Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
25 Sep 2022 11:28 AM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#17114

சிமெண்டு சிலாப் அமைக்கப்படுமா?

சிமெண்டு சிலாப் அமைக்கப்படுமா?கழிவுநீர்

காட்பாடி தாராபடவேடு மாநகராட்சி அலுவலகம் எதிரே பழைய திருவலம் செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் மேற்பகுதியில் சிமெண்டு சிலாப் அமைக்கப்படாததால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு சிரமமாக உள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க இரும்புத் தடுப்பை வைத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் அந்தக் கால்வாயின் மேற்பகுதியில் சிமெண்டு சிலாப் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெயபாண்டியன், தாராபடவேடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022 11:19 AM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#17113

பஸ்சில் ஆபத்தான பயணம்

பஸ்சில் ஆபத்தான பயணம்போக்குவரத்து

கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் போளூருக்கு வந்து படித்துச் செல்கின்றனர். போளூருக்கு போதிய பஸ் வசதி இல்லாததால், மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் போதும், மாலை வீடு திரும்பும்போதும் பஸ்களில் படிக்கட்டுகள், பஸ்சின் மேற்கூரை, பின்பக்கம் உள்ள ஏணிகளில் ஏறி ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். போக்குவரத்துக்கழக அதிகாரிகள் மாலை, காலை நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். -செந்தில்குமார், போளூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022 9:35 AM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#17101

கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

போக்குவரத்து

திருப்பத்தூரில் இருந்து புதுப்பேட்டை வழியாக நாட்டறம்பள்ளி செல்லும் சாலையில் அக்ரஹாரம் பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரிக்கு செல்வதற்கு திருப்பத்தூரில் இருந்து போதுமான பஸ் வசதி கிடையாது. ஒரே ஒரு அரசு டவுன் பஸ் மட்டுமே செல்வதால் மாணவர்கள் படியில் தொங்கி கொண்டு பயணம் செய்யும் நிலை உள்ளது. இதனால் தினமும் கல்லூரி மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி காலை, மாலை வேளையில் கூடுதல் அரசு பஸ்களை இயக்க வேண்டும். -எஸ்.கவுதம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022 9:30 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#17100

மரக்கிளையை அகற்ற வேண்டும்

மரக்கிளையை அகற்ற வேண்டும்மற்றவை

வேலூர் அண்ணா சாலை அருகே கோட்டை பூங்காவில் பெரிய மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தின் கிளை கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென முறிந்து விழுந்தது. இரவு நேரம் என்பதால் அங்கு பொதுமக்கள் யாரும் இல்லை. எனவே எந்த ஒரு விபத்தும் ஏற்படவில்லை. ஆனால் அந்த மரக்கிளை அப்படியே கிடக்கிறது. இதனால் பூங்காவுக்கு பொழுதைக் கழிக்க வரும் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முறிந்து விழுந்த மரக்கிளையை அகற்ற முன்வர வேண்டும். -மாயவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022 9:26 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#17099

வீணாக செல்லும் குடிநீர்

வீணாக செல்லும் குடிநீர்தண்ணீர்

வேலூர் பழைய பைபாஸ் சாலை ஓரம் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி சாலையோரம் தேங்கி காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் மற்றும் நடந்து செல்பவர்கள் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாயை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாயகிருஷ்ணன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022 9:22 AM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#17098

அமரர் ஊர்தியை ஒதுக்குப்புறமாக நிறுத்த வேண்டும்

அமரர் ஊர்தியை ஒதுக்குப்புறமாக நிறுத்த வேண்டும்மற்றவை

வெம்பாக்கம் தாலுகா தூசி மெயின் ரோட்டில் புதிய பஸ் நிறுத்தம் அருகில் அமரர் ஊர்தி வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த வழியாக தனியாக பெண்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். சம்பந்தப்பட்டவா்கள் அந்த வாகனத்தை ஊருக்கு ஒதுக்குப்புறமாக நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். -சரவணக்குமார், தூசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 5:00 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#17070

சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லும் அவலம்

போக்குவரத்து

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிக்கொண்டு செல்கிறார்கள். இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே லாரி மற்றும் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மீது போலீசாரும், போக்குவரத்துத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும். -சக்கரவர்த்தி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 4:57 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#17069

நாய்களை பிடித்து காட்டில் விட வேண்டும்

மற்றவை

நாட்டறம்பள்ளி பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட அதிபெரமனூர் பகுதியில் உள்ள தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவில் பணி முடிந்து, வீட்டுக்கு செல்லும் போது, அந்த வழியாக செல்லும் நபர்களை நாய்கள் துரத்தி வந்து கடிக்க பாய்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை பிடித்துக் காட்டிவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். -இல.குருசேவ், கவுன்சிலர் நாட்டறம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 4:55 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#17068

உயர் கோபுர மின் விளக்கு எரியவில்லை

மின்சாரம்

ஆம்பூர் வி.ஏ.கரீம் ரோட்டில் உயர் கோபுர மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் மின்விளக்கு எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக உயர் கோபுர மின்விளக்கை சரி செய்து எரியவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். -கலில், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 4:42 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#17062

வரி செலுத்தாதவர்களின் பெயர் பலகை வைக்க வேண்டும்

மற்றவை

வாலாஜா பஸ் நிலையத்தையொட்டி உள்ள நகராட்சி அலுவலக வளாகத்தில் நகராட்சிக்கு அதிகளவில் வரி செலுத்தாதவர்கள் பெயர் மற்றும் முகவரியை பலகையில் எழுதி பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். இதுகுறித்து நகராட்சி நிாவாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். -ரேகாபிாியதா்ஷினி, வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 4:39 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#17058

வேகத்தடை அமைப்பார்களா?

சாலை

வாலாஜாபேட்டை படவேட்டம்மன் கோவிலை அடுத்து வாலாஜா, அம்மூர், சோளிங்கர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் மூன்று வழி சாலை சந்திப்பு உள்ளது. இந்தப் பகுதியில் அதிகளவில் விபத்துகள் ஏற்பட்டுகிறது. இந்த மூன்று வழி சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா? -ராஜகோபால், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 12:32 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#16924

ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலை

ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலைசாலை

அரக்கோணத்தை அடுத்த தணிகைபோளூர் பஞ்சாயத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ஜி.கே.என்.நகர் முதல் வாணியம்பேட்டை வரை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அமைக்கப்பட்ட தார் சாலை ஆங்கங்கே பெயர்ந்துள்ளதால் மோட்டர்சைக்கிள்களில் செல்பவர்கள் விபத்துகுள் ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெயரளவுக்கு மட்டுமே சாலையை அமைத்துள்ளனர். கனரக வாகனங்கள் செல்லும் வகையில் தரமான சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பொதுமக்கள், வாணியம்பேட்டை மற்றும் பாலகிருஷ்ணபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick