Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 Sep 2022 4:24 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#18110

சுகாதாரமன்ற கழிவறை

மற்றவை

கலவை-வாழைப்பந்தல் சாலையில் கலவை சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யும் மக்களுக்கு உள்ளேயே கழிவறை கட்டப்பட்டுள்ளது. இந்தக் கழிவறை அசுத்தமாக உள்ளது. உள்ளே நுழைந்தால் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து அலுவலகத்தில் புகார் கொடுத்தும் சுத்தம் செய்யாமல் வைத்துள்ளனர். சுகாதாரமற்ற கழிவறையால் வெளியூரில் இருந்து பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவறையை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அன்பு, கலவை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 4:20 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#18109

சாலையை மறித்து நிறுத்தப்படும் வாகனங்கள்

சாலை

வாலாஜாபேட்டையின் பிரதான தெருக்களிலும், சாலையின் ஓரங்களிலும் இரு புறமும் 4 சக்கர தள்ளு வண்டிகள், பயணிகள் ஆட்டோக்கள், சரக்கு ஆட்டோக்கள், மினி லாரிகள் வரிசையாக நிறுத்தப்படுகின்றன. பொதுமக்கள் தட்டிக் கேட்டால் வாகன ஓட்டிகள் மிரட்டுகின்றனர். மக்களின் அதிருப்தியை போக்க வேண்டிய போலீசார், கண்ட இடங்களில் சாலையை மறித்து நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. -அழகர், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 3:02 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#18055

சாலைக்கு மேல் பொங்கும் குடிநீர்

சாலைக்கு மேல் பொங்கும் குடிநீர்தண்ணீர்

வேலூர் கோட்டையில் கோவில் அருகே உள்ள சுகாதார கழிப்பிடம் முன்பு புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், குடிநீர் குழாயில் ஏற்பட்ட பழுதை சரி செய்யாததால், தண்ணீர் தார்சாலையயை பொத்து கொண்டு பொங்கி வருகிறது. இதனால் சாலை விரைவில் பழுதடையும் நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கபீர்தாஸ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 2:59 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#18049

புகை மண்டலமாக மாறும் நகரம்

புகை மண்டலமாக மாறும் நகரம்மற்றவை

வேலூர் நகரில் பாலாற்றில் குப்பைகளை கொட்டி எரிப்பது வாடிக்கையாகி வருகிறது. அதேபோல் வேலூர் அருகே அலமேலுமங்காபுரம் பகுதியில் குப்பைகளை தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் புகை பரவி சுகாதார கேடு ஏற்படுவதுடன் பொதுமக்கள் மூச்சுத்திணறலாலும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வீரமணி, அலமேலுமங்காபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 2:54 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#18042

புதிய பஸ்நிலையத்தில் போதை ஆசாமிகள் அட்டகாசம்

புதிய பஸ்நிலையத்தில் போதை ஆசாமிகள் அட்டகாசம்மற்றவை

வேலூர் புதிய பஸ் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்த சில நாட்களிலேயே போதை ஆசாமிகள் மதுபானத்தை குடித்து விட்டு ஓய்வெடுக்கும் இடமாக மாற்றி விட்டனர். சென்னை செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தின் அருகே மதுபானம் குடித்து விட்டு ஏராளமான காலி பாட்டில்களை வீசி உள்ளனர். எனவே புதிய பஸ் நிலையத்தில் போதை ஆசாமிகள் செய்யும் அட்டகாசத்தை போலீசார் தடுக்க வேண்டும். -மோகன்ராஜ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 12:03 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#17969

கீழே கிடக்கும் மின் இணைப்பு கம்பியால் ஆபத்து

கீழே கிடக்கும் மின் இணைப்பு கம்பியால் ஆபத்துமின்சாரம்

வந்தவாசிைய அடுத்த சென்னாவரம் கிராமத்தில் இயங்கி கொண்டிருக்கும் சிறுவர் பூங்காவில் மின் இணைப்பு கம்பி உடைந்த நிலையில் தரையில் கிடக்கிறது. மழை நேரத்தில் அந்தக் கம்பியில் மின்சாரம் பாய்ந்தால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிேறன். -'ஆம்புலன்ஸ்' சுரேஷ், சென்னாவரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 11:47 AM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#17967

சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் சரி செய்யப்படுமா?

சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் சரி செய்யப்படுமா?சாலை

வந்தவாசி நகராட்சி பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் இணைப்புக்கேட்டு வந்த அனைவருக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்க சாலையின் நடுவே பள்ளம் தோண்டினார்கள். ஆனால் அந்தப் பள்ளத்தை இன்னும் சரி செய்யப்படவில்லை. அந்த வழியாக வாகனங்களில் செல்ல சிரமமாக உள்ளது. தோண்டி பள்ளத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மு.பத்மநாபன், தொழிலாளர் ஆய்வாளர் (ஓய்வு), வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 11:44 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#17966

நோயாளிகளுக்கு இருக்கை வசதி

நோயாளிகளுக்கு இருக்கை வசதிமற்றவை

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீரழிவு நோயாளிகளுக்கான மாத்திரைகள் வழங்கும் இடத்தில் நோயாளிகள் அமருவதற்கு போதிய இருக்கை வசதி அமைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும். மருத்துவத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -என்.சின்னதுரை, திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 11:42 AM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#17965

நூலகத்துக்கு புதிய கட்டிடம் தேவை

நூலகத்துக்கு புதிய கட்டிடம் தேவைமற்றவை

திருவண்ணாமலை மாவட்டம் நாயுடுமங்கலம் கிராமத்தில் நூலக கட்டிடம் உள்ளது. மழை பெய்தால் மழைநீர் உள்ளே கசிகிறது. இதனால் புத்தகங்கள் நனைந்து வீணாகிறது. நூலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். -சந்தோஷ்குமார், நாயுடுமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 10:27 AM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#17955

மின் விளக்கு வசதி

மின்சாரம்

திருப்பத்தூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் மின்விளக்குகள் ஏதும் இல்லாமல் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் இரவில் பணி முடித்து வரும் ஊழியர்கள் பெரும் அவதிப்படுகின்றனர். மின்விளக்கு வசதிகள் இருந்தும் அதனை பயன்படுத்தாமல் இருப்பதால் சாலையில் செல்பவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் இருளில் மூழ்கி கிடப்பதை பார்த்து வருத்தத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே இரவு நேரங்களில் நுழைவு வாயில் மின்விளக்குகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். -வெண்பிரணவ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 10:23 AM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#17954

பயணிகளுக்கு இடையூறு

பயணிகளுக்கு இடையூறுபோக்குவரத்து

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராம மெயின் ரோட்டில் புதிய பஸ் நிறுத்தம் முன்பு தேவையில்லாமல் ஆட்டோ, வேன்களை நிறுத்தி வைப்பதால் பயணிகளுக்கு இடையூறாக உள்ளது. ரோந்துப்பணியில் ஈடுபடும் போலீசார் அந்த வாகனங்களை பஸ் நிறுத்தம் முன்பு நிறுத்துவதை எச்சரிக்கை செய்ய வேண்டும். -அந்தோணிராஜ், தூசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 4:29 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#17951

பெயர்ந்து போன பேவர் பிளாக் ரோடு

பெயர்ந்து போன பேவர் பிளாக் ரோடுசாலை

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரக்கோணம் டவுன் ஹால் முதல் தெருவில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் ரோடு பெயர்ந்துள்ளது. இதனால் வயதானவர்கள், மோட்டார்சைக்கிளில் செல்பவர்களும் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே இதை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெரால்டு, அரக்கோணம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick