Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
20 Oct 2024 8:17 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#50825

பயனற்ற மின் கம்பம்

பயனற்ற மின் கம்பம்மின்சாரம்

திருப்பத்தூர் மாவட்டம் வெள்ளகுட்டை மெயின் ரோட்டில் இருந்து ஆஞ்சநேய நகர், கணபதி நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் சாலையில் சுமார் 5 அடி உள்ளே ஒரு மின் கம்பம் பயனில்லாமல் உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் மின் கம்பிகள் தாழ்வாக உள்ளன. அந்த மின் கம்பத்தை அகற்ற மின்வாரியத்துறையினர் ஏற்பாடு செய்ய வேண்டும். -வசந்தா சிவகுமார், வெள்ளக்குட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Oct 2024 8:14 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#50824

பழுதான சாலை

பழுதான சாலைசாலை

நாட்டறம்பள்ளி ஒன்றியம் திம்மாம்பேட்டை பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் வீதியில் பிரதான சிமெண்டு சாலை கடந்த சில ஆண்டுகளாகப் பழுதடைந்துள்ளது. மழைக் காலங்களில் அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தனியார் பஸ்கள், பள்ளி பஸ்கள், மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து துறை சார்ந்த அதிகாரிகள் தலையிட்டு சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -எஸ்.சாரதி, திம்மாம்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Oct 2024 8:10 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#50823

மணல் கொள்ளை

மணல் கொள்ளைமற்றவை

ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதியில் உள்ள சுடுகாடு அருகே தினமும் இரவு பகலாக ஒரு கும்பல் தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. மணல் கொள்ளைைய தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். -ராமு, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Oct 2024 8:07 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#50822

தேங்கி நிற்கும் மழைநீர்

தேங்கி நிற்கும் மழைநீர்தண்ணீர்

வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் சவுத் அவன்யூ சாலையில், மழைநீர் வடிய வழியில்லாததால் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. தண்ணீரை வடிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பிரவீன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Oct 2024 8:06 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#50821

மேம்பால கான்கிரீட் சாலை சேதம்

மேம்பால கான்கிரீட் சாலை சேதம்சாலை

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அகரம் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. அங்கு வாலாஜா-கிருஷ்ணகிரி மார்க்கத்தில் ஒரு பாலமும், கிருஷ்ணகிரி-வாலாஜா செல்லும் மார்க்கத்தில் மற்றொரு பாலமும் என 2 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அதில் கிருஷ்ணகிரி-வாலாஜா மார்க்க பாலத்தின் மையத்தில் சாலை சேதம் அடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பூமிநாதன், பள்ளிகொண்டா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Oct 2024 8:02 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#50820

கால்வாய்க்கு மூடி போடுவார்களா?

கால்வாய்க்கு மூடி போடுவார்களா?கழிவுநீர்

காட்பாடி காந்திநகர் 11-வது கிழக்கு மெயின் சாலையில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. தற்போது அவற்றில் மூடி இல்லாததால் பள்ளமாக காணப்படுகிறது. இதனால் இரவில் நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாய் மேலே 2 மூடிகளை போட வேண்டும். -அகோரமூர்த்தி, காட்பாடி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Oct 2024 7:53 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#50818

சேதமான புதிய பஸ் நிலையம்

சேதமான புதிய பஸ் நிலையம்போக்குவரத்து

வேலூர் புதிய பஸ் நிலையம் கட்டி திறக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிறது. அவசர கதியில் திறக்கப்பட்டதால் பல பணிகள் முழுமை பெறவில்லை. ஆங்காங்கே உள்ள நடைபாதை கற்கள் உடைந்து காணப்படுகின்றன. அது மட்டுமல்லாமல் பஸ் நிலையத்தின் முகப்பு தோற்றம் தற்போது விரிசல் விட்டு உடைந்து கிடக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சர்ேவஸ்வரன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Oct 2024 7:33 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#50816

போக்குவரத்துக்கு இடையூறு

போக்குவரத்து

கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் சாலையில் சிவன் கோவிலுக்கு இடது பக்கம் செல்லும் தெருவின் ஆரம்ப நிலையில் வேகத்தடை உள்ளது. அங்கு வேகத்தடையை ஒட்டியபடியே இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமிப்பு உள்ளது. சிவன் கோவிலுக்கு சென்று விட்டு நெடுஞ்சாலைக்கு வந்து இடதுபக்கம் திரும்பும்போது விபத்துகள் ஏற்படுகிறது. ஆகவே வேகத்தடை அருகே விற்பனை செய்யப்படும் காய்கறி வண்டிகளை ஒழுங்குபடுத்தி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -டி.செல்வமணி,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Oct 2024 7:31 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#50815

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பைகளால் சுகாதார சீர்கேடுகுப்பை

ஆரணியில் இருந்து ஆற்காடு செல்லும் சாலையில் குறுக்குப் பாதையில் சேவூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராட்டினமங்கலம் பிரதான சாலையின் அருகில் குடியிருப்பு பகுதி உள்ளது. ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் சேகரிக்கும் குப்பைகள், கழிவுப்பொருட்களை கொண்டு வந்து இங்கே கொட்டுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தட்சிணாமூர்த்தி, ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Oct 2024 7:27 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#50814

சாலையோர முள் மரங்களை அகற்றுவார்களா?

சாலையோர முள் மரங்களை அகற்றுவார்களா?சாலை

வந்தவாசியில் கே.வி.டி. நகர் பின்பக்கம் 14-வது வார்டுக்கு உட்பட்ட பிரதான வீதி, நகரில் இருந்து வெளியே செல்லும் சாலையோரம் முள் மரங்கள் வளர்ந்து, பாதையை மறைக்கும் படியாக உள்ளது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு மரங்கள் வளர்ந்து காடுபோல் உள்ளது. இதனால் திருப்பத்தில் விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் நடந்து மற்றும் மோட்டார்சைக்கிளில் செல்வோரின் கண்களில் முள் குத்தி விடும் அபாயம் உள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து முள் மரங்களை அகற்ற வேண்டும். -எஸ்.சுரேஷ், சமூக...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 9:24 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#50653

தேங்கி கிடக்கும் குப்பைகள்

குப்பை

திருவண்ணாமலை நகராட்சி தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சி பகுதியில் வேங்கிக்கால் ஊராட்சியும் இணைக்கப்பட்டுள்ளது. வேங்கிக்கால் ஊராட்சியில் அரசு அலுவலர்கள் உள்பட அனைத்துத் தரப்பு மக்களும் வசிக்கின்றனர். வேங்கிக்கால் ஊராட்சியில் குப்பைகள் முறையாக அகற்றப்படாததால் ஆங்காங்கே தேங்கி காணப்படுகிறது. இந்த நிலையில் மழைக்காலம் தொடங்கி உள்ளதால் மழைப் பெய்யும் நேரத்தில் குப்பைகள் மக்கள் நடமாடும் சாலைப் பகுதியில் தேங்கி விடுகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்பு...

மேலும்
ஆதரவு: 47
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 9:21 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#50652

காலனி வீடுகள் பழுதுபார்க்கப்படுமா?

காலனி வீடுகள் பழுதுபார்க்கப்படுமா?மற்றவை

ஆரணியை அடுத்த ஆகாரம் காலனி பகுதியில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அது, தற்போது வாழ்வதற்கு தகுதியற்ற நிலையில் இருக்கின்றன. அங்கு வாழ்ந்த மக்கள் சிலர் தற்போது வேறு இடத்துக்கு சென்று விட்டனர். இந்த வீடுகளை பழுதுப் பார்த்துக் கொடுப்பதற்கோ அல்லது புதிதாக கட்டி தருவதற்கோ மாவட்ட நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா? -அருண், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick