Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 Sep 2022 10:04 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#13521

தூர்வாரும் மண்ணை அகற்ற வேண்டும்

தூர்வாரும் மண்ணை அகற்ற வேண்டும்கழிவுநீர்

பேரணாம்பட்டு டவுன் புதுவீதி, குல்ஜார் வீதி, ஆதம்சாவீதி, ஒத்த வாடை, மதனி வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கால்வாய்களில் தூர்வாரி எடுக்கப்படும் கால்வாய் மண் உடனடியாக அகற்றப்படாத தால் மீண்டும் கால்வாயினுள் செல்கிறது. கால்வாயில் கழிவுநீர் நிரம்பி வழிந்து தேங்கி வருகிறது. உடனடியாக கால்வாய் தூர்வாரும் மண்ணை அகற்ற பேரணாம்பட்டு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -கே.ஏ.அக்பர்பாஷா, பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2022 9:57 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#13514

நூலகத்தை திறக்க வேண்டும்

நூலகத்தை திறக்க வேண்டும்மற்றவை

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது நரியாபட்டு. இங்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு நூலக கட்டிடம் கட்டப்பட்டு, அதில் நூல்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது நூலகம் கட்டிடம் எந்த ஒரு பயன்பாடும் இல்லாமல் சேதமான நிலையில் காணப்படுகிறது. இந்த நூலகம் எந்த ஒரு பயன்பாடும் இல்லாமல் பூட்டியே கிடக்கிறது. கட்டிடங்கள் சேதம் ஏற்பட்டு வருகிறது. கட்டிடத்தை சீரமைத்து நூலத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவா, நரியாபட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 5:58 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#13498

மழைநீரை அகற்ற ஏற்பாடு செய்வார்களா?

தண்ணீர்

சோளிங்கரில் உள்ள அரக்கோணம் சாலையில் ஒரு தனியார் தொழிற்சாலை எதிரே நரிக்குறவர்கள் காலனிக்கு செல்லும் சாலையின் தொடக்கத்தில் மழைநீர் தேங்கி உள்ளது. அந்த மழைநீரை அகற்ற நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். -பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 5:59 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#13497

மின்விளக்கை காணவில்லை

மின்விளக்கை காணவில்லைமின்சாரம்

பாணாவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அருகே மோட்டூர் பகுதிக்கு செல்லும் தெருவில் உள்ள மின்கம்பத்தில் மெர்குரி விளக்கு அமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மின்விளக்கு இல்லாமல் நீண்ட நாட்களாக முறையான பராமரிப்பின்றி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரத்தில் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்கின்றனர். சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரகாஷ், பாணாவரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 5:43 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#13496

சாலையில் தேங்கும் மழைநீரால் மக்கள் அவதி

சாலையில் தேங்கும் மழைநீரால் மக்கள் அவதிசாலை

காவேரிப்பாக்கம் ஒன்றியம் பாணாவரம் ஊராட்சிக்கு உட்பட்ட பழைய பைரா காலனியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான சாலை வசதி இல்லாததாலும், மழைக்காலத்தில் குடியிருப்பு பகுதிகளை சுற்றி மழைநீர் குளம்போல் தேங்குவதாலும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் வெளியே செல்ல முடியாமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் முறையான சாலை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். -சுரேஷ், பாணாவரம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 5:35 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#13495

ஆபத்தான பயணம்

ஆபத்தான பயணம்போக்குவரத்து

ஆற்காட்டில் இருந்து ஆரணிக்கு ஏராளமான தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்தநிலையில் ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் ஒரு தனியார் பஸ்சில் ஆபத்தான நிலையில் பஸ்சின் படிக்கட்டுகளிலும், பின்பக்கம் உள்ள ஏணியிலும் தொங்கியவாறு ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். அசம்பாவிதம் நடக்கும் முன் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து கூடுதல் அரசு பஸ்களை இயக்குவார்களா? -வெங்கட்ராமன், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 5:16 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#13487

தேங்கும் மழைநீரை வடிய வைப்பார்களா?

சாலை

அரக்கோணம் புதிய பஸ் நிலைய வளாகத்தில் இருந்து திருத்தணி செல்லும் பாதையில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவில் அருகே மற்றும் திருப்பத்திலும் உள்ள சாலையும் குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால், கடந்த சில நாட்களாக பெய்த மழைநீர் அந்தப் பள்ளங்களில் தேங்கி குட்டைபோல் காட்சியளிக்கிறது. வாகனங்கள் செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் தேங்கும் மழைநீரை வடிய வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுந்தரம், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 5:08 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#13478

அலங்கார வளைவுகள் அகற்றப்படுமா?

அலங்கார வளைவுகள் அகற்றப்படுமா?மற்றவை

திருப்பத்தூரில் நகர காவல் நிலையம் அருகே தனியார் பள்ளி நிகழ்ச்சி நடந்தது. அதில் பங்ேகற்க அமைச்சர் வருகை தர இருந்தார். ஆனால், அமைச்சர் வரவில்லை. எனினும், பள்ளி நிகழ்ச்சி முடிந்து விட்டது. அதற்காக, வைக்கப்பட்ட அலங்கார வளைவுகளை இன்னும் அகற்றாமல் வைத்துள்ளனர். இது, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அகற்றுமா? -பாபுராஜேந்திரகுமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 1:28 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#13364

மழைநீரை வெளியேற்ற கால்வாய் அமைக்க வேண்டும்

மழைநீரை வெளியேற்ற கால்வாய் அமைக்க வேண்டும்கழிவுநீர்

வாணியம்பாடி நகராட்சி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் மழை நீர் தேங்கி நிற்கிறது இதற்கு முறையான கால்வாய் அமைத்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்னேற வேண்டும். ஏனெனில் இப்பகுதியிலேயே பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரபிக் கல்லூரி உள்ளிட்டவை இருக்கின்றன. மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டு உள்ளே செல்லும் நிலை உள்ளது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன் வரவேண்டும். -அகமது பாஷா, வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 1:23 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#13361

உழுத நிலம்போல் மாறிய சாலை

உழுத நிலம்போல் மாறிய சாலைசாலை

ஆம்பூரை அடுத்த உமராபாத் போலீஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தெருவில் சாலை சேறும்சகதியுமாக உள்ளது. நெல் நாற்று நடவுக்கு உழவடித்த சாலையாக காட்சியளிக்கிறது. அந்த வழியாக செல்வோர் மிகுந்த சிரமப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமமூர்த்தி, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 1:17 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#13360

குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலைசாலை

ஜோலார்பேட்டை அருகே ஆஞ்சநேயர் கோவில் எதிரில் சின்னா கவுண்டனூர் பகுதிக்கு செல்லும் சாலை குண்டு குழியுமாக உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பள்ளி மாணவ- மாணவிகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குண்டு குழியுமாக உள்ள தார் சாலையை சீரமைக்க வேண்டும். -த.வீரமணி, ரெட்டியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 12:25 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#13336

கழிவுநீா் கால்வாைய தூா்வார வேண்டும்

கழிவுநீா் கால்வாைய தூா்வார வேண்டும்கழிவுநீர்

வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டு அச்சரப்பாக்கம் ரோட்டில் காவலர் குடியிருப்பு அருகில் கால்வாயில் கழிவுநீர் செல்லாமல் தேங்கி உள்ளதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீர் தேங்காாமல் இருக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -விநாயகம், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick