Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
12 Oct 2025 12:49 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#59968

குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்யப்படுமா?

தண்ணீர்

ராசிபுரத்தில் இருந்து வெண்ணந்தூர் செல்லும் சாலையில் ஸ்டேட் வங்கி உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் வீணாகிறது. இதனால் சாலையின் மையப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. பள்ளம் இருப்பதை தெரிவிக்கும் வகையில் சாலையின் நடுவே கல் வைக்கப்பட்டுள்ளது. இதானால் இரவு நேரங்களில் வாகனஓட்டிகள் கல் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பையும், சாலையில் ஏற்பட்டுள்ள...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2025 12:48 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#59967

வேகத்தடை அமைக்கப்படுமா?

சாலை

வெண்ணந்தூரிலிருந்து மல்லூர் செல்லும் சாலையில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி அருகே சாலை அபாயகரமான வளைவு பகுதியாக உள்ளது. இதன்காரணமாக எதிரே வரும் வாகனம் தெரியாமல் பலர் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் கொண்டு விரைந்து வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் -ராஜமாணிக்கம், அனந்தகவுண்டம்பாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2025 12:47 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#59966

சாலையோரம் ஆபத்தான பள்ளம்

சாலை

வெண்ணந்தூர் வெள்ளை பிள்ளையார் கோவில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து அனந்தகவுண்டம்பாளையம் செல்லும் பகுதியில் புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையோரம் தற்போது ஆபத்தான வகையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளத்தை சரி செய்த தர வேண்டும் என்பதே வாகனஓட்டிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது. -ரத்தினம், அனந்தகவுண்டம்பாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2025 12:47 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#59965

தாழ்வாக தொங்கும் மின்சார ஒயர்கள்

மின்சாரம்

நாமகிரிப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக சென்னை, கடலூர், கோவை, ஈரோடு போன்ற பகுதிகளுக்கு கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு சாலையோரம் உள்ள மின் கம்பங்களில் ஒயர்கள் தாழ்வாக தொங்குகிறது. இதன்காரணமாக சரக்குகளை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாழ்வாக தொங்கும் மின்சார ஒயர்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -நல்லதம்பி, பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2025 12:46 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#59964

தெருநாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் குறுக்கபுரம் கிராமம் காமராஜ் நகர், கே.எஸ்.ஆர்.நகர் போன்ற பகுதிகளில் நூற்றுக்கணக்கான தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. சிறுவர்களையும், முதியோர்களையும் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் திடீரென பாய்ந்து கடித்து விடுகின்றன. மேலும் சாலையின் குறுக்கே தெருநாய்கள் ஓடுவதால் 2 சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா? -ராஜா, ராசிபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2025 12:26 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#59962

எரியாத உயர்கோபுர மின்விளக்கு

மின்சாரம்

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் 800-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. நாள்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்லும் இடமாக கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலைய முகப்பு வாயிலில் உயர் கோபுர மின் விளக்கு உள்ளது. இந்த விளக்கு நீண்ட நாட்களாக எரியவில்லை. இதனால் பஸ் நிலைய முகப்பு வாயிலேயே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே பழுதடைந்துள்ள அந்த விளக்கை சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். -முத்துராஜ், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2025 12:25 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#59961

கால்நடைகளால் தொந்தரவு

மற்றவை

கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம், தீயணைப்பு துறை அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கும், தாலுகா அலுவலகத்திற்கும் தினமும் பல்வேறு காரணங்களுக்காக பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இங்கு மாடுகள் தொல்லை அதிகமாக உள்ளது. குறிப்பாக சாலைகளில் ஆங்காங்கே படுத்து கொண்டும், அரசு அலுவலக நுழைவு வாயிலில் இருந்தும் தொந்தரவு செய்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சமடைகிறார்கள். எனவே அரசு அலுவலக வளாகத்தில் கால்நடைகள் சுற்றுவதை தடுக்க நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2025 12:24 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#59960

பஸ்கள் நின்று செல்லுமா?

போக்குவரத்து

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் கலெக்டர் அலுவலகம் உள்ளது. நாள்தோறும் பல்வேறு கோரிக்கைகளுக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் வருகிறார்கள். குறிப்பாக திங்கட்கிழமைகளில் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, ஓசூர், சூளகிரி உள்பட பல பகுதிகளில் இருந்து மக்கள் இங்கு பஸ்களில் வருகிறார்கள். அவ்வாறு வரும் பஸ்களில் பெரும்பாலானவை கலெக்டர் அலுவலகம் அருகில் நிறுத்தப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் சுங்கச்சாவடி அருகில் இருந்து இறங்கி நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2025 12:23 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#59959

மின்விளக்கு அமைக்கப்படுமா?

மின்சாரம்

கிருஷ்ணகிரியில் கட்டிகானப்பள்ளி பி.எஸ்.என்.எல். அலுவலக சாலை வழியாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பேஸ் 2 குடியிருப்பு பகுதிக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள மின் கம்பங்களில் மின் விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் பல முறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அந்த பகுதியில் உள்ள கம்பத்தில் மின் விளக்குகள் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாக்ரடீஸ், கட்டிகானப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2025 12:22 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#59958

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள சர்வீஸ் சாலையோரத்தில் குப்பைகள் மூட்டை, மூட்டையாக கொட்டப்படுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றன. குறிப்பாக சூளகிரி பஸ் நிலையத்தில் இருந்து கிருஷ்ணகிரி பஸ்கள் வெளியே செல்லும் இடத்திலும், கிருஷ்ணகிரி பஸ்கள் வரக்கூடிய பாதை முழுவதும் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. எனவே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -திம்மராயப்பா, சூளகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2025 12:21 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#59957

குண்டும், குழியுமான சாலை

சாலை

ஏரியூரில் இருந்து மேச்சேரிக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. செல்லமுடியில் இருந்து பழையூர் வரை 12 கிலோமீட்டர் தார்சாலை சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் சேதமடைந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -மாணிக்கம், வத்தல்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2025 12:20 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#59956

சாக்கடை கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

ஏரியூர் அருகே உள்ள கூர்காம்பட்டியில் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊருக்கு சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் செல்கிறது. இந்த கழிவுநீர் ஆங்காங்கே குட்டை போல் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இப்பகுதியில் முறையாக சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?. -சுகுணா, ஏரியூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick