Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 Sep 2022 2:19 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#13642

பன்றிகள் தொல்லை

பன்றிகள் தொல்லைமற்றவை

வேலூரில் வசந்தபுரம் பர்மா காலனியில் பன்றிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் சுகாதாரக் கேடால் பொதுமக்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. பன்றிகள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -சிவசுப்பிரமணியம், வசந்தபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2022 12:55 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#13595

கால்வாயில் கொட்டப்படும் கழிவுப்பொருட்கள்

கால்வாயில் கொட்டப்படும் கழிவுப்பொருட்கள்குப்பை

ஆரணி கொசப்பாளையம் மல்லி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமண நாட்களில் அங்கு கழிவுப்பொருட்கள் அனைத்தும் கால்வாயில் கொட்டப்படுவதாகவும், இதனால் வேதபுரீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள கால்வாய் முழுவதும் துர்நாற்றம் வீசும் நிலையில் உணவுப்பொருட்கள் சிதறி கிடக்கின்றன. மேலும் அவற்றை பன்றி, மாடுகள் உள்பட கால்நடைகள் வந்து உண்ணுவதால் மேலும் அசுத்த நிலை அதிகரித்து வருகிறது. நகராட்சி நிர்வாகம் உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். -சந்திரசேகரன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2022 12:50 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#13593

கால்வாய் வசதி வேண்டும்

கால்வாய் வசதி வேண்டும்கழிவுநீர்

ரத்தினகிரி அருகே பூட்டுத்தாக்கு உள்ளது. இங்குள்ள கீழாண்டை தெருவில் பாதி தெருவுக்கு மட்டும் கழிவு நீர் கால்வாய் கட்ட பட்டுள்ளது. மீதி தெரு முழுவதும் கழிவுநீர் தெருவில் ஓடுகிறது. தெரு முழுவதும் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மோகன்பாபு, ரத்தினகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2022 12:38 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#13589

நாய்கள் தொல்லை

நாய்கள் தொல்லைமற்றவை

பாணாவரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் நாளுக்கு நாள் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. குடியிருப்புகள், சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகிறது. சாலையில் வாகனங்கள் செல்லும்போது குறுக்ேக ஓடி விபத்தை ஏற்படுத்துகிறது. சாலை ஓரங்களில் உள்ள இறைச்சி, சிக்கன் பக்கோடா கடைகளில் தூக்கி எறியப்படும் எலும்பு துண்டுகளை தின்பதற்காக நாய்கள் சண்டையிடுகின்றன. அப்போது அருகில் நிற்போரை கடித்து விடுகின்றன. நாய்களை பிடிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுரேஷ், நெமிலி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2022 12:29 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#13587

டிரான்ஸ்பார்மரில் படர்ந்திருக்கும் செடி கொடிகள்

டிரான்ஸ்பார்மரில் படர்ந்திருக்கும் செடி கொடிகள்மின்சாரம்

அரக்கோணம் வின்டர்பேட்டையில் ராம்கோ செல்லும் ரோட்டில் இருக்கும் ஒரு மின்சாரடி டிரான்ஸ்பார்மரில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. அதன் அருகில் புதர் வளர்ந்து காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரூபன், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2022 12:01 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#13581

சாலையோர கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்வார்களா?

மற்றவை

ஆற்காடு பகுதிகளில் காலை மற்றும் இரவில் சாலையோர கடைகள் அதிகமாக அமைக்கப்பட்டு வியாபாரம் செய்து வருகின்றனர். இந்தக் கடைகளில் பயன்படுத்தப்படும் எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி சுகாதார சீர்கேடு விளைவிக்கும் வகையில் உணவு தயாரிக்கின்றனர். மேலும் சிக்கன் பக்கோடா கடைகளிலும் ஜிகண்டு எண்ணெயே பயன்படுத்துகின்றனர். இது குறித்து சுகாதார அலுவலர்கள் மற்றும் உணவு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்களா? -மஸ்தான், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2022 4:35 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#13579

மாடுகள் தொல்லை

மாடுகள் தொல்லைமற்றவை

வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு பகுதியில் உள்ள ஒரு மசூதி பின்பக்க தெருவில் அதிகளவில் மாடுகள் சுத்தித்திாிகின்றன. அந்த மாடுகள் வளா்ப்பு மாடுகள் அல்ல. இறைச்சிக்காக பயன்படுத்தப்படும் மாடுகள் ஆகும். அந்த மாடுகள் சாலையில் செல்வோரை முட்ட வருகின்றன. மாடுகள் தொல்லையால் பொதுமக்கள், குழந்தைகள் வெளியே வர அச்சப்படுகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சரவணன், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2022 11:36 AM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#13570

ஓடை நீர் செல்ல சாலை துண்டிப்பு

ஓடை நீர் செல்ல சாலை துண்டிப்புசாலை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தாலுகா பெரியாண்டவர் கோவில் அருகே சரஸ்வதி ஆற்றின் துணை ஆறு உள்ள பகுதியில் ஓடை ஆற்றுப் பகுதியில் தார் சாலை உள்ளது. இந்தத் தார் சாலை வெள்ளநாய்க்கனேரி பகுதிக்கு செல்கிறது. இந்தச் சாலையில் தினமும் நூற்றுக்காணக்கான மக்கள் சென்று வருகிறார்கள். இந்தத் தார் சாலை, பெரியாண்டவர் கோவில் அருகே ஓடை நீர் செல்ல தடையாக உள்ளதால், சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தரைப்பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2022 11:15 AM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#13549

மின்விளக்கு எரியவில்லை

மின்சாரம்

ஆம்பூர் கிருஷ்ணாபுரம் புதுத்தெருவில் ஒரு மின் விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்சாரத் துறையினர் உடனடியாக நடவடிக்ைக எடுத்து எாியாத மின் விளக்கை சீர் செய்து எரியவிட வேண்டும். -கணேஷ், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2022 11:11 AM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#13548

தினத்தந்திக்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிகழிவுநீர்

ஜோலார்பேட்டை அருகே ஆசிரியர் நகர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு செல்லும் வழியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழைநீரும், கழிவுநீரும் ேசா்ந்து குளம் போல் தேங்கி இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. அதன் எதிெராலியால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குளம் போல் தேங்கிய கழிவுநீைர அகற்றினா். நடவடிக்ைக எடுத்த அதிகாாிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனா். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2022 10:10 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#13527

மழையால் விழுந்த மரம் அகற்றப்படுமா?

மற்றவை

வாலாஜா தாலுகா அலுவலக வளாகத்தில் சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையால் பெரிய மரம் ஒன்று விழுந்தது. பல நாட்களாகக் கிடக்கும் மரத்தை முழுமையாக வெட்டி அகற்றப்படவில்லை. ஆகவே தாலுகா அலுவலக வளாகப் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு வரும் மக்கள் அவதிப்படுகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சிங்கராயர், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2022 10:08 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#13524

அரசு பள்ளியில் குரங்குகள் அட்டகாசம்

அரசு பள்ளியில் குரங்குகள் அட்டகாசம்மற்றவை

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 500 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்தப் பள்ளியில் ஏராளமான குரங்குகள் வந்து, கடந்த ஒரு வாரமாக மரக்கிளைகளில் ஏறி அட்டகாசம் செய்து வருகின்றன. மாணவர்களின் சைக்கிள் சீட்டுகளை கிழிப்பது, மாணவர்களை பயமுறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் மாணவர்கள் மிகவும் அச்சத்துடன் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். எனவே மாணவர்கள் நலன் கருதி பள்ளியில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து, வனப்பகுதியில் விட ேவண்டும். -பொதுமக்கள், கணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick