Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
4 Sep 2022 10:36 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#12686

சர்வீஸ் சாலையில் கழிவுநீர்

கழிவுநீர்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கிரீன்சர்க்கிள் செல்லும் சர்வீஸ் சாலையின் ஓரம் கழிவுநீர் கால்வாய் அமைந்துள்ளது. இந்தக் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் வெளியேறி சாலையில் செல்கிறது. அதன் மீது வாகனங்கள் செல்லும்போது நடந்து செல்லும் மக்கள் மீது கழிவுநீர் தெளிக்கப்படுகிறது. எனவே கால்வாய் அடைப்பை சரி செய்ய வேண்டும். -மதன்பாண்டியன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Sep 2022 10:29 AM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#12684

சேதம் அடைந்து வரும் சாலை

சேதம் அடைந்து வரும் சாலைசாலை

வேலூர் அருகே செதுவாலை பைபாஸ் சாலையில் இருந்து விரிஞ்சிபுரம் செல்லும் சாலையில் கெங்கையம்மன் கோவில் உள்ளது. கோவில் எதிரில் உள்ள சாலையின் நடுவில் சிறிய அளவில் இருந்த சேதம், தற்போது அதிகமாகி பெரிய பள்ளமாக உள்ளது. சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மார்க்கபந்து, செதுவாலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 5:43 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#12666

எரியாத உயர் கோபுர மின்விளக்குகள்

எரியாத உயர் கோபுர மின்விளக்குகள்மின்சாரம்

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் உள்ள கண் சிகிச்சை பிரிவு மற்றும் பிரசவ பிரிவு பகுதி அருகே உள்ள உயர் கோபுர மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் நோயாளிகளும், வயதானவர்களும் இருளில் தவறி விழுந்து சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே உயர் கோபுர மின்விளக்குகளை எரியவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - பொய்யாமொழி, அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 5:45 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#12665

சாலை பழுது

சாலை பழுதுசாலை

ராணிப்பேட்டை மாவட்டம் பாராஞ்சியில் இருந்து கே.ஜி.கண்டிகை செல்லும் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால் இச்சாலையில் வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் மிகுந்த சிரமப்படுகின்றனர். சில சமயங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வயதானவர்கள், குழந்தைகள் ஆகியோர் கீழே விழுந்து காயமடையும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே இச்சாலையை விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -எம்.கஜேந்திரன், பரவத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 5:30 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#12664

கல்லூரி கூட்டத்தில் அடிப்படை வசதிகள் இல்லை

மற்றவை

வாலாஜா பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் கடந்த சில நாட்களாக கலந்தாய்வு கூட்டம் நடந்து வருகிறது. கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றும் மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு அடிப்படை வசதி எதுவும் கல்லூரி நிர்வாகம் சார்பாக செய்து தரப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வண்டார்குழலி, வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 12:28 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#12523

மின்கம்பங்கள் சேதம்

மின்கம்பங்கள் சேதம்மின்சாரம்

தண்டராம்பட்டு ஒன்றியத்துக்கு உட்பட்டது வாணாபுரம். இங்குள்ள தச்சம்பட்டு செல்லும் சாலையில் மின்சார டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. டிரான்ஸ்பார்மரில் உள்ள 2 மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. அந்த மின்கம்பங்களை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவா, வாணாபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 12:18 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#12517

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையம் உள்ள தெருவில் தண்ணீர் தொட்டி அருகே குப்பைகள் அதிகமாக கொட்டப்படுகிறது. இதனால் தண்ணீர் பிடிக்க வரும் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்ைக எடுத்து குப்பைகளை அகற்றுமா? -பிரபு, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 12:11 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#12514

டெலஸ்கோப் இல்லத்தை திறக்க வேண்டும்

டெலஸ்கோப் இல்லத்தை திறக்க வேண்டும்பூங்கா

ஏலகிரிமலையில் உள்ள 12-வது கொண்டை ஊசி வளைவில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள "டெலஸ்கோப் இல்லம்" மிகவும் பழுதடைந்து, கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து சேதமடைந்த கட்டிடத்தைப் புதுப்பித்து மீண்டும் டெலஸ்கோப் இல்லத்ைத திறக்க ேவண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் எதிா்பார்ப்பாகும். -த.வீரமணி, ரெட்டியூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 12:04 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#12508

தகவல் பலகையில் மாவட்டத்தின் பெயரை மாற்றுவார்களா?

தகவல் பலகையில் மாவட்டத்தின் பெயரை மாற்றுவார்களா?மற்றவை

திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு 3 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில். மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதியில் பெரும்பாலான அரசு அறிவிப்பு, விளம்பர பலகைகளில் இன்னும் வேலூர் மாவட்டம் என்றே உள்ளது. இதனால் புதிதாக ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகளுக்கு பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. குறிப்பாக பரதேசிப்பட்டி ஊராட்சியில் அரசு தகவல் பலகையில் இன்னும் வேலூர் மாவட்டம் என்றே உள்ளது. இதே போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் மாவட்டத்தின் பெயரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரணவ்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 11:25 AM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#12489

மின் விளக்குகள் எரியுமா?

மின்சாரம்

வேலூர்-சித்தூர் நெடுஞ்சாலையில் செங்குட்டை விநாயகர் கோவில் அருகில் இருந்து ராஜீவ்காந்தி நகர் கல்புதூர் வரையிலும் சாலையின் நடுவே தடுப்புச்சுவரில் அமைந்துள்ள 20 கம்பங்களில் 40 மின் விளக்குகள் 15 நாட்களாக எரியவில்லை. இரவில் அந்த வழியாக செல்வோருக்கு திருட்டு பயம் உள்ளது. மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் மின் விளக்குகளை எரியவிடுவார்களா? -பி.துரை, கல்புதூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 9:17 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#12467

சேறும் சகதியுமான மாநகராட்சி வளாகம்

சேறும் சகதியுமான மாநகராட்சி வளாகம்கழிவுநீர்

வேலூர் அண்ணா சாலையில் உள்ள பழைய மாநகராட்சி வளாகத்தில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக சேரும், சகதியும் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக மாநகராட்சி அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் சகதியில் வழுக்கி கீழே விழும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாயவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 9:14 AM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#12466

குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

காட்பாடி காந்திநகர் சில்க்மில் பஸ் நிறுத்தத்தில் இருந்து வேலூர் அரசு சட்டக் கல்லூரி, அரசு கல்வியியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் ஜல்லிகற்கள் பெயர்ந்து சாலை மோசமான நிலையில் உள்ளது. இதில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் மாணவ, மாணவிகள் தவறி கீழே விழுந்து எழுந்து செல்கின்றனர். பொதுமக்கள், வியாபாரிகள் எனப் பலதரப்பட்ட மக்கள் இந்தச் சாலையை பயன்படுத்துகின்றனர். எனவே இந்தச் சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். -தினேஷ்குமார், காந்திநகர், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick