Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 Oct 2024 8:14 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#50998

ஒரே இடத்தில் வைத்துள்ள குப்பைத் தொட்டிகள்

குப்பை

திருப்பத்தூர் அருகே புத்தகரம் பகுதியில் ஒரே இடத்தில் குப்பைத் தொட்டிகளை குவித்து வைத்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை சாலையோரம் கொட்டிச் செல்கின்றனர். குப்பைத்தொட்டிகளை பல்வேறு இடங்களில் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜேந்திரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Oct 2024 8:10 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#50997

பயணிகள் நிழற்குடை கட்டப்படுமா?

மற்றவை

தேசூர் அருகே மகமாய்திருமணி குண்ணகம்பூண்டி கூட்டுச்சாலையில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். மழை, வெயில் காலங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அவதிப்படுகின்றனர். தொகுதி எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மேம்பாட்டு நிதியில் இருந்து பயணிகள் நிழற்குடை கட்ட முன்வர வேண்டும். -பெ.ஆனந்தன், மகமாய்திருமணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Oct 2024 8:08 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#50996

தோண்டப்பட்ட பள்ளம் சரி செய்யப்படுமா?

தோண்டப்பட்ட பள்ளம் சரி செய்யப்படுமா?கழிவுநீர்

ஆரணி அரசு மருத்துவமனை எதிரே குடியிருப்புப் பகுதியில் கால்வாயில் அடைப்புகளை அகற்றுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டு 10 நாட்கள் ஆகிறது. அதை இன்னும் சரி செய்யாமல் வைத்துள்ளனர். இதனால் அரசு மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகள், அப்பகுதியில் வாகனங்களில் செல்லக்கூடிய பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தோண்டப்பட்ட கால்வாய் பள்ளத்தை சரி செய்வார்களா? -சசிக்குமார், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Oct 2024 8:06 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#50995

குப்பைத்தொட்டி வைக்க வேண்டும்

குப்பைத்தொட்டி வைக்க வேண்டும்குப்பை

வந்தவாசி தேரடியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளியின் சன்னதி தெரு நுழைவு வாயில் அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளது. அது, திறந்த வெளியில் உள்ளது. இதனால் கால்வாயில் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். அப்பகுதியில் குப்பைத்தொட்டி ைவக்க வேண்டும். மேலும் கழிவுநீர் கால்வாய்க்கு மூடி போட வேண்டும். -கந்தன், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Oct 2024 8:04 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#50994

தூர்வாரும் மண்ணை அகற்றுவார்களா?

தூர்வாரும் மண்ணை அகற்றுவார்களா?கழிவுநீர்

ஆரணி காந்தி மார்க்கெட் ரோடு, மண்டி வீதி பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி அருகில் வைக்கப்படும் மண்ணை சரிவர அள்ளுவது இல்லை. பல நாட்களாக கால்வாய் ஓரமாக மண் குவிந்துகிடக்கிறது. அந்த மண் மழை மற்றும் கால்நடைகளால் மீண்டும் கால்வாயிலேயே விழுகிறது. நகராட்சி துப்புரவு ஊழியர்கள் தூர்வாரும் மண்ணை உடனடியாக அகற்றுவார்களா? -ரமேஷ், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Oct 2024 8:02 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#50993

சாலையில் பள்ளங்கள்

சாலையில் பள்ளங்கள்சாலை

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராம மெயின் ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மாங்கால் கூட்டுச்சாலையில் இருந்து அப்துல்லாபுரம் கூட்டுச்சாலை வரை சாலையில் பள்ளங்கள் உள்ளன. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி இருக்கும்போது பள்ளங்கள் தெரியாமல் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர். சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும்.-அப்துல்காதர், தூசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Oct 2024 8:32 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#50831

கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

வாலாஜா பஸ் நிலையத்தில் கட்டண கழிவறை உள்ளது. இந்தக் கழிவறையில் இருந்து கழிவுநீர் வெளியேறி நேரடியாக பஸ் நிலையம் பின்பக்கம் உள்ள கங்கைகொண்டான் மண்டபம் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் கலந்து செல்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீர் தேங்காமல் இருக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -ராஜேஷ், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Oct 2024 8:30 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#50830

கடைகள் கட்டுவதால் பயணிகள் அவதி

மற்றவை

ஆற்காடு பஸ் நிலையத்தில் இருந்த கடைகள் இடிக்கப்பட்டு புதிய கடைகள் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ளன. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் நிற்பதற்குக்கூட இடமில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மழைக்காலம் என்பதால் நிற்க இடம் இன்றி அருகில் உள்ள கடைகளில் சென்று நிற்கின்றனர். இதனால் கடைக்காரர்கள் இங்கு நிற்க வேண்டாம் எனக் கூறுவதால் வீண் விவாதம் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி பஸ் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் கடைகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். -சந்திரன்,...

மேலும்
ஆதரவு: 12
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Oct 2024 8:28 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#50829

மயான பாதை ஆக்கிரமிப்பு

சாலை

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா கொண்டகுப்பம் காலனி மக்கள் பயன்படுத்தி வரும் மயானத்துக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து முள்வேலி அமைத்துள்ளனர். இதுதொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை நடவடிக்கை எடுக்க வில்லை. மனுவை பரிசீலனை செய்து மயான பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரமேஷ்குமார், கொண்டகுப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Oct 2024 8:25 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#50828

பால்வாடி மைய நுழைவு வாயில் திறக்கப்படுமா?

மற்றவை

ஆற்காடு நகராட்சி முஸ்லிம் பள்ளியில் இயங்கி வரும் பால்வாடி மையத்தின் நுழைவு வாயிலை பூட்டி வைத்துள்ளனர். இதனால் குழந்தைகள் பால்வாடி மைத்துக்கு வருவதற்காக தொலைதூர பாதை வழியாக சுற்றிக்கொண்டு வருகின்றனர். அடிக்கடி விபத்துகள் ஏற்படும் வழியாகத்தான் அவர்கள் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி தெரு பக்கம் இருக்கும் நுழைவு வாயிலை திறந்து விட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அண்ணாசாமி, ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 7
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Oct 2024 8:20 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#50827

குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?

தண்ணீர்

திருப்பத்தூர் புதுப்பேட்டை அருகே குடிநீர் தொட்டி ஒன்று பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அந்தக் குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்குக் கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -செந்தில்நாத், புதுப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Oct 2024 8:19 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#50826

பயனற்ற குப்பைத்தொட்டி

குப்பை

கந்திலி அருகே குண்டுமேடு பகுதியில் குப்பைத்தொட்டி பயனற்ற முறையில் உள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை சாலையோரம் கொட்டிச் செல்கின்றனர். அந்தப் பகுதியில் குப்பைத்தொட்டிகளை மக்கள் பயன்பாட்டுக்கு வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆதிமூலம், கந்திலி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick