Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
24 Aug 2025 4:33 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#58757

கால்வாயை தூர்வார வேண்டும்

கால்வாயை தூர்வார வேண்டும்மற்றவை

ஆரணிப்பாளையம்-புதுகாமூர் செல்லும் சாலையில் இருந்து பையூர் ஏரிக்கு செல்லக்கூடிய கால்வாய் முறையாக இல்லாததால் பிளாஸ்டிக் கவர்கள் நிறைந்து நோய் தொற்று உருவாகும் நிலை உள்ளது. அங்கு ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகின்றன. நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் செல்ல கால்வாயை தூர்வாரி வழிவகை செய்ய வேண்டும். -வேதாசலம், ஆரணி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 4:30 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#58756

இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும்

மற்றவை

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடக்கும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வருகிறார்கள். அவ்வாறு வரும் பொது மக்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உரிய இருக்கை வசதி இல்லாததால் பொதுமக்கள் பல மணி நேரம் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களுக்கு தேவையான இருக்கை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். -ராஜா, திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 4:28 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#58755

ஆபத்தான ஆழ்துளை கிணறு

ஆபத்தான ஆழ்துளை கிணறுதண்ணீர்

வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டில் மீனவர் தெருவில் ஆழ்துளை கிணறு அமைத்து 3 மாதங்களுக்கு மேல் கிடப்பில் போடப்பட்டது. இந்த ஆழ்துளை கிணறு மூடாமல் அப்படியே இருப்பதால் குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறக்க நேரிடும் அபாயம் உள்ளது. உடனே நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசு நடவடிக்கை எடுத்து அசம்பாவிதத்தை தவிர்க்க வேண்டும். -கந்தன், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 4:25 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#58754

மினிபஸ் இயக்கப்படுமா?

போக்குவரத்து

தேசூர் அருகே மகமாய் திருமணி பெரிய கிராமத்துக்கு தெள்ளாரில் இருந்து நமண்டி வழியாக மகமாய்திருமணி வரை மினி பஸ் இயக்க வேண்டும். மினி பஸ் இயக்கினால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், வியாபாரிகளுக்கு வசதியாக இருக்கும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கா.பவானிபழனி, மகமாய்திருமணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 4:22 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#58753

ஜல்லிகள் பெயர்ந்த சாலை

ஜல்லிகள் பெயர்ந்த சாலைசாலை

ஆரணி-வந்தவாசி சாலையில் திருமணி மற்றும் ஆகாரம் கிராமத்துக்கு இடையே ஆகாரம், நடுப்பட்டு, கோணையூர், குடிசைக்கரை ஆகிய கிராமங்களை இணைக்கும் 1½ கிலோமீட்டர் தூரமுள்ள தார்சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அந்தச் சாலை தற்போது ஜல்லிகள் பெயர்ந்து மண் சாலைபோல் காட்சி அளிக்கிறது. சாலையில் பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய தார் சாலை அமைத்துத்தர வேண்டும். -ஆ.கண்ணதாசன், அக்ராபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:35 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#58611

தேசிய நெடுஞ்சாலையில் தேங்கும் மழைநீர்

தேசிய நெடுஞ்சாலையில் தேங்கும் மழைநீர்சாலை

வாணியம்பாடி அருகே செட்டியப்பனூர் கூட்ரோடு பகுதியில் ஈத்கா மைதானம் அருகில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. அங்குள்ள ரவுண்டானா பகுதியில் மழைநீர் வெளியேறாமல் குட்டைபோல் தேங்குகிறது. இதேபோல் வளையாம்பட்டு தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் குளம்போல் மழைநீர் தேங்கி உள்ளது. மேற்கண்ட இடங்களில் தேங்கும் மழைநீரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்புறப்படுத்த வேண்டும், மேலும் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமாரசாமி, வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:32 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#58607

பள்ளி சுற்றுச்சுவர் சேதம்

மற்றவை

திருப்பத்தூர் அருகே சோமலாபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியில் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். அந்தப் பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது. சேதம் அடைந்த பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குப்புசாமி, சோமலாபுரம்.

மேலும்
ஆதரவு: 6
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:31 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#58606

சேதமடைந்த மின்கம்பம்

சேதமடைந்த மின்கம்பம்மின்சாரம்

திருப்பத்தூரில் மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி எதிரே ஒரு மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதம் அடைந்துள்ளது. மின்கம்பத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. அந்தக் கம்பத்தை சீரமைக்க மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கார்த்திகேயன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:28 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#58605

கொடிகள் படர்ந்த மின் கம்பம்

கொடிகள் படர்ந்த மின் கம்பம்மின்சாரம்

கந்திலி அருகே சின்னூர் கந்திலி மலை முருகன் கோவில் செல்வதற்கான நுழைவு வாயில் உள்ளது. அங்குள்ள ஒரு மின்கம்பியில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. தற்போது மழைப் பெய்து வருவதால் மின்கசிவு ஏற்பட்டு ஆபத்து நடக்கலாம் என அஞ்சப்படுகிறது. மின்கம்பியில் படர்ந்த கொடியை அகற்றுவார்களா? -அசோக், சின்னூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:25 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#58604

சேதமடைந்த பெயர் பலகை

சேதமடைந்த பெயர் பலகைமற்றவை

திருப்பத்தூரில் லண்டன் மிஷன் சாலை உள்ளது. இந்தச் சாலைக்கான பெயர் பலகை சேதமடைந்து கீழே தொங்குகிறது. எனவே பெயர் பலகையை சரியாக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆனந்தகுமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:15 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#58601

சிமெண்டு சாலையில் பள்ளம்

சிமெண்டு சாலையில் பள்ளம்சாலை

அரக்கோணம் ஒன்றியம் இச்சிபுத்தூர் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள சிமெண்டு சாலையில் ஆழமான பள்ளம் ஏற்பட்டு பல மாதங்கள் ஆகிறது. அது இன்னும் சரி செய்யாமலேயே வைத்துள்ளனர். அந்தத் தெருவில் நடந்து செல்லும் குழந்தைகள், முதியவர்கள் தவறி பள்ளத்தில் விழுந்தால் அசம்பாவிதங்கள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே பள்ளத்தை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - பாலகிருஷ்ணன், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:07 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#58591

கழிவுநீர் கால்வாய்களை சீர் செய்வார்களா?

கழிவுநீர்

வாலாஜாவில் பல்வேறு தெருக்களில் கழிவுநீர் கால்வாய்கள் இடிந்து சேதமாகி உள்ளன. தற்போது மழைப் பெய்து வருவதால் கழிவுநீரும், மழைநீரும் கால்வாயில் ஓடாமல் சாலையில் வழிந்தோடுகிறது. கால்வாய்களை சீர் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நகராட்சியில் கூடுதல் ரேஷன் கடை, ஆழ்துளை கிணறு பழுதடைந்த நிலையில் உள்ளன. அவைகளை நகராட்சி நிர்வாகம் சீர் செய்யுமா? -கிருஷ்ணன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick