25 Sep 2022 11:28 AM GMT
#17114
சிமெண்டு சிலாப் அமைக்கப்படுமா?
தாராபடவேடு
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
காட்பாடி தாராபடவேடு மாநகராட்சி அலுவலகம் எதிரே பழைய திருவலம் செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் மேற்பகுதியில் சிமெண்டு சிலாப் அமைக்கப்படாததால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு சிரமமாக உள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க இரும்புத் தடுப்பை வைத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் அந்தக் கால்வாயின் மேற்பகுதியில் சிமெண்டு சிலாப் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெயபாண்டியன், தாராபடவேடு.