Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 Oct 2025 5:08 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#60262

தேங்கி கிடக்கும் குப்பைகள்

குப்பை

கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் அருகில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குப்பைகள் மூட்டை மூட்டையாக கொட்டப்படுகின்றன. இதனால் அந்த வழியாக செல்ல கூடிய வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். மேலும் அந்த பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. குறிப்பாக கோழி இறைச்சி கழிவுகளை மூட்டைகளாக கட்டி அங்கு வந்து கொட்டுகிறார்கள். எனவே அதிகாரிகள் இந்த பகுதியில் குப்பைகள் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-நந்தகுமார், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2025 5:07 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#60261

வாகன ஓட்டிகள் அவதி

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பஸ் நிலையம் எதிரில் ஓசூர் செல்லும் சர்வீஸ் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் மீன் கடைகள் இரவு நேரத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் மீன் வறுவல்களுக்கு தூவப்படும் மசாலா பொடிகள், கார பொடிகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் கண்களில் பட்டு மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். இரவு நேரங்களில் திறந்த வெளியில் தூவப்படும் கார பொடிகளால் வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். ஆகவே உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சூளகிரியில் இரவு நேரங்களில் செயல்படும் சாலையோர...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2025 5:06 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#60260

குண்டும், குழியுமான சாலை

சாலை

ஓசூர் மாநகராட்சி 21-வது வார்டுக்குட்பட்ட கொத்தூர் பகுதி, நாதன் நகரில் அதிகளவில் தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதனால் எப்போதும் இந்த பகுதி பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் கொத்தூர் வளைவு சாலை பகுதி குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். -மாதன், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2025 5:05 PM GMT
Mr.Mohan | அரூர்
#60258

சேதமடைந்த தார்சாலை

சாலை

அரூர் அடுத்த கோட்டப்பட்டியில் இருந்து கருமந்துறை செல்லும் தார் சாலையை நரிப்பள்ளி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை வழியாக தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே அதிகாரிகள் இந்த பகுதியில் புதிய தார்சாலை அமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ராஜா, அரூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2025 5:04 PM GMT
Mr.Mohan | அரூர்
#60257

மேற்கூரை சீரமைக்கப்படுமா?

மற்றவை

தர்மபுாி மாவட்டம் அரூரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக மருத்துவமனையின் மேற்கூரை வழியாக தண்ணீர் கசிந்து வருகிறது. இதனால் தற்காலிகமாக சி.டி. ஸ்கேன் மையம் பூட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக சி.டி. ஸ்கேன் எடுப்பதற்காக தர்மபுரி, சேலம் அரசு மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் மருத்துவமனையின் மேற்கூரையை தண்ணீர் புகாத வகையில் சீரமைத்து தர வேண்டும் என்பதே நோயாளிகளின் கோரிக்கையாக உள்ளது. -பாஸ்கர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2025 5:04 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#60256

சுகாதார சீர்கேடு

குப்பை

ஏரியூர் அருகே உள்ள அஜ்ஜனஅள்ளி ஊராட்சிக்குட்பட்டு சிகரலஅள்ளி கிராமம் உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த ஊரில் போதிய கழிவு நீர் கால்வாய் வசதிகளோ, குப்பை தொட்டிகளோ இல்லை. இதன் காரணமாக ஆங்காங்கே கழிவு நீர் குட்டை போல தேங்கி நிற்கிறது. அதேபோல இந்த பகுதியில் பிரதான சாலை ஓரங்களில் ஆங்காங்கே மலை போல குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய்கள் அமைத்து தரவும், கொட்டப்பட்டு கிடக்கும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2025 4:59 PM GMT
Mr.Mohan | பென்னாகரம்
#60254

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

மாரண்டஅள்ளியில் இருந்து பஞ்சப்பள்ளி செல்லும் சாலையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக இந்த பகுதியில் சாலையோரம் குளம் போல் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி மாணவ, மாணவிகளுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் இந்த பகுதி வழியாக செல்லும் போது மூக்கை பிடித்து கொண்டு முகம் சுழித்தவாறு செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீரை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2025 12:55 PM GMT
Mr.Mohan | எடப்பாடி
#59973

பஸ் வசதி வேண்டும்

போக்குவரத்து

தேவூர் அருகே கத்தேரி ஊராட்சி பகுதியில் உள்ள வளையக்காரனூர், கள்ளிப்பாளையம், மஞ்சுப்பாளையம், கிராமங்களுக்கு சரிவர பஸ் வசதி இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். அவசர தேவைக்கு மருத்துவமனை செல்லும் பொதுமக்கள், வயதானவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பயணம் செல்ல 4 கி.மீ. நடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு இப்பகுதிக்கு பஸ் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். -கார்த்திக், தேவூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2025 12:55 PM GMT
Mr.Mohan | மேட்டூர்
#59972

குண்டும், குழியுமான சாலை

சாலை

மேச்சேரி அருகே தீராம்பட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது இந்த சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள், பள்ளி வாகனங்கள் கடும் சிரமப்பட்டு சென்று வருகின்றன. மேலும் சிலர் சாலையில் உள்ள பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுநாள் வரை எந்த...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2025 12:54 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#59971

சுகாதார சீர்கேடு

குப்பை

சேலம் கொல்லப்பட்டி முதல் பால் பண்ணை வரை சாலையோரம் குப்பை, இறைச்சி கழிவுகள் மற்றும் மருத்துவமனையில் இருந்து வீசப்படும் மருத்துவ கழிவுகள் மலைபோல் கொட்டி வைத்துள்ளனர். இதனால் மிகுந்த துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா? -சசிகுமார், தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2025 12:53 PM GMT
Mr.Mohan | சங்ககிரி
#59970

சுகாதார சீர்கேடு

குப்பை

இளம்பிள்ளை பேரூராட்சியில் சேலம் மெயின் ரோடு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இதன் அருகே கடந்த சில வாரங்கலாக குப்பை கழிவுகள் அள்ளாமல் அப்படியே கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய் பரவும் வாய்ப்பும் உள்ளது. மழைக்காலம் தொடங்கி உள்ளதால் தினமும் குப்பைகளை அள்ளி தூய்மையாக வைக்க பேரூராட்சி நிர்வாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -பாலாஜி, இளம்பிள்ளை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2025 12:52 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#59969

தண்ணீர் தட்டுப்பாடு

தண்ணீர்

சேலம் பச்சப்பட்டி 40-வது வார்டு பகுதியில் மாநகராட்சி ஆதிதிராவிடர் மயானம் உள்ளது. இதன் அருகில் உள்ள பொதுமக்கள் தினந்தோறும் பயன்படுத்தும் குடிநீர் தொட்டி குழாய் உடைந்து 2 ஆண்டுகள் ஆகிறது. இதனால் அப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குழாயை சீரமைத்து குடிநீர் வழங்க வேண்டும். -பிரகாஷ், பச்சப்பட்டி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick