Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 Sep 2025 6:10 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#59167

சேதம் அடைந்த மின்கம்பம்

சேதம் அடைந்த மின்கம்பம்மின்சாரம்

ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதியில் பல தெருக்களில் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. அதை, சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் மாற்றி விட்டு புதிய கம்பங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமு, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 6:08 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#59163

ரேஷன் கடை கழிவறை சேதம்

ரேஷன் கடை கழிவறை சேதம்மற்றவை

ஜோலார்பேட்டை அருகே வக்கணம்பட்டி கொல்லகொட்டாய் பாரத கோவில் பகுதியில் புதிதாக ரூ.8 லட்சம் செலவில் கட்டப்பட்ட ரேஷன் கடையின் கழிவறை திறக்கப்பட்டு சில மாதங்களிலேயே சேதம் அடைந்துள்ளது. அதை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அருண், சந்தைக்கோடியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 6:06 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#59161

சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்

போக்குவரத்து

திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலைய பகுதியில் இருந்து மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு செல்லும் சாலையின் இருபுறமும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு விடுகிறது. இதனால் அந்தச் சாலையில் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போக்குவரத்துப் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -கவுதம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 6:05 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#59160

நாய்கள் தொல்லை

நாய்கள் தொல்லைமற்றவை

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பாதர் கெசு ரோட்டில் நாளுக்கு நாள் நாய்கள் தொல்லை அதிகமாகி வருகிறது. அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும், பள்ளி செல்லும் சிறுவர், சிறுமிகளும் அச்சப்படுகின்றனர். நகராட்சி சார்பில் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -உதயகுமார். சந்தைக்கோடியூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 6:01 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#59159

எரியாத தெரு மின் விளக்கு

மின்சாரம்

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட சக்தி நகர் முதல் தெருவில் தெரு மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் தெரு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதுகுறித்து நகராட்சியில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தெரு மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -தட்சிணாமூர்த்தி, சக்திநகர், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 5:58 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#59158

செயல்படாத சிறுவர் பூங்கா

செயல்படாத சிறுவர் பூங்காபூங்கா

வந்தவாசி நகராட்சி நிர்வாகத்தின் கீழ் புதிய பஸ் நிலையம் அருகில் ரூ.65 லட்சத்தில் சிறுவர் பூங்கா திறந்து மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை பூங்காவை பயன்படுத்தினர். தற்போது பூங்கா செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. மக்கள் நடைபயிற்சிக்கும், விளையாட்டுப் பயிற்சிக்கும் இடமில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் உடனே சிறுவர் பூங்காவை காலையிலும் மாலையிலும் திறப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். -கந்தன், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 5:55 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#59157

தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்படுமா?

தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்படுமா?போக்குவரத்து

வேலூர்-திருவண்ணாமலை இடையே முக்கிய நகரமாக உள்ள போளூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.1 கோடியே 3 லட்சத்தில் ரவுண்டானா, சாலை அகலப்படுத்துதல், பஸ் நிலையம் உள்ளே புதிதாக கழிவுநீர் கால்வாய், குளியல் அறைகள் ஆகியவை புனரமைக்கும் பணிகள் நடக்கின்றன. இதனால் போளூர் பஸ் நிலைய பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் சிக்கி நகர முடியாமல் தவிக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கலைஞர் சிலை அருகே தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்படுமா? -ராமர், போளூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 5:43 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#59156

சாலையில் பள்ளம்

சாலையில் பள்ளம்சாலை

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் பள்ளம் இருக்கிறது. அந்த இடத்தில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. பள்ளத்தை மூட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அப்துல்காதர், தூசி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 5:38 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#59155

சாலையை அகலப்படுத்த வேண்டும்

சாலை

கண்ணமங்கலம் புதுப்பேட்டை பகுதியில் இருந்து ரெட்டிபாளையம் வரை சாலை குறுகியதாக உள்ளது. அந்த வழியாக அரசு பஸ்சும், லாரியும் வந்தால் மாறி செல்ல சிரமமாக உள்ளது. புதுப்பேட்டை பகுதியில் சாலையோரம் ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றி ரெட்டிபாளையம் வரை சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -இர்பான், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 5:37 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#59154

பழுதான உயர் கோபுர மின் விளக்கு

பழுதான உயர் கோபுர மின் விளக்குமின்சாரம்

ஆரணியை அடுத்த மொழுகம்பூண்டி கிராமம் மத்திய அரசு சார்பில் சிறந்த கிராமமாக தேர்வு செய்யப்பட்டது. அங்கு சிமெண்டு சாலை, பக்க கால்வாய்கள் உள்பட பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஒன்று தான் உயர் கோபுர மின் விளக்கு. இந்த உயர் கோபுர மின் விளக்கு பழுதாகி ஓராண்டாகியும் இன்னும் சீரமைக்கவில்லை. ஊராட்சி, ஒன்றியம், மாவட்டம் ஆகிய நிர்வாக அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக உயர் கோபுர மின் விளக்கை சரி செய்ய வேண்டும். -பொன்குமார், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 5:35 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#59153

ஆமை வேகத்தில் நடக்கும் ரெயில் பாதை பணி

போக்குவரத்து

வந்தவாசி வழியாக திண்டிவனம்-நகரி ரெயில்பாதை அமைக்கும் பணி 20 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து ரெயில் பாதை அமைக்கும் பணியை விரைவுப்படுத்த வேண்டும். -ம.ம.பழனி, வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 6:54 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#59002

சாலையில் தேங்கும் கழிவுநீர்

சாலையில் தேங்கும் கழிவுநீர்கழிவுநீர்

காட்பாடி தாலுகா வஞ்சூர் கிராமத்தில் பி.டபிள்யூ.டி. நகர் உள்ளது. இங்குள்ள புதுத்தெருவில் கழிவுநீர் சாலையில் தேங்கி குட்டை போல் காட்சியளிக்கிறது. அந்த வழியாக நடந்து செல்வோர் கழிவுநீரில் இறங்கி தான் செல்ல வேண்டும். சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையில் தேங்கும் கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆனந்த்ராஜ், வஞ்சூர்.

மேலும்
ஆதரவு: 23
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick