Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
24 Aug 2025 2:08 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#58744

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

சேலம் 4 ரோடு பெரமனூரில் உள்ளது தமிழ்நாடு நகர்ப்புற வீட்டு வசதிவாரியம். இங்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பொது குடிநீர் குழாய் பிரதான சாலையின் ஓரத்தில் உள்ளது. ஒவ்வொரு முறை தண்ணீர் வரும்போதும் குடிநீர் குழாய் இணைப்பில் இருந்து தண்ணீர் வெளியேறி சாலையில் வீணாக செல்கிறது. இதனால் குடிநீர் குழாயில் தண்ணீர் குறைந்த அளவு வருகிறது. இதன் காரணமாக அங்குள்ளவர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில்லை. அங்குள்ள பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். சம்பந்தப்பட்டவர்களிடம் முறையிட்டும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 2:07 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#58743

மின்விளக்கு அமைக்க வேண்டும்

மின்சாரம்

தாரமங்கலம் ஏ.டி.சி. பஸ் டெப்போ மற்றும் அய்யனாரப்பன் கோவில் அருகே பைபாஸ் 4 வழி சாலையாக உள்ளது. இந்த சாலையில் மின்விளக்குகள் இல்லாத காரணத்தினால் அப்பகுதி முழுவதும் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அடிக்கடி தவறி விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர். மேலும் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் நலன் கருதி மின்விளக்குகள், வேகத்தடைகள் மீது ஒளிரும் பட்டைகள், எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை எடுப்பார்களா? -சசி, தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 2:06 PM GMT
Mr.Mohan | ஆத்தூர்
#58742

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

தலைவாசல் ஒன்றியம் ஆறகளூர் ஊராட்சியில் இருந்து சித்தேரி கிராமத்திற்கு செல்லும் சாலையோரம் ஓடை உள்ளது. இந்த பகுதியில் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளதால் மழைக்காலத்தில் நீர் ஓடையில் செல்லாமல் சாலையில் ஓடும் சூழ்நிலை உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் முகம் சுளித்து செல்கின்றனர். எனவே குப்பைகளை தூர்வாரி ஓடையில் தண்ணீர் தேங்காத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். -குமாரசாமி, தலைவாசல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 2:05 PM GMT
Mr.Mohan | சேலம்-தெற்கு
#58741

ஆபத்தான டிரான்ஸ்பார்மர்

மின்சாரம்

சேலம் செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையம் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரின் மின்கம்பம் மிகவும் சேதமடைந்து உள்ளது. இது எந்த நேரத்திலும் சாய்ந்துவிடும் நிலைமையிலும் ஆபத்தாக காணப்படுகிறது. இதன் அருகே நகராட்சி பள்ளி மற்றும் செவ்வாய்பேட்டை பள்ளிவாசல் உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு டிரான்ஸ்பார்மரின் மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜன், குகை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 1:46 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#58733

விழும் நிலையில் மின்கம்பம்

மின்சாரம்

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அய்யம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள மூலக்கடை காய்காடு பகுதியில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இது எப்போது வேண்டுமானாலும் விழுந்து அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக மின்வாரியத்துறை ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -பொதுமக்கள், நாமகிரிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 1:45 PM GMT
Mr.Mohan | குமாரபாளையம்
#58731

பாலத்தில் குப்பைகள் கொட்டலாமா?

குப்பை

பள்ளிபாளையம் அருகே உள்ள ஆவத்திப்பாளையத்தில் ஒரே ஒரு பாலம் மட்டுமே உள்ளது. இந்த பாலத்தின் நுழையும் இடத்திலேயே அப்பகுதி மக்கள் குப்பைகள், இறைச்சி கழிவுகள், காய்கறி கழிவுகள் போன்றவற்றை கொட்டி வருகின்றனர். அந்த குப்பைகள் அனைத்தும் பாலத்தின் கீழே ஓடையில் விழுவதால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலத்தில் குப்பைகளை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -விக்னேஷ், பள்ளிபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 1:44 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#58730

குழியால் விபத்து

சாலை

வெண்ணந்தூர் காவலர் குடியிருப்பில் இருந்து நடுப்பட்டி செல்லும் சாலையில் குடிநீர் குழாய் உடைந்தது. இதனால் அந்த பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு குழாய் சரி செய்யப்பட்டது. ஆனால் இதுநாள் வரை அந்த குழி மூடப்படாமல் மாதக்கணக்கில் உள்ளது. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு குழியை விரைந்து மூடி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சசிகுமார், அளவாய்ப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 1:41 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#58726

பசுமை பந்தல் அமைக்கப்படுமா?

மற்றவை

காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சியில் புதிய வளாகத்தில் வாரச்சந்தை தற்போது நடந்து வருகிறது. அதில் சில வியாபாரிகள் வெயிலில் உட்கார்ந்து வியாபாரம் செய்து வருகின்றனர். எனவே அங்குள்ள வியாபாரிகளின் நலன் கருதி பசுமை பந்தல் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சத்யராஜ், காளப்பநாயக்கன்பட்டி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 1:40 PM GMT
Mr.Mohan | திருச்செங்கோடு
#58725

கிணற்றை மூட வேண்டும்

மற்றவை

எலச்சிபாளையம் அருகே கோ.எளையாம்பாளையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கிணறு ஒன்று உள்ளது. இது தற்போது பாழடைந்து தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இந்த கிணற்றில் அப்பகுதி மக்கள் குப்பை கழிவுகளை போட்டு வருகிறார்கள். மேலும் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. அப்பகுதியில் விளையாடும் குழந்தைகள் கிணற்றை எட்டிப்பார்க்கும் போது அதில் விழும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த கிணற்றை மண்ணை கொட்டி மூடவும் அல்லது இரும்பு வேலி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பொதுமக்கள்,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 1:39 PM GMT
Mr.Mohan | திருச்செங்கோடு
#58723

ஆபத்தான மரம்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் மணியனூரில் அப்புச்சிமார் கோவில் அருகே மூன்று ரோடு பிரியும் பிரதான தார்சாலை அமைந்துள்ளது. இந்த தார்சாலை வழியாக கந்தம்பாளையத்தில் இருந்து மணியனூர் அண்ணமார் கோவில் மற்றும் மணியனூர் வாரச்சந்தை, மணியனூர் ஊருக்குள் போகும் பிரதான தார்சாலையாக உள்ளது. இந்தநிலையில் அப்புச்சிமார் கோவில் அருகே சாலையோரம் காய்ந்த பெரிய புளியமரம் ஒன்று ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் அந்த மரத்தின் மேலே மின்கம்பிகள் செல்கின்றன. இதனால் வேகமாக காற்று அடித்தால்கூட அந்த மரம் முறிந்து விழுந்து அசம்பாவிதங்கள்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 1:29 PM GMT
Mr.Mohan | பென்னாகரம்
#58721

சுகாதார சீர்கேடு

குப்பை

ஏரியூர் அருகே உள்ள அஜ்ஜனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சிகரஅள்ளியில், சாலை ஓரம் ஆங்காங்கே மலைபோல் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இந்த காரணமாக நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எப்போது தான் இதற்கு தீர்வு கிடைக்குமோ? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். -முத்துக்குமார், சிகரல அள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 1:27 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#58720

இருண்டு கிடக்கும் பிரதான சாலை

சாலை

தர்மபுரி நகரில் பென்னாகரம் சாலை மிகவும் முக்கியம் வாய்ந்த சாலையாகும். எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் இந்த சாலையில் குமாரசாமிப்பேட்டை ரெயில்வே மேம்பாலம் முதல் சோகத்தூர் கூட்ரோட்டில் உள்ள அதியமான்கோட்டை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் வரை 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டு சாலை நடுவில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் இந்த பிரதான சாலை இருண்டு கிடப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இரவு நேரங்களில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலை வழியாக வந்து செல்கின்றன. எனவே இந்த...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick