Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
30 Sep 2022 11:59 AM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#18174

கைக்கெட்டும் உயரத்தில் மின்கம்பிகள்

மின்சாரம்

வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி பகுதியில் தோல் கழிவுநீர் பொதுச் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இந்த நிலையம் அருகில் 5 அடி உயரத்தில் கைக்கு எட்டும் தூரத்தில் உயர் மின்னழுத்த கம்பிகள் தொங்குகின்றன. உயிர்சேதம் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் மின் கம்பிகளை சற்ற மேலே உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். -சரவணன், உதயேந்திரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Sep 2022 11:14 AM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#18168

குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்

குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்குப்பை

அரக்கோணம் சுவால்பேட்டை தாசில்தார் குறுக்கு தெருவில் உள்ள கால்வாய் பகுதியில் குப்பைகள் குவிந்து, கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி அந்தப் பகுதியில் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், அந்தப் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் புதர் மண்டி உள்ளது. இதுகுறித்து பல முறை நகராட்சி அலுவலர்களிடம் தெரிவித்தும் சரி செய்யாமல் அலட்சியமாக உள்ளனர். இனியாவது, சம்பந்தப்பட்ட அதிகாாிகள் உரிய நடவடிக்கை எடுத்து குவிந்து கிடக்கும் ேவண்டும். -பொதுமக்கள்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Sep 2022 11:07 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#18167

சாய்ந்த மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும்

சாய்ந்த மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும்மின்சாரம்

ஆரணி நகரில் 28-வது வார்டு பெரிய ஜெயின் தெருவில் மக்கள் அதிகம் நடமாடக்கூடிய பகுதி, மேலும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்லக்கூடிய பகுதியாகும். இந்தப் பகுதியில் மின் கம்பம் சாய்ந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளது. இந்தப் பகுதியில் தான் இன்னும் சில நாட்களில் புதிதாக வடிவமைக்கப்பட்ட சீனிவாச பெருமாள் கோவில் பெரிய மரத்தேர் தேரோட்ட விழா நடக்க உள்ள வீதியாகும். எனவே மின்வாரியத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாய்ந்த மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும். -ராகவன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Sep 2022 11:44 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#18166

சேதமான மின்கம்பம்

சேதமான மின்கம்பம்மின்சாரம்

பனப்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டு கிராமம் பெரிய தெருவில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள ஒரு மின் கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து சேதமடைந்துள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன், மின் வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும். -ராகவன், புதுப்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Sep 2022 11:01 AM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#18165

ஆபத்தான பஸ் பயணம்

ஆபத்தான பஸ் பயணம்போக்குவரத்து

வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பஸ்களின் படிகட்டுகளில் தொங்கி கொண்டு ஆபத்தான நிலையில் பயணம் செய்கிறார்கள். பள்ளி தொடங்கும் நேரம் மற்றும் மாலை வகுப்புகள் முடியும் நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்கினால் ஆபத்தான பயணம், கூட்ட நெரிசலை தவிர்க்கலாம். அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் காலை, மாலை நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகன், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Sep 2022 10:56 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#18164

குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவுநீர்

குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவுநீர்கழிவுநீர்

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது இளையாங்கண்ணி. இங்கு சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ெபாதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் தேங்கி நிற்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவா, தண்டராம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 5:58 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#18151

சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும்

போக்குவரத்து

வாணியம்பாடி, ஆலங்காயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சென்னை, பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு வேலைக்காக சென்றுள்ளனர். அவர்கள், பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு திரும்புவார்கள். அதன்படி வெளியூரில் இருக்கும் பலர் வருகிற தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு திரும்புவார்கள். எனவே தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை, பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மேற்கண்ட ஊர்களில் இருந்து வாணியம்பாடிக்கு சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும். -அருள்ராஜன், வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 5:12 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#18137

சாலையை சீர் செய்ய வேண்டும்

சாலை

ராணிப்பேட்டை நகராட்சி பிஞ்சி எல்.எப்.சி. சாலை குண்டும், குழியுமாக பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர்.சில சமயங்களில் கீழே விழுந்து விபத்துகளும் நடக்கின்றன. இந்தச் சாலையை சீர் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் -கே.ராமசாமி, ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 5:00 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#18136

குப்பைகளை அகற்றுவர்களா?

குப்பை

ஆம்பூர் பி.கஸ்பா பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமா? -ஜெகன், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 4:57 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#18135

தார் சாலை அமைக்க வேண்டும்

சாலை

திருப்பத்தூர் வடக்கு முத்தப்பன் ெதருவில் பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. அந்தப் பள்ளத்தில் மண் கொட்டப்பட்டு இன்னும் தார் போடப்படாமல் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -எஸ்.ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 4:54 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#18134

புதிதாக போடப்பட்ட தார் சாலை சேதம்

புதிதாக போடப்பட்ட தார் சாலை சேதம்சாலை

நாட்டறம்பள்ளி-வாணியம்பாடி செல்லும் நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி காவலர் குடியிருப்பு அருகே புதிதாக போடப்பட்ட தார் சாலை சேதம் அடைந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சேதமான தார் சாலையை சீர் செய்ய வேண்டும். -இல.குருசேவ், கவுன்சிலர், நாட்டறம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 4:27 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#18112

ஆபத்தான பள்ளம்

ஆபத்தான பள்ளம்சாலை

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அருகே வேலூருக்கு செல்லும் சர்வீஸ் சாலையில் பெரிய பள்ளம் ஒன்று உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து காயத்துடன் எழுந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையின் நடுவே உள்ள பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஹரிதாஸ்குப்தா, ரத்தினகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick