Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
12 Oct 2022 4:44 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#19361

குரங்குகள் தொல்லை

மற்றவை

கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் செல்போன் டவர்கள் உள்ளன. இந்த செல்போன் டவர்களில் ஏராளமான குரங்குகள் இரவு நேரங்களில் தங்கி வருகின்றன. விடியும்போது குரங்குகள் அனைத்தும் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்து செல்கின்றன. அப்போது பொதுமக்கள் அல்லது சிறுவர், சிறுமியர் யாரேனும் பை கொண்டு சென்றால், தின்பண்டங்களுக்காக வழிமடக்கி பிடுங்குகின்றன. பள்ளி மாணவ- மாணவிகள் மதிய உணவு கொண்டு வந்தால் அதையும் வழிமடக்கி பிடுங்கி தின்கின்றன. கண்ணமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் குரங்குகளை பிடித்து காட்டில் விட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 4:45 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#19360

குளத்தை தூர்வார வேண்டும்

குளத்தை தூர்வார வேண்டும்தண்ணீர்

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சதாகுப்பம் கிராமம். அங்குள்ள கோவில் அருகில் குளம் உள்ளது. ஒரு காலத்தில் அந்தக் குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வந்தனர். கிராமத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர அந்தக் குளமும் ஒரு காரணமாக இருந்து வந்தது. எனவே அந்தக் குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும். -சிவா, சதாகுப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 11:52 AM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#19358

சேறும் சகதியுமாக மாறிய சாலை

சேறும் சகதியுமாக மாறிய சாலைசாலை

கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு பகுதியில் ரேணுகாம்பாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு செல்லும் சாலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் சேறும் சகதியுமாக மாறிவிட்டது. எனவே இச்சாலையில் உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் கால்வாய் அமைத்துக் கொடுத்தால் மழைநீர் சாலையில் தேங்காமல் விரைந்து செல்லும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சத்தியசீலன், படவேடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 4:49 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#19355

ஆண்டு கணக்கில் தெரு பள்ளம்

சாலை

வேலூர் சத்துவாச்சாரி மந்தை வெளியில் இருந்து பாலாற்றுக்கு செல்லும் பாதை ஆண்டு கணக்கில் குண்டும் குழியுமாக உள்ளது. அவசர தேவைகளுக்கு ஆட்டோக்களில் கூட செல்ல முடியாத அளவுக்கு பள்ளங்கள் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி பணியில் இந்த தெருவை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-ராஜேஷ், சத்துவாச்சாரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 11:36 AM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#19354

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

திருப்பத்தூர் டவுன் சிவராஜ்பேட்டை சத்தியாநகரில் 2 கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்தப் பகுதி சாலை சேறும் சகதியுமாக உள்ளது. காலை தேவாலயங்களுக்கு வரும் மக்கள் மீது வாகனங்கள் செல்லும்போது கழிவுநீர் வீசுகிறது. சாலைைய சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும். -குப்புசாமி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 11:31 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#19352

மழைநீர் தேங்குவதால் அவதி

கழிவுநீர்

வாலாஜாபேட்டை பஸ் நிலையம் எதிரில் பழைய தாலுகா அலுவலக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் மழைப் பெய்யும்போதெல்லாம் மழைநீரும், கழிவுநீரும் சேர்ந்து குட்டைபோல் தேங்கி கிடக்கிறது. அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். உடனடியாக தாலுகா அலுவலக வளாகத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமார், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 4:46 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#19349

சிமெண்டு பாதை சரி செய்யப்படுமா?

சிமெண்டு பாதை சரி செய்யப்படுமா?சாலை

அரக்கோணம் உதவி கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு பகுதியில் இருந்து அலுவலகம் வரை உள்ள பாதையில் சிமெண்டு பெயர்ந்து ஜல்லிக்கற்கள் சிதறி கரடுமுரடாக கிடக்கிறது. அந்த வழியாக அலுவலகத்துக்கு நடந்து வரும் மக்களின் கால்களை கற்கள் பதம் பார்க்கின்றன. ஒருசிலர் இடறி கீழே விழுந்து எழுந்து செல்கின்றனர். ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சிமெண்டு பாதையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -திலக்குமார், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 11:09 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#19343

பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகம்

மற்றவை

சோளிங்கர் பெரியமலையில் யோகநரசிம்மர் கோவிலுக்கும், யோக ஆஞ்சநேயர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பெரியமலை அடிவாரத்தில் கோவில் அருகில் பக்தர்கள் பயன்காட்டுக்காக சுகாதாரம் வளாகம் கட்டப்பட்டு பக்தர்கள் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது சுகாதார வளாகம் மூடப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் அவதிப்படுகின்றனர். பக்தர்களின் நலன் கருதி சுகாதார வளாகம் திறக்கப்படுமா? -பார்த்தசாரதி, கொண்டபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 11:05 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#19342

சுற்றுச்சுவர் கட்டப்படுமா?

சுற்றுச்சுவர் கட்டப்படுமா?மற்றவை

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது பறையம்பட்டு கிராமம். இங்குள்ள விவசாய நிலம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளிக்கூடம் கிராமத்தில் இருந்து ஒதுக்குப்புறமாக உள்ளது. பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -விஜய், பறையம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Oct 2022 12:43 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#19097

பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

மற்றவை

வேலூர் சத்துவாச்சாரி ஆஞ்சநேயர் கோவில் அருகே இருந்த பயணிகள் நிழற்குடை கடந்த சில நாட்களுக்கு முன்பு பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. இதற்கு அந்தப் பகுதியில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தின் முகப்பு தோற்றத்தை பயணிகள் நிழற்குடை மறைக்கிறது. அதனால் அவை அங்கிருந்து அகற்றப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு பல்வேறு விஷயங்களுக்காக வரும் மக்கள் புதிய, பழைய பஸ்நிலையம் செல்ல வேண்டும் என்றால் ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்து தான் பஸ் ஏற வேண்டும். தற்போது நிழற்குடை இல்லாததால்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Oct 2022 12:34 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#19096

தினத்தந்திக்கு நன்றி

மற்றவை

வேலூர் மாநகராட்சி வார்டு எண்1-ல் செங்குட்டை பகுதியில் கட்டப்பட்ட நூலக கட்டிடம் திறக்கப்படுமா? என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. மேலும் அந்த நூலக கட்டிட வளாகத்தில் குப்பை வண்டிகளும் நிறுத்தப்பட்டு இருந்தது பற்றியும் குறிப்பிடப்பட்டது. அந்த செய்தி எதிரொலியால் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பை வண்டிகளை அகற்றினர். மேலும் நூலகமும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு திருவள்ளுவர் நூலகம் என்ற பெயரில் திருக்குறள் இயக்கம் சார்பில் இயங்கி வருகிறது. நடவடிக்கை எடுத்த...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Oct 2022 12:08 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#19095

கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும்

கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும்கழிவுநீர்

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட ராமகிருஷ்ணா ஜெயின் பள்ளி அருகில் பாரதி ரோடும், மருத்துவர் தெருவும் சந்திக்கும் இடத்தில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்தக் கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து கழிவுநீர் அனைத்தும் சாலையில் ஆறாக ஓடி தெருக்களில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறி வருகிறது. எனவே கழிவுநீர் கால்வாயை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும். -தட்சிணாமூர்த்தி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick