Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
9 Oct 2022 11:58 AM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#19094

நாய்கள் தொல்லை

மற்றவை

ஆம்பூர் ஏ.கஸ்பா ரோடு புது தெரு அருகே நாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இரவு நேரங்களில் அந்த வழியாக செல்பவர்களை பின்தொடர்ந்து துரத்தி கடிக்க பாய்கிறது. நகராட்சி நிர்வாகம் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். -கணேஷ், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Oct 2022 11:56 AM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#19093

தினத்தந்திக்கு நன்றி

மின்சாரம்

ஆம்பூர் பஜார் பகுதியில் இருந்து தேவலாபுரம் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள மசூதி அருகே உயர் கோபுர மின் விளக்கு எரியவில்லை என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வந்தது. அதன் எதிரொலியால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயர் கோபுர மின் விளக்கை சரி செய்து எரிய விட்டனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி. -சையத், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Oct 2022 11:52 AM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#19092

பஸ் நிலையம் வழியாக பஸ்கள் வந்து செல்ல வேண்டும்

போக்குவரத்து

நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையால் வெளியூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் வந்து செல்வதில்லை. இதனால் வெளியூர் செல்லும் பொது மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் நின்று வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. சில நேரங்களில் விபத்துகள் நடைபெறுவது உண்டு. இதனால் வெளியூர் செல்லும் பொது மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து வெளியூர் செல்லும் அனைத்துப் பஸ்களும் நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் வழியாக...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Oct 2022 11:48 AM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#19091

விளையாட்டு மைதான கட்டிட கதவு சரி செய்யப்படுமா?

விளையாட்டு மைதான கட்டிட கதவு சரி செய்யப்படுமா?மற்றவை

காட்பாடி விளையாட்டு மைதானம் புதிதாகக் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு பராமரிப்பு பணிகள் நடக்காததால் விளையாட்டு மைதானத்தில் அங்காங்கே புற்களும் கட்டிடத்தில் உள்ள ஒரு சில கதவுகள் சேதம் அடைந்தும் காணப்படுகிறது. பராமரிப்புப் பணிக்கு ஆட்கள் இல்லாததால் விளையாட்டு மைதானம் பாழடைந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விளையாட்டு மைதானத்தைப் பராமரிக்கவும் சேதமடைந்து வரும் கதவுகளை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். -திருமலைராஜன், திருநகர், காட்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Oct 2022 11:45 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#19090

குப்பைகள் கொட்டுவதால் அடைப்பு

குப்பைகள் கொட்டுவதால் அடைப்புகுப்பை

வேலூர் சத்துவாச்சாரி காந்தி நகர் பைபாஸ் மேம்பாலம் அருகே கால்வாய் ஓரம் வியாபாரிகளும், பொதுமக்களும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் பைபாஸ் சாலை ஓரம் உள்ள கால்வாய் முழுவதும் அடைப்பு ஏற்பட்டுள்ளது. குப்பைகள் கொட்டுவதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சபரிவாசன், சத்துவாச்சாரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Oct 2022 11:43 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#19089

சாலை பள்ளம் சரி செய்ய வேண்டும்

சாலை பள்ளம் சரி செய்ய வேண்டும்சாலை

வேலூர் சலவன்பேட்டையில் இருந்து குட்டைமேடு செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாய் ஓரத்தில் அரிப்பு ஏற்பட்டு சாலையில் பள்ளம் தோன்றி உள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் பள்ளத்தில் விழுந்து செல்கின்றனர். மேலும் நடந்து செல்லும் பொதுமக்களும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலை பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சொக்கலிங்கம், சலவன்பேட்டை வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Oct 2022 11:27 AM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#19087

தூர்வாரிய கால்வாய் மண்ணை அகற்ற வேண்டும்

கழிவுநீர்

அரக்கோணத்தில் பல இடங்களில் கழிவுநீர் கால்வாயை தூர்வாரி எடுத்த மண்ணை அங்கேயே கொட்டி செல்கிறார்கள். அந்த மண் காய்ந்ததும் உடனே அகற்ற வேண்டும். ஆனால் அகற்றாமல் அப்படியே போட்டுள்ளனர். தற்போது மழை பெய்து வருகிறது. மழையில் மண் கரைந்து மீண்டும் கால்வாய்க்குள் விழுந்து தூர்ந்துபோகிறது. இதுதொடர்பாக நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணதாசன், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Oct 2022 11:24 AM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#19086

எரியாத மின்விளக்கு

மின்சாரம்

கவவை பேரூராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு கலவைபுத்தூர் செல்லும் சாலையில் குட்டைப் புறம்போக்கில் உள்ள கம்பத்தில் மின்கம்பம் பல நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் இருளில் அவதிப்படுகின்றனர். உடனடியாக கம்பத்தில் உள்ள மின்விளக்கை எரியவிட வேண்டும். -சலீம், கலவை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Oct 2022 11:20 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#19084

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பை

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம் எஸ்.கொளத்தூர் கிராமத்தில் சாலையோரம் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். அங்கு ஒரு மின்கம்பம் உள்ளது. அந்தக் கம்பத்தை சுற்றிலும் குப்பைகளாக உள்ளது. சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. குப்பைகளை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பொதுமக்கள், எஸ்.கொளத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Oct 2022 11:17 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#19083

பஸ் பயணிகளுக்கு இருக்கை வசதி

மற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பஸ் நிலையத்தில் பயணிகள் அமருவதற்கு போதி இருக்கை வசதிகள் இல்லை. ஏற்கனவே அங்குள்ள இருக்கைகள் சேதம் அடைந்துள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் பயணிக்கு இருக்கை வசதியை செய்துகொடுக்க வேண்டும். -அஜித்குமார், நெமிலி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Oct 2022 11:07 AM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#19077

குடிநீர் வருவது இல்லை

தண்ணீர்

திருப்பத்தூர் டவுன் 36-வது வார்டு திருமால் நகர் உள்ளச்சாரி வட்டம் குடியரசு நகர் பகுதியில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இதனால் எங்கள் பகுதிக்கு குடிநீர் வருவதில்லை. எனவே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை எங்கள் வார்டு பகுதிக்கு விரிவுப்படுத்த வேண்டும். -திலீப், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Oct 2022 10:55 AM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#19074

நாய்கள் தொல்லை

நாய்கள் தொல்லைமற்றவை

வந்தவாசியில் தெரு நாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இதனால் நடந்து செல்லும் பொதுமக்களும், வாகனங்களில் செல்வோரும் சிரமப்படுகின்றனர். வந்தவாசி தேரடி, சன்னதி தெரு, புதுத்தெரு, மார்க்கெட் பகுதி ஆகிய பகுதிகளில் தெரு நாய்கள் அதிகமாகச் சுற்றித்திரிவதால், குழந்தைகள், முதியோர் அச்சப்படுகின்றனர். தெருவில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து காட்டில் விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகன், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick