந்த பகுதியில் பல வாரங்களாக அதிகளவில் குப்பைகள் தேக்கமடைந்து காணப்படுகிறது. காற்றின் காரணமாக குப்பைகள் குடியிருப்புகளுக்குள் புகுந்து குடியிருப்பை நாசம் செய்து விடுகின்றது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக காளிப்பட்டி கந்தசாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுழித்து செல்லும் அவலநிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் தேக்கமடைந்துள்ள குப்பைகளை அகற்றவும், வேறு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 5:23 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#55880

குரங்குகள் தொல்லை

மற்றவை

வெண்ணந்தூர் அடுத்த அத்தனூர் சித்தர் கோவில் அருகே மற்றும் அளவாய்மலை பாலசுப்ரமணிய சாமி கோவில் அடிவாரம் அருகே உள்ள பகுதிகளில் குரங்குகள் அதிக அளவு உள்ளன. இப்பகுதியில் போதிய தண்ணீர் மற்றும் உணவுகள் இல்லாத நிலையில் அவை வீடுகள் உள்ள பகுதிகளுக்கு சென்று உணவு தேடி தொல்லை செய்கின்றன. இதனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் குரங்குகளை கண்டு அச்சப்படுகிறார்கள். ஒரு சிலரை குரங்குகள் கடித்து விட்டு செல்கின்றன. எனவே பொதுமக்களின் நலன் கருதி இப்பகுதியில் உள்ள குரங்குகளுக்கு கருத்தடை செய்ய மாவட்ட நிர்வாகம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 5:23 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#55879

ஓய்வு அறை கட்டப்படுமா?

மற்றவை

கொல்லிமலையை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் அடிவாரத்தில் காணப்படும் புளியஞ்சோலை ஆற்றுப்பகுதிக்கும் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அங்குள்ள சோதனைச்சாவடியில் கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. அந்த கொட்டகை மழை, வெயிலுக்கு பொதுமக்கள் ஒதுங்க முடியாத நிலையில் மிக குறுகிய அளவில் காணப்படுகிறது. எனவே அந்த சோதனைச்சாவடியை விரிவுப்படுத்தி புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்றும், சுற்றுலா பயணிகள் சிறிது நேரம் ஓய்வெடுத்து செல்வதற்கும் தனித்தனியாக அறைகள் கட்ட வேண்டும் என்றும் அப்பகுதியினர்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 5:22 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#55878

கழிவுநீர் குழியால் அபாயம்

கழிவுநீர்

ராசிபுரம் நகராட்சி 26-வது வார்டு ராம் நகர் பகுதியில் கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு பாதாள சாக்கடைக்காக குழி தோண்டப்பட்டது. இந்தக்குழி சரி செய்யப்படாததால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. பள்ளி விடுமுறை என்பதால் இப்பகுதியில் அதிக அளவில் பள்ளி குழந்தைகள் விளையாடிக் கொண்டும் உள்ளனர். பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பெரிய பள்ளத்தில் தவறி குழந்தைகள் விழுந்து விடும் அபாயம் உள்ளது. தற்போது அந்த குழியில் பெரியளவில் குழாய் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுவதாலும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 5:17 PM GMT
Mr.Mohan | பாப்பிரெட்டிப்பட்டி
#55876

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உளளது. இதனால் குழந்தைகள், பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சப்படுகிறார்கள். மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை தெருநாய்கள் கூட்டமாக சேர்ந்து கடிக்க துரத்துகின்றன. தெருநாய்களிடம் இருந்து தப்பிக்க வாகனத்தை வேகமாக இயக்கும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாறன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 5:16 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#55874

பயணிகள் அச்சம்

போக்குவரத்து

மாரண்டஅள்ளி பஸ் நிலையம் பகுதியில் அனுமதியின்றி லாரிகள், பள்ளி வாகனங்களை நிறுத்துவதால் பயணிகளுக்கும், பஸ்களுக்கும் இடையூறாக உள்ளது. மேலும் இரவு வேளையில் நிறுத்தப்படும் லாரிகள் பகல் பொழுதில் அதிவேகமாக பஸ் நிலைய வளாகத்தில் இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் அச்சத்துடன் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். எனவே பஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்படும் லாரிகள், பள்ளி வாகனங்களை அங்கு நிறுத்தாமல் இருக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -செந்தில், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 5:15 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#55870

தண்ணீர் வினியோகம் பாதிப்பு

தண்ணீர்

தர்மபுரி இலக்கியம்பட்டி பகுதியில் இருக்கும் வீடுகளில் உள்ள தண்ணீர் இணைப்புகளுக்கு ஊராட்சி மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு பயன்படுத்தும் மோட்டார் பழுதடைந்ததால் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வி.பி.சிங் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வினியோகம் தடைபட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தண்ணீர் கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே மின் மோட்டாரை சீரமைத்து மீண்டும் தண்ணீர் வழங்க விரைவான நடவடிக்கை எடுப்பார்களா? -மணிவண்ணன், இலக்கியம்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick