Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 July 2022 4:33 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#4891

பள்ளி தரம் உயர்த்தப்படுமா?

மற்றவை

சேத்துப்பட்டு தாலுகா ஆவணியாபுரம் கிராமத்தில் உயர்நிலைப்பள்ளி உள்ளது. அதில் மேல்சாத்தமங்கலம், நரியம்பாடி, எஸ்.காட்டேரி, அன்மருதை, ஆமணந்தாங்கல், சஞ்சீவிராயபுரம், பில்லாந்தி, காந்திநகர், சோழவரம், கட்டமங்கலம், கடப்பந்தல் ஆகிய கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் வந்து படித்து வருகின்றனர். உயர்நிலைப் பள்ளிைய மேல்நிலைப்பள்ளியாக தமிழக அரசு தரம் உயர்த்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 4:30 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#4889

சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் அவதி

மற்றவை

திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட தண்டராம்பட்டு சாலை மற்றும் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே மாட வீதியில் காலை, மாலையில் ஏராளமான மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள், பக்தர்கள் அவதிப்படுகிறார்கள். மாடுகள் சாலையை கடக்கும்போது வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின்றன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 4:28 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#4887

மோட்டார்சைக்கிளில் வேகமாக செல்லும் வாலிபர்கள்

போக்குவரத்து

திருவண்ணாமலை வேங்கிகால் பகுதி காலை முதல் இரவு வரை எப்போதும் பரபரப்பாக காணப்படும். அங்குள்ள அண்ணா நுழைவு வாயிலில் இருந்து போளூர் சாலை வழியாக மாலை நேரத்தில் ஒரு சில இளைஞர்கள் மோட்டார்சைக்கிளில் மின்னல் வேகத்தில் செல்கின்றனர். இதனால் சாலையில் நடந்து செல்லும் முதியவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகிறார்கள். சாலையில் வேகத்தடைகள் இருந்தாலும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் செல்லும் அவர்கள் வளைந்து, நெளிந்து செல்வதை காண்போருக்கும் அச்சம் ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 5:34 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#4495

பஸ்களில் பின்பக்கமும் பெயர் பலகை வேண்டும்

பஸ்களில் பின்பக்கமும் பெயர் பலகை வேண்டும்போக்குவரத்து

கே.வி.குப்பம் பகுதி வழியாக குடியாத்தம், காட்பாடி, வேலூர், ஆற்காடு, வாலாஜா, சென்னை என பல்வேறு ஊர்களுக்கு அரசு பஸ்கள் சென்று வருகின்றன. அதில் ஒரு சில பஸ்களில் முன்பக்கம் மட்டுமே பஸ் எந்த ஊருக்கு செல்கிறது என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பின்பக்கம் பெயர் பலகை வைக்கவில்லை. முன்பக்கம் ெபயர் பலகை ைவப்பதுபோல் பின் பக்கமும் ைவக்க வேண்டும். இல்லைேயல், ஊர் பெயர் எழுதப்பட்ட ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். இதற்கு போக்குவரத்துக்கழக பணிமனை மேலாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 5:33 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#4493

சேறும், சகதியுமான சாலை

சேறும், சகதியுமான சாலைசாலை

காட்பாடி காங்கேயநல்லூரில் ராதாகிருஷ்ணன் நகர் 2-வது குறுக்கு தெரு உள்ளது. இந்தத் தெருவில் உள்ள சாலை சேறும், சகதியுமாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால், சாலையில் பல இடங்களில் குட்டை குட்டையாக மழைநீர் தேங்கி உள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்வோர் கீழே விழுகிறார்கள். 4 மாதமாக மிகவும் மோசமான நிலையில் உள்ள சாலையை போர்க்கால அடிப்படையில் மழைநீரை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 5:31 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#4491

பள்ளி சாலையை சீரமைக்க வேண்டும்

பள்ளி சாலையை சீரமைக்க வேண்டும்சாலை

வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகரில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. பள்ளியின் முன்பு உள்ள தெரு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு மீண்டும் சரி செய்யப்படாமல் உள்ளது. பள்ளி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 5:29 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#4490

மின்கம்பம் சேதம்

மின்கம்பம் சேதம்மின்சாரம்

வேலூர் சத்துவாச்சாரியில் ஜீவி பிளாட் உள்ளது. இங்குள்ள பி-46, எஸ்-1365 என்ற எண்ணுக்கு உரிய மின்கம்பத்தின் அடிப்பகுதி சிமெண்டு பூச்சுகள் உடைந்து உள்ளே உள்ள கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரியத்துைற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 5:24 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#4487

குடிநீர் குழாய் உடைப்பு

குடிநீர் குழாய் உடைப்புதண்ணீர்

வேலூர் கோட்டை வளாகத்தில் மசூதி அருகே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து தண்ணீர் வீணாக ெவளிேயறிக்கொண்டே இருக்கிறது. குழாய் உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 5:21 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#4485

தார் சாலை அமைக்க வேண்டும்

தார் சாலை அமைக்க வேண்டும்சாலை

திருப்பத்தூர் அருகே பாச்சல் ஊராட்சியில் பசுமை நகர் உள்ளது. இங்கு குழந்தைகள் இல்லம் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு செல்லும் சாலை கற்கள் பெயர்ந்து கரடுமுரடாக உள்ளது. அந்த வழியாக செல்லும் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே பசுமை நகருக்கு செல்லும் சாலையை தார் சாலையாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 5:13 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#4483

சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்

சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்குப்பை

அரக்கோணத்தில் உள்ள சோளிங்கர் நெடுஞ்சாலையோரம் இறைச்சி கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுகிறது. இறைச்சி கழிவுகளை சாலையோரம் கொட்டுவோர் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 4:54 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#4477

சுத்தமில்லாத சுகாதார வளாகம்

மற்றவை

திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்துக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தப் பஸ் நிலையத்தில் தண்டராம்பட்டு பஸ்கள் நிற்கும் பகுதியில் ஆண்கள், பெண்களுக்கான இலவச சிறுநீர் கழிவறை உள்ளது.இந்தச் சுகாதார வளாகம் சுத்தமின்றி துர்நாற்றம் வீசுகிறது. அதை, பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தை சுத்தமாக வைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 6:30 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#4062

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுமா?

மற்றவை

வேலூர் மாவட்டத்தில் இயங்கும் அரசு, தனியார் பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இதனால் திருட்டு மற்றும் குற்றச்சம்பவங்களை தடுக்கலாம். அரசு, தனியார் பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டள்ளது என அறிவிப்பும் செய்யப்பட வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick