Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 July 2025 5:24 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#58014

பன்றிகள் தொல்லை

பன்றிகள் தொல்லைமற்றவை

வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமத்தில் உள்ள தெருக்களில் பன்றிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பன்றிகள் தொல்லையால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பன்றிகளை ஊருக்கு ஒதுக்குப்புறமாக கொட்டகை அமைத்து வளர்க்க உத்தரவிட வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் வளர்க்க தடை விதிக்க வேண்டும். -நாகராஜன், அப்துல்லாபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 5:21 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#58013

புதிய நிழற்கூடம் கட்டப்படுமா?

புதிய நிழற்கூடம் கட்டப்படுமா?மற்றவை

ஆரணி-வேலூர் நெடுஞ்சாலையில் சேவூர் ஊராட்சிக்கு உட்பட்ட ரகுநாதபுரம் லட்சுமி சரஸ்வதி பஞ்சாலை மில் அருகில் உள்ள பஸ் நிறுத்தம் தற்போது பயணிகள் நிற்பதற்கு போதிய இடம் இல்லாமல் உள்ளது. அது மட்டுமல்ல தற்போது சாலை அதிக அளவில் உயர்ந்து விட்டதால் பஸ் நிறுத்தம் அருகே உள்ள பயணிகள் நிழற்கூடம் தாழ்வாக உள்ளது. நிழற்கூடம் முகப்பில் செடி, கொடிகள், புல் வளர்ந்துள்ளது. எனவே அந்த நிழற்கூடத்தை அகற்றி விட்டு புதிய பயணிகள் நிழற்கூடம் கட்டப்படுமா? -பாலு, சேவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 5:17 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#58009

பள்ளிக்கு அருகில் தேங்கும் கழிவுநீர்

கழிவுநீர்

திருவண்ணாமலை ஒன்றியம் அண்டம்பள்ளம் கிராமத்தில் நடுநிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியில் பின் பக்கம் கழிவுநீர் தேங்கி உள்ளது. கொசுக்கடியால் மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. பள்ளிக்கூடம் பின்பக்கம் தேங்கிய கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவா, அண்டம்பள்ளம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 5:49 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#57915

ஏரி சாலை பழுது

சாலை

ராணிப்பேட்டை மாவட்டம் அனந்தலை மலையில் அமைந்துள்ள அனந்தநாதீஸ்வரர் கோவிலுக்கு கிராமமக்கள், பக்தர்கள் சென்று வர ஏரிக்கரைைய ஒட்டி உள்ள சாலையை பயன்படுகின்றனர். ஏரிக்கரை சாலை பழுதாகி மேடும், பள்ளமுமாக உள்ளது. அந்தச் சாலையில் எந்த ஒரு வாகனமும் செல்ல முடியவில்லை. சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -லட்சுமிநாராயணன், அனந்தலை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 5:45 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#57914

பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம்

மற்றவை

வாலாஜாபேட்டை காந்தி நகரில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் 1999-ம் ஆண்டு ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்டது. ஆனால், அதை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. அந்தக் கட்டிட வளாகத்தில் புதர் வளர்ந்து காடுபோல் உள்ளது. சுகாதார வளாகத்தை இடித்து விட்டு, பொதுமக்கள் நலன் கருதி வேறு ஏதேனும் ஒரு அலுவலக கட்டிடத்தை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாணிக்கம், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 5:44 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#57913

மேல்நோக்கி இருக்கும் மின் விளக்கு

மேல்நோக்கி இருக்கும் மின் விளக்குமின்சாரம்

அரக்கோணம் மாதவநகர் பகுதி பாலாஜி கோல்டன் நகரில் ஒரு மின் கம்பத்தில் எல்.இ.டி. மின் விளக்கு மேல் நோக்கி பக்கவாட்டில் இருக்கும் வகையில் உள்ளது. இரவில் தெரு முழுவதும் வெளிச்சம் இன்றி இருள் சூழ்ந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மின் விளக்கை சரியாக பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜேஷ்குமார், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 5:40 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#57912

கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

சாலை

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு பொதுமக்கள் புகார் மனுக்கள் கொடுக்க வருகின்றனர். அந்தச் சாலை சரியில்லை. சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டி பல மாதங்கள் ஆகிறது. ஆனால், இன்னும் சாலை ேபாடவில்லை, சாலை போடும் பணியை கிடப்பில் போட்டு விட்டார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு செல்லும் சாலையை விரைவில் அமைக்க வேண்டும். -த.நித்தியானந்தம், காரை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 5:38 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#57911

கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?கழிவுநீர்

திருப்பத்தூர் அருகே கதிரம்பட்டி கிராமத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய் சரிவர தூர்வாரப்படவில்லை. இதனால், அங்கு துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரேம், கதிரம்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 5:36 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#57910

புதிய அங்கன்வாடி மையம் கட்டுவது எப்போது?

மற்றவை

ஜோலார்பேட்டை ஒன்றியம் மூக்கனூர் ஊராட்சி அடியத்தூர் கிராமத்தில் அங்கன்வாடி கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்ததை இடித்து விட்டு, புதிய கட்டிடம் கட்டுவதாகக் கூறினார்கள். கட்டிடத்தை இடித்து 8 மாதங்கள் ஆகிறது. ஆனால் இதுவரை கட்டிடம் கட்டவில்லை. குழந்தைகள் அங்குள்ள மரத்தடியிலும், திறந்த வெளியிலும் அமர்ந்து படித்து வருகின்றனர். அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். -வே.ராதாகிருஷ்ணன், சமூக ஆர்வலர், அடியத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 5:34 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#57909

மின்கம்பம் சேதம்

மின்கம்பம் சேதம்மின்சாரம்

திருப்பத்தூர் அருகே புதுக்கோட்டை ஊராட்சி துரைசாமி வட்டம் பகுதியில் ஒரு மின்கம்பம் சேதமடைந்துள்ளது. அதன் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய கம்பத்தை அமைக்க மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? -கருணாகரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 5:32 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#57907

பள்ளி சுற்றுச்சுவர் கட்டப்படுமா?

மற்றவை

திருப்பத்தூர் அருகே பெரியகரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் இருபுறம் மட்டும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இதை முழுவதும் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணி, பெரியகரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 5:31 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#57905

சாலையோரம் குப்பைகள்

குப்பை

திருப்பத்தூர் அருகே குனிச்சி பகுதியில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கல்யாண்குமார், குனிச்சி.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick