Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 May 2025 4:49 PM GMT
Mr.Mohan | பரமத்தி-வேலூர்
#56236

குடிநீர் வீணாகிறது

தண்ணீர்

மோகனூர் அடுத்த பாலப்பட்டியில் இருந்து எஸ்.வாழவந்தி வழியாக வள்ளிபுரம் செல்லும் சாலையில் கதிர்மலை முருகன் கோவில் உள்ளது. இங்கிருந்து நாமக்கல் ஆட்டோ நகர் மற்றும் வழியில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து நீண்ட நாட்களாக தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. இதனால் தார்சாலையில் தண்ணீர் ஓடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் செல்லும்போது கார், பஸ், லாரி போன்ற கனரக வாகனங்கள் வேகமாக சென்றால் கடும் சிரமப்படுகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள தார்சாலை சேதமடையும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 4:47 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#56234

சுகாதார சீர்கேடு

குப்பை

நாமகிரிப்பேட்டை நாரைக்கிணறு கிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சில கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பண்ணைகளில் இறந்துபோன கோழிகளை திறந்த வெளியில் சிலர் வீசி செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் கோழிப்பண்ணை கழிவுகள், இறந்த கோழிகளை இந்த பகுதியில் வீசி செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, சேந்தமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 4:45 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#56233

சீரமைக்கப்படாத வாய்க்கால் கரை

தண்ணீர்

கொல்லிமலை அடிவாரத்தில் நிமித்ராயன் மேடு பகுதியில் இருந்து வெண்டாங்கி கிராமத்திற்கு செல்லும் குறுக்குப்பாதையில் பாண்டியாறு வாய்க்கால் செல்கிறது. அந்த வாய்க்கால் பகுதியில் கடந்த வருடம் பெய்த பலத்த மழையால் வாய்க்கால்களின் பல இடங்களில் கரைகள் உடைந்து காணப்படுகிறது. அவற்றை சீரமைக்காமல் இருந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் செல்லும் விவசாயிகள் நலன் கருதி உடைந்த கரைகளை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -விஜயகுமார், வெண்டாங்கி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 4:40 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#56232

சுகாதார வளாகங்கள் பயன்பாட்டுக்கு வருமா?

மற்றவை

தர்மபுரி தாலுகா அலுவலகம் அருகே பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பகுதிக்கு வந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட சுகாதார வளாகங்கள் புதர் மண்டி இருந்தன. அண்மையில் இவை சீரமைக்கப்பட்டன. ஆனால் இவை இதுவரை முறையான பயன்பாட்டிற்கு வரவில்லை. தொடர்ந்து மூடி வைக்கப்பட்டுள்ள இந்த சுகாதார வளாகங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 4:39 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#56231

குப்பை கழிவுகளை அகற்றலாமே!

குப்பை

பாலக்கோட்டில் வேளாண்மை விற்பனை மற்றும் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவிக்கக் கூடிய காய்கறி, பழங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யவும், காய்கறி பழங்களை பதப்படுத்தவும் அரசு சார்பில் 10க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டு விவசாயிகள் பயன்பாட்டில் உள்ளது. வேளாண் விற்பனை கூட பகுதியில் பிளாஸ்டிக் கவர்கள், அழுகிய பழங்கள், காய்கறி கழிவுகள் உள்ளிட்ட குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு பல மாதங்களாக தேங்கி கிடப்பதால் சுகாதார சீர்கேடு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 4:38 PM GMT
Mr.Mohan | பாப்பிரெட்டிப்பட்டி
#56226

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

பாப்பிரெட்டிப்பட்டி திரு.வி.க. நகரில் தாலுகா அலுவலகம் உள்ளது. இங்கு பொதுமக்கள் பல்வேறு சான்றிதழ்கள் பெற வருகின்றனர். தற்போது இந்த அலுவலகம் முழுவதும் குப்பைகளும், முட்புதர்களும் நிறைந்து காணப்படுகின்றது. இதனை தூய்மை பணியாளர்கள் அகற்றவது இல்லை. இதனால் அந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. மேலும் அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் அலுவலக வளாகத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றத்தால் அலுவலகத்தினுள் பொதுமக்கள்,...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 4:34 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#56215

வேகத்தடைகள் அமைக்கப்படுமா?

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து உத்தனப்பள்ளி செல்லும் சாலையில் ஏராளமான டிப்பர் லாரிகள் செல்கின்றன. இந்த லாரிகள் அதிவேகமாக செல்வதால் 2 சக்கர வாகன ஓட்டிகள் அந்த சாலையில் செல்ல அச்சமாக உள்ளது. குறிப்பாக அங்கு புதிதாக சாலை போடப்பட்டுள்ளதால் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்களும், 2 சக்கர வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் அவ்வழியாக செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அந்த சாலையில் வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில் வேகத்தடைகள் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 4:24 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#56209

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் மேற்கு ஒன்றியத்தில் உள்ளது ஜே.காருப்பள்ளி. இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாய் சரிவர தூர்வாரப்படவில்லை. இதனால் கால்வாயில் பிளாஸ்டிக் குப்பைகள், குடிநீர் பாட்டில் உள்ளிட்ட பொருட்கள் நிரம்பி உள்ளன. இந்த சுகாதார சீர்கேட்டால் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாய் தூர்வாரப்பட வேண்டும். -ராம், கெலமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 4:20 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#56207

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் போலுப்பள்ளியில் அரசு மருத்துவக்கல்லூரி முன்பு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக வார விடுமுறை நாட்களில் வாகன நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் கடக்க நீண்ட நேரம் ஆகிறது. எனவே போக்குவரத்து நெரிசல் ஏற்படும் கால கட்டங்களில் அந்த பகுதியில் போக்குவரத்து பிரிவு போலீசாரை நியமித்து போக்குவரத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-தீபக்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 4:19 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#56206

பராமரிப்பு இல்லாத சிறுவர் பூங்கா

மற்றவை

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் குழந்தைகள் பூங்கா உள்ளது. இங்கு சிறுவர்-சிறுமிகள் விளையாடுவதற்கு ஊஞ்சல், சீசா உள்ளிட்ட உபகரணங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. மேலும் அதில் உள்ள தகடுகள் துருப்பிடித்து இருப்பதால் குழந்தைகளுக்கு காயங்கள் ஏற்படுகின்றன. மேலும் இந்த பூங்கா முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த பூங்காவை சீரமைத்து தர வேண்டும் என்பதே இந்த பகுதிமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. -கிருஷ்ணன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 4:11 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#56022

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சேலம் மாநகராட்சி 4 ரோடு சந்திப்பு பகுதியில் இருந்து ராமகிருஷ்ணா ரோடு செல்லும் சாலையில் மீன், இறைச்சிக்கடைகள் உள்ள பகுதிகளில் நாய்கள் அதிகளவில் உள்ளன. நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆட்கள் நடமாட்டம் குறைந்த நிலையில் வெளியூர்களுக்கு சென்று வரும் பயணிகள் நாய்களால் விரட்டப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்த பகுதியில் உள்ள மசூதிக்கு அதிகாலையில் தொழுகை நடத்த செல்ல வேண்டும் என்றால் கற்களை எடுத்துக்கொண்டு ஒரு வித பீதியுடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே நாய்கள் நடமாட்டத்தை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 4:09 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#56021

காட்சி பொருளான மின்விளக்கு

மற்றவை

இரும்பாலை அருகே உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் இருந்து அழகுசமுத்திரம் வரை செல்லும் சாலை இரவு நேரங்களில் மின்விளக்குகள் இருந்தும் வெளிச்சம் இல்லாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே இந்த பகுதியில் காட்சி பொருளாக காணப்படும் மின்விளக்குகளை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். -சரத்சந்தர், மோகன்நகர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick