Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
31 Aug 2025 6:51 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#59001

அடிக்கடி மின் தடை

மின்சாரம்

காட்பாடி பகுதியில் செங்குட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. குறுகிய காலத்தில் மின் தடை சரி செய்யப்பட்டாலும் மின்சாதனங்கள் பழுது ஏற்படும் நிலை உள்ளது. எனவே காட்பாடி மின்வாரிய அதிகாரிகள் மின்தடை ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுதாகர், செங்குட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 6:47 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#59000

தள்ளுவண்டி கடைகளால் இடையூறு

மற்றவை

வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு தனியார் மருத்துவமனை அருகில் உள்ள சாலையோரம் ஏராளமான தள்ளுவண்டி உணவகங்கள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. சாலையோர தள்ளுவண்டிகடைகளை அகற்ற மாநாகராட்சி நடவடிக்கை எடுக்குமா? -ராஜா, வேலூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 6:46 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#58999

சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரால் அவதி

சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரால் அவதிசாலை

கே.வி.குப்பம் பஸ்நிலையம் பின்பக்கம் காட்பாடி-ஜோலார்பேட்டை இடையே செல்லும் ரெயில்பாதை உள்ளது. அதன்கீழே சுரங்கப்பாதை உள்ளது. அந்த வழியாக சீதாராம்பேட்டை, காமாட்சி அம்மன் பேட்டை, கவசம்பட்டு ஆகிய பகுதிகளுக்கு விவசாயிகள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். அந்தச் சுரங்கப்பாதையில் மழைக்காலத்தில் மழைநீர் தேங்குவதால் போக்குவரத்துப் பாதிக்கப்படுகிறது, மக்கள் அவதிப்படுகின்றனர். ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காமல் அதிகாரி சீரமைக்க வேண்டும். -சாமிதுரை, கே.வி.குப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 6:35 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#58998

தார் சாலை பழுது

சாலை

வாலாஜாபேட்டை கொளத்தேரி ரோடு தேசிய நெடுஞ்சாலையில் பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளது. அதன் எதிரே 400 மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை பழுதாகி தார் பெயர்ந்து விட்டது. தார் சாலை பழுதை சரி செய்யாததால் மண் சாலையாக காட்சியளிக்கிறது. மழைப் பெய்தால் சேறும் சகதியுமாக மாறி வருகிறது. தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு முழுமையான தார் சாலையாக மாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும். -சம்பந்தம், வாலாஜாபேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 6:31 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#58997

பஸ் நேர விவர அறிவிப்பு பலகை

போக்குவரத்து

காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி பஸ் நிலையம் அமைந்துள்ளது. பஸ் நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள், தொழிலாளர்கள் சென்னை, அரக்கோணம், திருத்தணி, காஞ்சீபுரம், பாணாவரம், சோளிங்கர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறார்கள். அங்கு, பஸ் பயண நேரம் குறித்த டிஜிட்டல் பலகை வைத்திருந்தனர். தற்போது அந்தப் பலகையை காணவில்லை. பஸ் நிலையத்தில் பஸ் பயண நேரம் குறித்த டிஜிட்டல் பலகையை மீண்டும் வைப்பார்களா? -சத்தியமூர்த்தி, காவேரிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 6:29 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#58996

சாலையில் பெரிய பள்ளங்கள்

சாலை

வாலாஜாபேட்டை பத்திரப்பதிவு அலுவலகம் அருகே அனந்தலைக்கு செல்லும் சாலை திருப்பத்தில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பெரிய பள்ளங்கள் உருவாகி உள்ளன. இதனால் இரவில் இந்த வழியே திரும்பி செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தை சந்திக்கின்றனர். பெரிய பள்ளங்களை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சதீஷ்குமார், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 6:23 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#58995

சமச்சீரான தார் சாலை வேண்டும்

சாலை

வாலாஜா பஸ் நிலைய பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அம்மூர், சோளிங்கர் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலை சமச்சீரான தார் சாலையாக இல்லாமல் பள்ளமும் மேடுமாகக் காணப்படுகிறது. பல இடத்தில் ஒட்டுப் போட்ட தார்சாலையாக உள்ளது. ஆகவே சமச்சீரான தார் சாலையை அமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா? -பெரியசாமி, வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 6:22 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#58994

மோசமான சாலை

சாலை

ஆலங்காயம் அருகே நரசிங்கபுரம் ஊராட்சியில் கோமாளி ஏரிப்பகுதியில் இருந்து கல்கட்டு பகுதி வரை சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜாபெருமாள், பூங்குளம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 6:20 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#58993

சாலை வசதி

சாலை

ஆலங்காயம் அருகே பூங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட மத்தூரன் வட்டம், தாடிகாரன் வட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள சாலை மண் சாலையாக உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்தச் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -செந்தில், ஆலங்காயம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 6:18 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#58992

கழிவுநீர் கால்வாய் வசதி

கழிவுநீர்

திருப்பத்தூர் அருகே பெருமாப்பட்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பெருமாப்பட்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும். -சிவலிங்கம், பெருமாப்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 6:16 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#58991

கொடிகள் படர்ந்த மின்கம்பம்

மின்சாரம்

திருப்பத்தூர் பெரிய ஏரியின் கரையில் உள்ள ஒரு மின்கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் மின்தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாணிக்கம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 6:14 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#58990

சிமெண்டு சாலை பழுது

சிமெண்டு சாலை பழுதுசாலை

வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட காதர்ஜண்டா தெருவில் சிமெண்டு சாலை பழுதாகி குண்டும் குழியுமாக உள்ளது. இந்தத் தெருவில் பஜார் வீதிக்கு செல்லும் மக்கள், வாகன ஓட்டிகள் இந்த வழியாகதான் சென்று வருகின்றனர். சாலையை சீர் செய்ய மக்கள் பலமுறை நகராட்சியிடம் முறையிட்டும், மனுக்கள் கொடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சிமெண்டு சாலையை சரி செய்து கொடுக்க வேண்டும். -இ.ரவி, சமூக ஆர்வலர், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick