Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
20 April 2025 4:57 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#55505

பள்ளமான சாலையால் விபத்து

சாலை

கொல்லிமலை அடிவாரத்திற்கு வெண்டாங்கி கிராமம் வழியாக செல்லும் சாலையில் ஓரத்தில் திடீரென்று பள்ளம் தோன்றியுள்ளது. அந்த பள்ளத்தால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அந்தப் பள்ளத்தை மூடி சாலையை சீரமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -நாகராஜன், வெண்டாங்கி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 4:56 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#55504

மின்விளக்குகள் அமைக்கலாமே!

மின்சாரம்

ஆண்டகலூர் கேட்டிலிருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் தோனமேடு, பாலப்பாளையம், குருக்கபுரம், வண்டிப்பேட்டை, குருசாமிபாளையம் என அடுத்தடுத்து பல ஊர்கள் உள்ளன. இவ்வழியில் சாலையின் இருபுறமும் வரிசையாக புளிய மரங்கள் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலை இருள் சூழ்ந்து காட்சியளிக்கிறது. இதன் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே இந்த சாலையில் இரு புறங்களில் கூடுதலாக மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -செந்தில்ராஜா, ராசிபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 4:51 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#55497

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

பர்கூர் தாலுகா கந்திகுப்பம் பஸ் நிலையம் அருகில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிடம், நூலக கட்டிடம் எதிரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் அப்பகுதிக்கு யாரும் செல்ல முடியாத வகையில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த பகுதியில் வரும் காலங்களில் மழை நீர் தேங்காத வகையிலும், தற்போது தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதேஷ், பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 4:50 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#55496

கூடுதல் பஸ்கள் இயக்கலாமே!

போக்குவரத்து

தொடர் விடுமுறை நாட்களில் ஓசூர், கிருஷ்ணகிரி, சூளகிரி பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியூர்களுக்கு சென்று வருகிறார்கள். குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அப்படி இருந்தும் நீண்ட நேரமாக பஸ்கள் இயக்கப்படாமல் மக்கள் சிரமப்படுகிறார்கள். இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பஸ் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே விடுமுறை நாட்களில் வெளியூர்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 4:49 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#55494

விபத்துகளை ஏற்படுத்தும் வாகனங்கள்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பஸ் நிலையம் அருகில் ஏராளமான இரவு நேர கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் இருசக்கர, 4 சக்கர வாகனங்களை பலரும் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் விபத்துகள் நடக்கும் அபாயமும் உள்ளன. குறிப்பாக பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் திரும்ப கூடிய இடத்தில் வைக்கப்பட்டுள்ள கடைகளின் முன்பு வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. எனவே பஸ் நிலையம் அருகில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தாமல் இருக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 4:48 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#55493

காட்சி பொருளான மின்விளக்கு

மின்சாரம்

பாலக்கோடு அடுத்த சர்க்கரை ஆலை கூட்ரோடு பகுதியில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் விளக்குகள் கடந்த 6 மாதங்களாக எரியாமல் பழுதடைந்து காட்சி பொருளாக உள்ளது. இதன் காரணமாக கூட்ரோட்டில் வரும் வாகனஓட்டிகளுக்கு எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே காட்சி பொருளாக உள்ள உயர்கோபுர மின் விளக்குகளை சரி செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரலாமே! -சரவணன், திம்மம்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 4:47 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#55491

குண்டும், குழியுமான சாலை

சாலை

தர்மபுரி-சேலம் பைபாஸ் சாலையில் இருந்து இருசன் கொட்டாய் கிராமத்திற்கு செல்லும் தார்சாலை தொடங்குகிறது. இந்த தார்சாலையில் பல்வேறு பகுதிகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலை வழியாக தினமும் தர்மபுரி, அதியமான் கோட்டை பகுதிகளுக்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே இந்த தார்சாலையில் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க விரைவான நடவடிக்கை எடுப்பார்களா? -முனிராஜ், அதியமான்கோட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 4:46 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#55490

வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

சாலை

பாலக்கோடு அடுத்த சோமனஅள்ளி நெடுஞ்சாலை தர்மபுரி-பாலக்கோட்டிற்கு செல்லும் முக்கிய சாலையாகும். இந்த சாலையானது சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்ல முடியாமல் தடுமாறி வருகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த சாலையை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். -முருகன், சோமனஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 April 2025 5:48 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#55338

வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படுமா?

சாலை

அம்மாபேட்டை பஸ் நிறுத்தம் அருகில் காமராஜர் நுழைவுவாயில் அருகில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த இடத்தில் 2 வேகத்தடைகள் வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளுக்கு வர்ணம் பூச வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது. -சசிகாந்த், தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 April 2025 5:46 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#55337

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

தொளசம்பட்டியில் இருந்து மேச்சேரி செல்லும் வழியில் கோயிலூர் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள மேம்பாலத்திற்கு கீழ் செல்லும் சுரங்கப்பாதையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மழை பெய்தால் சுரங்கபாதை முழுவதும் மழைநீர் தேங்குகிறது. மேலும் மழைநீர் வெளியேர வழியில்லை. இதன் காரணமாக அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாய நிலை உள்ளது. இந்த சுரங்கப்பாதையில் மின் விளக்குகளும் இல்லை. எனவே மின்விளக்குகள் பொருத்தி தரவும், மழைநீர் வெளியே செல்லவும் அதிகாரிகள் வழி வகை செய்ய...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 April 2025 5:44 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#55336

மின்கம்பம் சரிசெய்யப்படுமா?

மின்சாரம்

சேலம் 4 ரோட்டில் 16-வது வார்டுக்கு உட்பட்ட ஹவுசிங் போர்டு அருகே உள்ள மின்கம்பம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் சாய்ந்தது. இந்த மின்கம்பமானது தற்போது வரை சரிசெய்யப்படாமல் இந்த பணி கிடப்பில் உள்ளது. இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு மழையில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சிவக்குமார், 4 ரோடு.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 April 2025 5:43 PM GMT
Mr.Mohan | எடப்பாடி
#55335

மின்விளக்குகள் அமைக்கலாமே!

மின்சாரம்

எடப்பாடியில் இருந்து கல்வடங்கம் செல்லும் வழியில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த பகுதியில் போதுமான மின்விளக்குகள் பொருத்தப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் வந்து செல்பவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி இந்த பகுதியில் போதுமான மின்விளக்கு வசதிகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கிருஷ்ணன், சேலம்.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick