Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
9 Oct 2022 10:44 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#19073

குப்பைகளுக்கு தீ வைக்கும் அவலம்

குப்பை

ஆரணி கொசப்பாளையம் அப்பர் தெரு முகப்பிலும், அம்பேத்கர் நகர் செல்லும் வழியிலும் அதிகளவில் குப்பைகள் தேங்கி கிடப்பதாலும் நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை அகற்றாததாலும் குப்பைகள் காற்றில் பறந்து செல்கிறது. அந்தக் குப்பைகளை தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். நகராட்சி ஊழியர்கள் உடனடியாக குப்பைகளை அகற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.-ராகவன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Oct 2022 10:36 AM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#19071

சங்கு ஒலிக்குமா?

மற்றவை

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் மல்லவாடி கிராமத்தில் உள்ள சங்கு காலை 9 மணி, மதியம் 1 மணி, மாலை 5.30 மணிக்கு ஒலித்தது. இதனால் வேலைக்கு செல்வோர் பயன் அடைந்தனர். அந்தச் சங்கு தற்போது ஒலிக்காமல் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பொதுமக்கள், மல்லவாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2022 4:34 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#18992

மின்விளக்கு எரியவில்லை

மின்சாரம்

ராணிப்பேட்டை மாவட்டம் வன்னிவேடு ஊராட்சிக்கு உட்பட்ட ரபிக் நகர் பாலமுருகன் தெருவில் சுமார் 3 மாதங்களாக மின் விளக்கு ஏரியவில்லை. இதனால் அப்பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து எரியாத மின் விளக்கை எரியவிட வேண்டும். -தமிழ்வாணன், வன்னிவேடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2022 2:30 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#18896

சாலையில் பள்ளம்

சாலையில் பள்ளம்சாலை

ஜோலார்பேட்டை சக்கரகுப்பம் அருகே ஊசி நாட்டான் வட்டம் செல்லும் சாலையின் நடுவே திடீரெனப் பள்ளம் தோன்றியது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த வழியாகச் செல்லும்போது மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் திடீர் பள்ளத்தால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்ய வேண்டும். -பி.மணிகண்டன், சந்தைக்கோடியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2022 2:20 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#18889

குப்பைகளை அகற்றுவார்களா?

குப்பைகளை அகற்றுவார்களா?குப்பை

அரக்கோணம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள அம்மா உணவகம் பகுதியில் குப்பைகள் குவிந்தும் கழிவு நீர் தேங்கியும் உள்ளது. இதனால் உணவகம் சுற்றிலும் கொசுக்கள் உற்பத்தியாக நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் அந்த பகுதியை சுத்தபடுத்த வேண்டும். - ராம்குமார், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2022 2:16 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#18877

பன்றிகள் தொல்லை

மற்றவை

ஏலகிரிமலை அத்தனாவூர் பகுதிகளில் பன்றிகள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. இதனால் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறாக உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. ஊராட்சி சார்பாக சேகரிக்கப்படும் குப்பைகளை கிளறி விடுகிறது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அத்தனாவூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதி அருகில் பன்றி இறந்து கிடக்கிறது. அதை, அகற்றாமல் வைத்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சோமசேகர், அத்தனாவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2022 2:11 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#18869

சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

சாலை

ராணிப்பேட்டையில் இருந்து சிப்காட் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் பலர் சாலையை ஆக்கிரமித்து கடைகளை வைத்துள்ளனர். இதனால் சாலை குறுகலாகி வாகன நெரிசல் ஏற்படுகிறது, அடிக்கடி விபத்துக்களும் நடக்கிறது. நெடுஞ்சாலைத்துறை, போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். -கே.ராமசாமி, ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2022 12:51 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#18846

கோட்டை பூங்காவில் குவியும் குப்பைகள்

கோட்டை பூங்காவில் குவியும் குப்பைகள்குப்பை

வேலூர் கோட்டையை சுற்றி பார்க்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் மாலை பொழுதில் கோட்டை முன்பு உள்ள பூங்காவில் அமர்ந்து பொழுதுப் போக்கின்றனர். இந்த நிலையில் பொதுமக்கள் ஒரு சிலர் அந்தப் பகுதியில் விற்பனை செய்கின்ற பொருட்களை வாங்கி சாப்பிட்டதும் காலியான பிளாஸ்டிக் பொருட்களை அப்படியே வீசி செல்கின்றனர். இதனால் கோட்டை பூங்கா முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளாகவே காட்சியளிக்கிறது. மேலும் அங்குள்ள ஊழியர்களுக்கு பூங்கா பராமரிப்பின் போது சிரமம் ஏற்படுகிறது. எனவே...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2022 12:43 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#18838

தொலைப்பேசியை சரி செய்வார்களா?

மற்றவை

வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் உள்ள தொலைப்பேசி ஒரு மாத காலமாக வேலை செய்யவில்லை. இதனால் சாதாரண பாமர மக்கள் யாரும் அதனை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் அரசு துறை அதிகாரிகள் எந்தவித அரசு பணியையும் சம்பந்தப்பட்ட தொலைபேசி மூலம் வெளியில் தொடர்பு கொள்ளவும், அழைப்பினை பெறவும் முடியாத நிலையில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட டெலிபோன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இணைப்பு அளிக்க முன்வர வேண்டும். -அரசு, வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2022 12:38 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#18831

நாய்கள் தொல்லை

மற்றவை

ஆம்பூர் கஸ்பா ரோடில் உள்ள ரேணுகாம்பாள் கோயில் அருகே நாய்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்களை பின் தொடர்ந்து கடிக்க முயல்கிறது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நாய்களை பிடித்து செல்ல வேண்டும். -பாபு, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2022 12:35 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#18830

நடைபாதையில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்

நடைபாதையில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்குப்பை

வேலூர் கிருபானந்தவாரியார் சாலை லாங்குபஜாரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நடைபாதையில் தடுப்புக் கம்பிகள் பதிக்கும் பணி நடைபெறவில்லை. மேலும் பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதையில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் அளவுக்கு அதிகமாக குவிந்து கிடக்கிறது. இதனால் அவ்வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாததால் சாலையில் நடக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடைபாதையில் தடுப்பு கம்பிகள் பதித்து அங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2022 12:18 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#18827

ரோட்டில் தேங்கும் கழிவுநீர்

ரோட்டில் தேங்கும் கழிவுநீர்கழிவுநீர்

வேலூரை அடுத்த ரங்காபுரம் பஸ் நிலையம் அருகில் செங்காநத்தம் செல்லும் வழியில் கழிவுநீர் ரோட்டில் தேங்கி உள்ளது. மேலும் ரோடும் சேதம் அடைந்துள்ளது. வாகனங்களில் செல்வோர் விழுந்து எழும் அவலம் நடக்கிறது. மேற்கண்ட பிரச்சினையை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அருண்குமார், ரங்காபுரம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick