Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 Sep 2025 6:10 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#59345

சேதம் அடைந்த கால்வாய்

சேதம் அடைந்த கால்வாய்மற்றவை

வேலூர் சத்துவாச்சாரி மந்தைவெளியில் இருந்து பாலாற்றுக்கு செல்லும் பிரதான சாலையில், மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் மீது அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்புகள் உறுதி இழந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓட்டை விழுந்தது. ஆரம்ப நிலையில் சரிசெய்யப்படாத காரணத்தால், தற்போது கால்வாய் முழுவதும் அமைக்கப்பட்ட சிலாப்புகள் நொறுங்கி, அரை அடி ஆழத்திற்கு கீழே இறங்கி சேதம் அடைந்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுரேஷ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 11
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 6:09 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#59344

கண்காணிப்பு கேமராக்கள் சேதம்

கண்காணிப்பு கேமராக்கள் சேதம்மற்றவை

வேலூர் சத்துவாச்சாரி மந்தைவெளி அருகில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. பள்ளியைச் சுற்றிலும் சுவர்களிலும், கம்பம் அமைத்தும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. யாரோ மர்மநபர்கள் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தி, மேல் நோக்கி திருப்பி வைத்துள்ளனர். பள்ளி வளாகத்தில் நடக்கும் காட்சிகள் கேமராக்களில் பதிவாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்களை சரி செய்ய கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமச்சந்திரன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 5:39 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#59343

மருத்துவத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி, பூட்டுத்தாக்கு பகுதிகளில் உள்ள சில மருந்துக்கடைகளில் நோயாளிகளுக்கு ஊசி போடப்படுகிறது. மேலும் டாக்டர்கள் சீட்டு இல்லாமல் மாத்திரை, மருந்து விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மருத்துவ, சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரமேஷ், பூட்டுத்தாக்கு.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 5:32 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#59340

மின்கம்பம் சேதம்

மின்சாரம்

காவேரிப்பாக்கம் ஒன்றியம் புதுப்பட்டு கிராமத்தில் ஊராட்சி தொடக்கப்பள்ளி அருகில் மின்கம்பம் சேதமடைந்துள்ளது. பள்ளிக்கு வரும் சிறுவர்-சிறுமிகளுக்கு அச்சமாக உள்ளது. மழைக்காலம் வரவிருப்பதால் மின்கம்பத்தை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பழனிவேலன், புதுப்பட்டு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 5:30 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#59339

மணிக்கூண்டு கெடிகாரங்கள் சரிபார்க்கப்படுமா?

மற்றவை

வாலாஜா பஸ் நிலைய முகப்பில் காந்தி சதுக்கம் பகுதியில் மணிக்கூண்டு பல ஆண்டுகளாக உள்ளது. இதில் உள்ள பெரிய அளவிலான கெடிகாரங்கள் பழுதடைந்துள்ளன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மணிக்கூண்டு கெடிகாரங்களை சரி செய்ய வேண்டும். -விஸ்வநாதன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 5:28 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#59338

பள்ளி கட்டிடங்கள் சேதம்

மற்றவை

வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டப்பட்டு 138 ஆண்டுகள் ஆகின்றன. அந்தப் பள்ளி 1887-ம் ஆண்டில் நகராட்சியால் தொடங்கப்பட்டதாகும். பள்ளிக்கு 10 ஏக்கரில் விளையாட்டு மைதானம் உள்ளது. பள்ளி கட்டிடத்தின் பின்பக்கம் பெரும் பகுதி சேதம் அடைந்துள்ளது. சேதம் அடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -சம்பந்தம், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 5:59 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#59337

குடிநீர் தொட்டி பராமரிக்கப்படுமா?

குடிநீர் தொட்டி பராமரிக்கப்படுமா?தண்ணீர்

திருப்பத்தூர் அவ்வைநகர் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியை அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்தக் குடிநீர் தொட்டியின் குழாய்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் பிடிக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அந்தக் குடிநீர் தொட்டியைப் பராமரித்து, குடிநீர் தொட்டியில் குழாய்கள் பொருத்த வேண்டும். -சோமசுந்தரம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 6:00 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#59336

குடிநீர் தொட்டி பழுது

குடிநீர் தொட்டி பழுதுதண்ணீர்

வாணியம்பாடியை அடுத்த அரப்பாண்டகுப்பம் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டு, ஊராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்தக் குடிநீர் தொட்டி தற்போது பழுதடைந்துள்ளது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து புதிய நீர்த்தேக்கத் தொட்டி கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். -பழனி, அரப்பாண்டகுப்பம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 5:56 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#59335

சேதம் அடைந்த சுகாதார வளாகம்

சேதம் அடைந்த சுகாதார வளாகம்மற்றவை

வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் பேரூராட்சியில் உள்ள புலவர்பள்ளி செல்லும் ஏரி அருகே 2015-2016-ம் ஆண்டு ரூ.7 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. அது, இதுவரை பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. அதில் உள்ள கதவுகள், கழிப்பறைகள் சிதிலமடைந்து, புதர்வளர்ந்து காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். -சபரிநாதன், ஆலங்காயம்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 5:57 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#59334

பட்டுப்போன மரம் அகற்றப்படுமா?

பட்டுப்போன மரம் அகற்றப்படுமா?மற்றவை

திருப்பத்தூர் ஈத்கா சாலையின் ஓரம் மரம் ஒன்று பட்டுப்போன நிலையில் உள்ளது. இந்த மரம் எப்போது வேண்டுமானாலும் கீழே சாய்ந்து விழ வாய்ப்பு உள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன் பட்டுப்போன மரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மாதேஸ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 5:20 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#59333

வழிகாட்டி பலகை வைக்க வேண்டும்

மற்றவை

கண்ணமங்கலம் பேரூராட்சியில் புதுப்பேட்டை பகுதியில் படவேடு செல்லும் சாலை பிரிகிறது. ஆந்திரா, வேலூர் மார்க்கமாக வரும் பக்தர்கள் கண்ணமங்கலம் வழியாக செல்கிறார்கள். ஆகையால், கண்ணமங்கலம் புதுப்பேட்டையில் படவேடு பிரிவு சாலையில் ரேணுகாம்பாள் கோவிலுக்கு செல்லும் வழிகாட்டி பலகையை பெரிய அளவில் வைத்்தால் ஆந்்திர மாநில பக்தர்்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். -கிருஷ்ணசாமி, கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 6:03 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#59330

பூட்டிேய கிடக்கும் சமுதாயக்கூடம்

பூட்டிேய கிடக்கும் சமுதாயக்கூடம்மற்றவை

போளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குண்ணத்தூர் ஊராட்சி யில் 2 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். அங்கு முருகன் கோவில் உள்ளது. கோவிலில் திருமணம் நடந்தால் திருமண வீட்டார் பயன்படுத்திக் கொள்ள அருகில் ரூ.25 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. ஆனால், அது பூட்டியே கிடக்கிறது. அதை, புனரமைத்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமர், போளூர்.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick